Published:Updated:

Plastic to Petrol: 1 லிட்டருக்கு 58 கி.மீ மைலேஜ்; திண்டுக்கல் கார்த்திக்கின் சூப்பர் கண்டுபிடிப்பு!

பெற்றோருடன் கார்த்திக்

ஒரு கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் மூலம் 300 மில்லி லிட்டர் சிந்தட்டிக் பெட்ரோல் கிடைப்பதாகவும், இதில் 10 சதவிகிதம் அப்சலூட்லி ஆல்கஹாலைச் சேர்த்தால் வாகனத்தின் இன்ஜின் பாதிப்பு ஏற்படாமல், லிட்டருக்கு 58 கிலோமீட்டர் வரை இருசக்கர வாகனம் இயங்கும் என்றும் சொல்கிறார், கார்த்திக்.

Plastic to Petrol: 1 லிட்டருக்கு 58 கி.மீ மைலேஜ்; திண்டுக்கல் கார்த்திக்கின் சூப்பர் கண்டுபிடிப்பு!

ஒரு கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் மூலம் 300 மில்லி லிட்டர் சிந்தட்டிக் பெட்ரோல் கிடைப்பதாகவும், இதில் 10 சதவிகிதம் அப்சலூட்லி ஆல்கஹாலைச் சேர்த்தால் வாகனத்தின் இன்ஜின் பாதிப்பு ஏற்படாமல், லிட்டருக்கு 58 கிலோமீட்டர் வரை இருசக்கர வாகனம் இயங்கும் என்றும் சொல்கிறார், கார்த்திக்.

Published:Updated:
பெற்றோருடன் கார்த்திக்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வைகுந்தம் மனைவி தேவி. செங்கல் சூளையில் கூலி வேலை பார்க்கும் இவர்களது மகன் கார்த்திக்(22). பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் வேதியியல் பிரிவில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ப்ளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

சிந்தட்டிக் பெட்ரோல்
சிந்தட்டிக் பெட்ரோல்

ஆய்வின் நிலை குறித்து அவரிடம் பேசினோம். ``கடந்த ஆண்டு எனது பேராசிரியர் மணிமேகலை ப்ளாஸ்டிக், பெட்ரோல் குறித்துப் பாடம் நடத்தினார். அப்போது முதல் ப்ளாஸ்டிக் மற்றும் பெட்ரோல் குறித்து ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன். இதையடுத்து ப்ளாஸ்டிக்கில் இருந்து வாகனத்திற்கு எவ்விதப் பிரச்னையும் ஏற்படாதவாறு பெட்ரோல் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகம் முழுவதும் ப்ளாஸ்டிக் கழிவுகளால் இயற்கைப் பேரிடர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆண்டொன்றுக்கு 360 லட்சம் டன் ப்ளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இவற்றில் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 37 லட்சம் டன் ப்ளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. இதில் 8.7 சதவிகித ப்ளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள ப்ளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் பூமிக்குள் சென்று இயற்கை இடர்பாடுகளை உருவாக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இவ்வாறு வெளியேற்றப்படும் ப்ளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி வாகனத்திற்கான எரிபொருள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.

ஆய்வில் கார்த்திக்
ஆய்வில் கார்த்திக்

கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்துக் கொண்ட முயற்சியின் மூலம், தற்போது ப்ளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் எடுக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது. ப்ளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஒரே தரத்தில் உள்ள ப்ளாஸ்டிக் கவர்களை மட்டும் பிரித்து, அவற்றின் மூலம் பெட்ரோல் தயாரித்துள்ளேன். இதன்படி ஒரு கிலோ அளவுள்ள பிளாஸ்டிக் மூலம் 300 மில்லி லிட்டர் சிந்தட்டிக் பெட்ரோல் கிடைக்கிறது. இதில் 10 சதவிகிதம் அப்சலூட்லி ஆல்கஹாலைச் சேர்த்தால் வாகனத்தின் இன்ஜின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். ஒரு லிட்டருக்கு 58 கிலோமீட்டர் வரை இருசக்கர வாகனம் இயங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதை பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது, ப்ளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வரும் எரிவாயுவை சமையலுக்கும், ப்ளாஸ்டிக் குப்பைகளை எரித்து அதன் மூலம் இறுதியாகக் கிடைக்கும் மட்டு எனப்படும் கழிவுகளை சாலை அமைப்பதற்கும், கட்டிடங்களுக்கு கான்கிரீட் போடுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பரிசோதனை
பரிசோதனை

தற்போதைய பெட்ரோலின் விலையைவிட குறைவான விலைக்கு சிந்தட்டிக் பெட்ரோலை விற்பனை செய்ய முடியும். ப்ளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் இதற்கு முன்னர் சிலர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் கண்டுபிடிப்புகளில் தயாரிக்கப்பட்ட பெராலிஸிஸ் பெட்ரோல், இன்ஜின்களைப் பழுதாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால், தற்போது இந்த முயற்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிந்தட்டிக் பெட்ரோல் வாகன இன்ஜினை எவ்விதத்திலும் பாதிக்காது. மேலும் அனைத்து ப்ளாஸ்டிக் கழிவுகளையும் ஒன்றாகக் கலக்காமல், தரம் பிரித்துத் தனித்தனியாக எடுக்கப்படும் பெட்ரோலில் 2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கும், 4 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கும் என இரண்டுவிதமான தரத்தில் பெட்ரோல் கிடைக்கிறது.

கார்த்திக்
கார்த்திக்

தற்போது எனது கண்டுபிடிப்புக்கு பேட்டன்ட் ரைட்ஸ் வாங்க வேண்டும். இதற்காக இண்ட்லெக்ட்சுவாலிட்டி பிராப்பர்ட்டி துறைக்கு விண்ணப்பிக்க உள்ளேன். எனது இந்த முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிக்கவும், இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு செய்வதற்கான‌ உதவிகளையும் செய்ய வேண்டும்!’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism