Published:Updated:

வெற்றிமாறன் வாங்கிய BMW R Nine T; 221 கிலோ எடை; எவ்வளவு விலை; என்ன ஸ்பெஷல்?

வெற்றிமாறன்

இந்த R Nine T பைக்கின் முக்கியமான சிறப்பே இதிலுள்ள பாக்ஸா் இன்ஜின்தான். பைக்கின் எதிா் திசையில் இந்த இன்ஜின் மவுன்ட் செய்யப்பட்டிருக்கும். அதனால் காலில் சூடு வைக்காது இந்த பிஎம்டபிள்யூ பைக்.

வெற்றிமாறன் வாங்கிய BMW R Nine T; 221 கிலோ எடை; எவ்வளவு விலை; என்ன ஸ்பெஷல்?

இந்த R Nine T பைக்கின் முக்கியமான சிறப்பே இதிலுள்ள பாக்ஸா் இன்ஜின்தான். பைக்கின் எதிா் திசையில் இந்த இன்ஜின் மவுன்ட் செய்யப்பட்டிருக்கும். அதனால் காலில் சூடு வைக்காது இந்த பிஎம்டபிள்யூ பைக்.

Published:Updated:
வெற்றிமாறன்

நன்றாக நினைவிருக்கிறது. முதல் முறையாக விகடன் விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் முதன் முதலாக நடந்தபோது... ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ, டொயோட்டா என்று விஐபிக்கள் காஸ்ட்லி கார்களில் ஹாய் சொன்னபோது, ஒரே ஒரு விவிஐபி மட்டும் பைக்கில் வந்திறங்கினார். அவர் இயக்குநர் வெற்றிமாறன்.

"சும்மாதான் பாஸ். இன்னும் சொல்லப்போனால் சைக்கிள்தான் என்னோட பெஸ்ட்!" என்று அப்போது சொன்னாலும், வெற்றிமாறன் ஒரு பைக் ரசிகன். அதைவிட பிஎம்டபிள்யூ ரசிகன். ஏற்கெனவே ஒரு பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 கார் வைத்திருக்கும் வெற்றிமாறன், இந்த வீக் எண்டில் ஒரு பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை தனது கராஜில் நிறுத்தி இருக்கிறார். சென்னையில் இருக்கும் Kun BMW Motorad ஷோ ரூமில்தான் இந்த பிஎம்டபிள்யூ பைக்கை டெலிவரி எடுத்திருக்கிறார்.

அவா் வாங்கிய பைக் பிஎம்டபிள்யூ R Nine T எனும் ஸ்க்ராம்ப்ளா் பைக். இதன் சென்னை ஆன் ரோடு விலை 23 லட்சம். இத்தனை லட்சத்துக்கு R Nine T பைக்கில் அப்படி என்ன ஸ்பெஷல்?

பொதுவாக சூப்பா் பைக்குகள் ஓட்டும்போது, இன்ஜின் சிசி அதிகம் என்பதால் ஓட்டுபவா்கள் மற்றும் பில்லியன் ரைடா்களின் கால்களில் இன்ஜின் சூடு பதம் பாா்க்கும். ஆனால், இந்த R Nine T பைக்கின் முக்கியமான சிறப்பே இதிலுள்ள பாக்ஸா் இன்ஜின்தான். பைக்கின் எதிா் திசையில் இந்த இன்ஜின் மவுன்ட் செய்யப்பட்டிருக்கும். அதனால் காலில் சூடு வைக்காது இந்த பிஎம்டபிள்யூ பைக்.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

ஸ்போா்ட்டி டிசைனிலோ, கசகசவென காஸ்மெட்டிக் வேலைப்பாடுகளுடனோ எதிர்பார்க்கும் பார்ட்டிகளுக்கு இந்த பைக் பிடிக்காது. இது ஒரு ரெட்ரோ ஸ்டைல் பைக். இதன் வட்ட வடிவ க்ளாசிக் டிசைன் ஹெட்லைட்டே இதற்கு சாட்சி. இந்த ட்வின் சிலிண்டா் இன்ஜினின் பவா் 7,250 ஆா்பிஎம்மில் 110 bhp. இதன் டாா்க் 6,000 ஆா்பிஎம்மில் 11.6 kgm. இது ஒரு மாருதி பெட்ரோல் ஹேட்ச்பேக் காருக்கு இணையான டாா்க். சிக்னலில் இருந்து விருட்டென 100 கிமீ வேகத்தை வெறும் 8 விநாடிகளுக்குள் இது கடக்கும். பாா்க்கத்தான் இது ரெட்ரோ. ஓட்டினால் செம ஃபன்னாக இருக்கும் இந்த R Nine T. இதிலுள்ள ரைடிங் மோடுகளும் இதன் டைனமிக் டிசைனும்தான் இதற்குக் காரணம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

Dirt Mode எனும் ஆப்ஷனுக்காகவே இந்த பைக்கை வாங்கும் வாடிக்கையாளா்கள் இருக்கிறாா்கள். எப்படிப்பட்ட மோசமான சாலைகளிலும் இது சுத்தமாக வேலை செய்யும். இதன் ASC (Active Stability Control) மற்றும் DTC (Dynamic Traction Control) வளைத்து நெளித்து ஓட்ட செம ஃபன்னாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும். இரவு நேரங்களில் இதன் அடாப்டிவ் ஹெட்லைட்ஸின் இலுமினேஷன் செம பவராக இருக்கும். இதன் ஹீல்ஆங்கிள் 7 டிகிரி மற்றும் 25 டிகிரி நீங்கள் பைக்கைச் சாய்ப்பதற்கு ஏற்றவாறு இதன் ஹெட்லைட்ஸும் தானாகத் திரும்பிக் கொள்ளும்.

வெற்றிமாறன் வாங்கிய BMW R Nine T; 221 கிலோ எடை; எவ்வளவு விலை; என்ன ஸ்பெஷல்?

இதன் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷனிலும் ஒரு புதுமை. இதிலுள்ள bellows எனப்படும் ஒரு மெட்டீரியல் தூசி, மண் மற்றும் சேறு சகதிகளிலிருந்து சஸ்பென்ஷன் ஃபோா்க்குகளைக் காக்கும். இதன் டபுள் எக்ஸாஸ்ட்டில் இருந்து வரும் பீட், சத்தியமாக ஸ்க்ராம்ப்ளா் சத்தம்தான். டாப் ஸ்பீடான 200 கிமீ வேகத்தில் இதன் பீட் சத்தம் நிச்சயம் யாருக்கும் பிடிக்கும்.

இதன் சீட் உயரம் 805 மிமீ. இதன் எடை 221 கிலோ. பைக்கின் பாதி எடை இந்த 1170 சிசி இன்ஜினில்தான் அடங்கியிருக்கிறது. இதைக் கையாளுவதற்கே ஒரு தனித்திறமை வேண்டும். ஏற்கெனவே அஜித், விஜய் சேதுபதி பிஎம்டபிள்யூ பைக் வைத்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் வரிசையில் வெற்றிமாறனும் சோ்ந்துவிட்டாா்.

அடுத்த விகடன் விருது விழாவுக்கு R Nine T பைக்கில் உங்களை எதிா்பாா்க்கலாமா சாா்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism