Published:Updated:

ராணுவமும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுது!

இந்திய ராணுவ வாகனம்
பிரீமியம் ஸ்டோரி
இந்திய ராணுவ வாகனம்

நாடு முழுவதும் உள்ள `பீஸ் ஸ்டேஷன்’களில் செயல்படுத்தப்படும் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறது இந்திய ராணுவம்.

ராணுவமும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுது!

நாடு முழுவதும் உள்ள `பீஸ் ஸ்டேஷன்’களில் செயல்படுத்தப்படும் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறது இந்திய ராணுவம்.

Published:Updated:
இந்திய ராணுவ வாகனம்
பிரீமியம் ஸ்டோரி
இந்திய ராணுவ வாகனம்

சாதாரண கனரக வாகனங்களால் வெளிப்படும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அரசு மட்டுமில்லை; ராணுவமும் இப்போது களமிறங்கி விட்டது. நாடு முழுவதும் உள்ள `பீஸ் ஸ்டேஷன்’களில் செயல்படுத்தப்படும் வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றியமைக்க முடிவு செய்திருக்கிறது இந்திய ராணுவம். பீஸ் ஸ்டேஷன் என்பது, எல்லைப் பகுதியில் இல்லாமல், வீரர்கள் பயிற்சி பெறும் ஒரு பயிற்சிக் கூடம். இங்கேதான் போக்குவரத்துக்காக எலெக்ட்ரிக் வாகனங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது ராணுவம். ஏப்ரல் 18 முதல் 22 வரை ஜெனரல் எம்.எம்.நரவனே தலைமையில் நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாட்டில் இதைப் பற்றி விவாதித்திருக்கிறார்கள்.

இப்போதைக்கு ராணுவத் தளவாடங்களில்… ஆயுத ட்ரக்குகள் போன்றவற்றில் இல்லாமல், முதற்கட்டமாக ‘பீஸ் ஸ்டேஷன்களில்’ மட்டும் இந்த எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது இந்திய ராணுவம். பீஸ் ஸ்டேஷன் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல், சில கடினமான நிலப்பரப்புகளையும், சீதோஷ்ண நிலையையும் தாங்கும்படி கொஞ்சம் ரஃப் அண்ட் டஃப் ஆகவே இந்த கார்கள் வடிவமைக்கப்படுமாம். குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளில் செயல்படுவதற்குத் தகுதியான வாகனங்களாக இதைத் தயாரிக்க இருக்கிறார்கள். எல்லைகளைத் தவிர, நாடு முழுவதும் உள்ள 62 கன்டோன்மென்ட்களிலும், 237 ராணுவ நிலையங்களிலும்கூட இந்தப் பசுமைத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ராணுவமும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுது!

மேலும் இ-வாகனங்களுடனான முக்கியச் சவால்களாக – சார்ஜிங் உள்கட்டமைப்பு கிடைப்பது, ரீசார்ஜிங்கான நேரச்செலவு மற்றும் வண்டியின் பராமரிப்புச் செலவு போன்றவற்றை முதலில் பீஸ் ஸ்டேஷன்களில் அறிமுகப்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

இந்தியா போன்ற நாடுகளில் நிலக்கரி போன்ற புதை படிவ எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி வண்டிகள் இயங்குவதால், மின் வாகனங்கள் உண்மையில் கார்பன் உமிழ்வைக் குறைக்கின்றனவா… அதிகப்படுத்துகின்றனவா என்பது குறித்த உலகளாவிய விவாதம் நிச்சயமாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்தத் தொடக்கத்தை உருவாக்க முன்வந்திருக்கிறது இந்திய ராணுவம்.

இந்த நோக்கத்திற்காக, ராணுவ நலப் போக்குவரத்துச் சங்கம் ஏற்கனவே 15–க்கும் மேற்பட்ட மின்-வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் 10 வாகனங்களை டெல்லியில் பணியாளர்களின் போக்குவரத்துக்காக பொதுத்துறை எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் (EESL) குத்தகைக்கு எடுத்துள்ளது.

மூத்த அதிகாரி ஒருவர் பேசியபோது, "எதிர்காலத்தில் டெல்லியில் உள்ள AWT (Air Weapons Team) சொசைட்டியில் குறைந்தது 25% மின் வாகனங்களைப் பராமரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. இப்போதே இராணுவத் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவின் இலகு ரக வாகனக் கடற்படையில் சுமார் 40% ஏற்கெனவே ஹைப்ரிட் மின்சார வாகனங்கள் இயங்கி வருகின்றன!” என்று கூறியுள்ளார்.

12 லட்சம் பேர் இருக்கும் இந்திய ராணுவத்தில், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வரவேற்கத்தக்க விஷயமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism