Published:Updated:

Motor Updates: கேடிஎம்-மில் எலெக்ட்ரிக் டியூக்... கிமீ அதிகம் தரக்கூடிய நெக்ஸான் EV...

Motor Updates

எலெக்ட்ரிக் வாகனங்களின் புதிய அப்டேட்கள்! #Motor Updates

Motor Updates: கேடிஎம்-மில் எலெக்ட்ரிக் டியூக்... கிமீ அதிகம் தரக்கூடிய நெக்ஸான் EV...

எலெக்ட்ரிக் வாகனங்களின் புதிய அப்டேட்கள்! #Motor Updates

Published:Updated:
Motor Updates

எலெக்ட்ரிக் சந்தையில் களமிறங்கும் KTM

KTM E-Duke
KTM E-Duke
powerdrift

இதுவரை பெட்ரோல் இன்ஜின் கொண்ட பைக்குகளை மட்டுமே உலகமெங்கும் விற்பனை செய்து வந்தது KTM. தற்போது புதிதாக எலெக்ட்ரிக் மோட்டாருடன் இ-டியூக் பைக்கை KTM உருவாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 10 kW மோட்டார், 5.5 kWh பேட்டரி பேக் என கொஞ்சம் மாஸாகவே இந்தப் புதிய எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வருகிறது KTM. இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் பைக்குகளிலேயே அதிக பவர் மோட்டார் கொண்ட பைக் என்றால் அது புனேவைச் சேர்ந்த டார்க் (Torq) நிறுவனத்தின் க்ரேட்டோஸ் R பைக்கின் மோட்டார்தான். 9 kW மோட்டாருடன் க்ரேட்டோஸ் R பைக்கை அறிமுகப்படுத்தியிருந்தது டார்க். இ-டியூக் அதனைவிட பவர் கொஞ்சம் அதிகம் கொண்ட மோட்டாரைப் பயன்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது. மேலும், இந்த எலெக்ட்ரிக் மோட்டார் 14.5 bhp பவரை வெளிப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது இந்தியாவில் விற்பனையாகி வரும் KTM 125 டியூக்குக்கு இணையான அளவு பவரைக் கொண்டிருக்கிறது. பேட்டரியும் டார்க் க்ரேட்டோஸ் R, சிம்பிள் ஒன், ஓலா S1 ப்ரோ பைக்குகளை விட அதிகமாக 5.5 kWh-ஆக இருக்கிறது. எனவே, இந்தியாவில் இந்த பைக் வெளியாகும் பட்சத்தில், இந்தியாவின் பவர்ஃபுல்லான எலெக்ட்ரிக் பைக்காக இது இருக்கும். ஆனால், இந்தப் புதிய எலெக்ட்ரிக் பைக் வெளியாக இன்னும் சில காலம் ஆகும். மேலும் ஹுஸ்க்வானாவின் புதிய எலெக்ட்ரிக் பைக்காக வெளியாகவிருக்கும் இ-பிலன் பைக்கில் இருந்து பல விஷயங்களை இதில் பகிர்ந்திருக்கிறார்கள்.

இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து எலெக்ட்ரிக் பைக்குக்கான ப்ளாட்ஃபார்ம் ஒன்றையும் உருவாக்கி வருகிறது KTM. ஆனால், அந்த ப்ளாட்ஃபார்மானது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உற்பத்தியையே பிரதான நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்படுவதால், அதில் இந்தப் புதிய இ-டியூக்கை உற்பத்தி செய்ய வாய்ப்பில்லை. அதனால், இந்தப் புதிய எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யவதற்கு வேறு திட்டங்களை KTM வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் ரேஞ்ச் கூடிடுச்சு!

டாடா நெக்ஸான் EV
டாடா நெக்ஸான் EV

இந்தியாவில் என்ட்ரி லெவலில் எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களின் பிரதானத் தேர்வாக இருப்பது இரண்டே இரண்டுதான். டாடாவின் டிகோர் அல்லது நெக்ஸான் EV. ரேஞ்ச், பவர் மற்றும் வசதிகள் ஆகியவற்றில் முன்னணியில் இருப்பது MG-யின் ZS EV தான். ஆனால், அதற்கேற்ற வகையில் விலையும் பல லட்சங்கள் கூடுதலாகக் கொடுக்க வேண்டியிருக்கும். பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாக சிறப்பான கார் என்றால், அது டாடாவின் நெக்ஸான் EVதான். பட்ஜெட் எலெக்ட்ரிக் வாடிக்கையாளர்களின் பலரது முதல் விருப்பமும் நெக்ஸான்தான். ஆனால், நெக்ஸானின் ரியல் டைம் ரேஞ்ச் 220 - 230 கிமீதான். அந்தக் குறையைத் தீர்க்க அதிக ரேஞ்ச் கொண்ட புதிய நெக்ஸானைக் களமிறக்கவிருக்கிறது டாடா. முந்தைய நெக்ஸானானது 30.2 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருந்த நிலையில், புதிய நெக்ஸான் 40 kWh பேட்டரி பேக்கைக் கொண்டிருக்கிறது. பேட்டரி கூடியதால் ரேஞ்சும் 100 கிமீ வரை அதிகரிக்கும். இதன் அராய் ரேஞ்ச் 400 கிமீ க்ளெய்ம் செய்கிறது டாடா. ரியல் டைமில் இது 320 - 340 கிமீ வரையிலான ரேஞ்ச் நிச்சயம் கிடைக்கலாம். இதனால் நெக்ஸானின் விலையும் கணிசமாக உயரும். ரேஞ்ச் தேவையில்லை; பட்ஜெட்டில் வேண்டும் என்பவர்களுக்குப் பழைய நெக்ஸானும் விற்பனையில் இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறது டாடா.

மாருதி சுஸூகி மற்றும் டொயோட்டாவின் முதல் முழுமையான எலக்ட்ரிக் கார்!

மாருதி எலெக்ட்ரிக் கார்
மாருதி எலெக்ட்ரிக் கார்

எலெக்ட்ரிக்கைப் பொருத்தவரை மாருதி மட்டும்தான் வாய் திறக்காமல் இருந்து வந்தது. இப்போது மாருதியும் எலெக்ட்ரிக்கில் குதித்துவிட்டது. தனது முதல் எலெக்ட்ரிக் மிட்சைஸ் எஸ்யூவிக்கு, இப்போதைக்கு YY8 எனும் குறியீட்டுப் பெயர் வைத்திருக்கிறது மாருதி. இந்தப் புதிய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகமெங்கும் விற்பனை செய்யும் திட்டத்தில் இருக்கிறது மாருதி. மேலும், குஜராத்தில் உள்ள மாருதியின் தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டு இது உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படவிருக்கிறது. மாருதி இருந்தால் டொயோட்டா இல்லாமலா? டொயோட்டாவும் ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் திட்டத்துடன் இருக்கிறது.

டொயோட்டா எலெக்ட்ரிக் கார்
டொயோட்டா எலெக்ட்ரிக் கார்

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் எலெக்ட்ரிக் கார்களைவிட அதிகமான பேட்டரி பேக், அதிகமான பவர், நிறைய வசதிகள்; ஆனால் மிகக் குறைந்த விலை. இதுதான் தங்களுடைய எலெக்ட்ரிக் காருக்கான மாருதியின் திட்டம். ஆனால், இந்தக் காரின் உருவாக்கம் முடிந்து வெளியாக இன்னும் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும். 2025-ல்தான் இந்தப் புதிய காரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மாருதி. 168 bhp பவரை வெளிப்படுத்தும் 125 kW மோட்டார், 59 kWh பேட்டரி பேக்குடன், 13 - 15 லட்சம் ரூபாய்க்குள் இந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விலை இருக்கும். இதே மோட்டார் மற்றும் பேட்டரி பேக்குடன், டொயோட்டா பேட்ஜிலும் வெளிவரவிருக்கிறது YY8.

பாதுகாப்பு அம்சங்களில் பெரிதாக அக்கறை காட்டாது மாருதி. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. பாதுகாப்பிலும் கவனம் செலுத்தி, அதேநேரத்தில் பட்ஜெட் ஃப்ரெண்ட்லியாகவும் இந்த YY8 எலெக்ட்ரிக் காரை மாருதி வெளியிட இருக்கிறதாம். ஆனால். 2025-ல் இன்னும் பல கார்களை, பல நிறுவனங்களும், பல புதிய தொழில்நுட்பங்களுடன் வெளியிட்டிருக்கும். அவற்றையெல்லாம் கடந்து மாருதியின் திட்டம் இந்தியாவில் வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.