Published:Updated:

டாடா முதல் அசோக் லேலாண்ட் வரை... 1 லட்சம் பார்வையாளர்கள்! - களை கட்டும் 3 நாள் வாகன கண்காட்சி!

ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் இடம்

நாமக்கல்லில் இன்று முதல் மூன்று நாட்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் என்று 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

டாடா முதல் அசோக் லேலாண்ட் வரை... 1 லட்சம் பார்வையாளர்கள்! - களை கட்டும் 3 நாள் வாகன கண்காட்சி!

நாமக்கல்லில் இன்று முதல் மூன்று நாட்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் என்று 250 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் கண்காட்சி நடைபெற இருக்கிறது.

Published:Updated:
ஆட்டோ எக்ஸ்போ நடைபெறும் இடம்

நாமக்கல் நகரில் பரமத்தி சாலையில் உள்ள ஐஸ்வர்யம் திருமண மண்டபத்தில், வருகிற செப்டம்பர் 16, 17, 18 தேதிகளில் இந்த வாகன மற்றும் உதிரிபாக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தக் கண்காட்சியை நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல் மோட்டார் ஸ்பேர் பார்ட்ஸ் டீலர்ஸ் அசோஷியேசன், நாமக்கல் ஆல் மோட்டார்ஸ் ஒர்க் ஷாப் ஓனர்ஸ் அசோஷியேசன், நாமக்கல் மெக்கானிக்கல் ஒர்க் ஷாப் ஓனர்ஸ் அசோஷியேசன், நாமக்கல் ஆட்டோ நகர் அசோஷியேசன் ஆகியவை இணைந்து நடத்துகிறது. இந்த கண்காட்சி குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளரும் நாமக்கல், தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வாங்கிலி செய்தியாளர்களிடம்,

பேட்டியளிக்கும் வாங்கலி
பேட்டியளிக்கும் வாங்கலி

"நாமக்கல்லில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும் என்று நாங்கள் நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வந்தோம். அதன் அடிப்படையில், தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் கண்காட்சி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இக்கண்காட்சியில் இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான அசோக் லேலண்ட், டாடா மோட்டார்ஸ், பாரத் பென்ஸ் மற்றும் எய்ஷர் நிறுவனங்கள் உட்பட 250 - க்கும் மேற்பட்ட உதிரிபாக உற்பத்தி நிறுவனங்களும் தங்களது புதிய தொழில்நுட்ப படைப்புகளைக் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதில், உள்ளூர் முக்கிய அரசியல் பிரமுகர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த மூன்று நாள் கண்காட்சியின்போது, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்தக் கண்காட்சியைப் பார்வையிடும் பார்வையாளர்களுக்கு கேன்டின் மற்றும் குடிநீர் வசதி, மருத்துவர் மற்றும் செவிலியர் குழு, தீயணைப்பு மற்றும் காவல்துறை பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்போவில் தற்பொழுது வாகனத்துறையில் மாறிவரும் தொழில் நுட்பங்களான BS4 மற்றும் BS6 போன்ற தயாரிப்புகளில் உள்ள மாற்றங்களை இங்குள்ள உரிமையாளர்களுக்கும், தொழில் சார்ந்த மக்களுக்கும் விளக்க ஒரு கருத்தரங்கு வளாகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில், முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு தொழிலில் உள்ள மாற்றங்கள் குறித்து விளக்க உள்ளார்கள். தமிழக அரசு நாமக்கல் நகரில் தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியில் உள்ள இத்தருணத்தில், நமது எக்ஸ்போவில் கலந்து கொள்ளும் வாகனம் மற்றும் உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தை நாமக்கல்லில் அமைத்து, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகள் ஏற்படுத்தி தருவதற்கு நமது குழு வலியுறுத்தும்.

 பேட்டியளிக்கும் வாங்கலி
பேட்டியளிக்கும் வாங்கலி

இந்தக் கண்காட்சியின் துவக்க நாளான 16.09.2022 அன்று அசோக் லேலாண்ட் தலைமை நிர்வாகி சஞ்சீவ் குமார் துவக்கி வைக்க, டாடா மோட்டார்ஸ் தென்மண்டல தலைமை நிர்வாகி கே.ஜி.பிரசாத், டிவிஎஸ் ஆட்டோமொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஜி.சீனிவாச ராகவன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மாநிலத் தலைமை இயக்குநர் வி.எஸ்.அசோகன், ஜே.கே.டயர் தென்னிந்திய மண்டல மேலாளர் எஸ்.சுந்தர், டெய்ம்லர் இந்தியா கமர்சியல் வெகிக்கில்ஸ் பி லிட் மண்டல விற்பனை மேலாளர் ஷாகீர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர் . கண்காட்சி நிறைவு நாளான 18.09.2022 மாலை 04.00 மணிக்கு சிம்டா பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா மற்றும் என்.டி.சி குழும தலைவர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்" என்று தெரிவித்தார்.