Published:Updated:

1.4 கோடி ரூபாய் ஆடி RS5 Sportback | 450 குதிரை சக்தி... டாப் ஸ்பீடு 250 கிமீ! 🔥 | Motor Vikatan

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் காரான 'Audi RS5 Sportback' -ன் விமர்சனம்.

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் ஒரு லக்ஸூரி ஸ்போர்ட்ஸ் கார் இந்த 'Audi RS5 Sportback'. `நச்’ என்று ஒரே வேரியன்ட்டில் வரும் இந்தக் காரின் டாப் ஸ்பீடு 250km/h. 0-100 கிமீ வேகத்தை வெறும் 3.9 நொடிகளில் எளிதில் எட்டிவிடும். அதுவும் இதில் டைனமிக் மோடு என்றொன்று உண்டு. அதன் வீரியத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இதன் பவர் 450bhp. ஸ்டார்ட் பண்ணும்போது ஸ்மூத்தாக இருக்கும் பெட்ரோல் இன்ஜின், ஆக்ஸிலரேட்டர் மிதித்தால்... `வ்வ்வ்வ்ர்ர்ர்ரூம்’ எனச் சீறுகிறது ஆடி RS 5. சீட்டில் உட்கார்ந்து இருப்பவர்களைச் சட்டென்று பின்னுக்குத் தள்ளிப் பறக்கிறது.

இதன் தோற்றம், ஆடி கார்களுக்கே உரிய அகலமான முன்பகுதியுடன் கம்பீரத் தோற்றத்தில் அமைந்துள்ளது. பின் பகுதி கூபே கட்டமைப்புடன் ஒரு நீளமான லுக்கில் உள்ளது. இதற்கு கிரீடம் வைத்தாற்போல் பியானோ பிளாக் கலரில் ஸ்பாய்லர், ஒட்டு மொத்தத்தில் ஒரு கச்சிதகமான ஸ்போர்ட்டி லுக்கில் அமைத்துள்ளது இந்த 'Audi RS5 Sportback'.

இதில் என்ன ஸ்பெஷல்? நிறை-குறை என்ன? இந்த 'Audi RS5 Sportback' காரை எடுத்துக் கொண்டு சென்னை முழுக்க ஒரு `வ்வ்ர்ர்ரூம்’ ரவுண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism