Published:Updated:

2,355 ரூபாய் முதல் 12,566 ரூபாய் வரை விலை உயர்ந்த பஜாஜ் BS-6 பைக்ஸ்!

பஜாஜ் BS-6 பைக்ஸ்
பஜாஜ் BS-6 பைக்ஸ் ( Autocar India )

பெரும்பான்மையான மாடல்கள் பவர் & டார்க்கில் சரிவைச் சந்தித்திருந்தாலும், பல்ஸர் NS சீரிஸ் பைக்குகள் இரண்டுமே பவர் - டார்க்கில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆச்சர்யப்படும் வகையில், டிஸ்கவர் சீரிஸ், V சீரிஸ், பிளாட்டினா 110 ஸ்டாண்டர்டு ஆகியவற்றின் விலைகள் வரவில்லை.

தனது வலைதளத்தில் விலைகளை அப்டேட் செய்த கையோடு, BS-6 மாடல்கள் குறித்த டெக்னிக்கல் விவரங்களையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது பஜாஜ். ஆனால் கடந்த மாதத்திலேயே, இந்த நிறுவனத்தின் BS-6 மாடல்களின் ஆன்-ரோடு விலைகள், டீலர்கள் வசம் ஏற்கெனவே வந்துவிட்டன. தனது பைக்குகளின் டிசைனிலோ, வசதிகளிலோ பெரிதாக எந்த மாற்றத்தையும் பஜாஜ் செய்துவிடவில்லை (பல்ஸர் Neon ரேஞ்ச் தவிர). ஆனால் எதிர்பார்த்தபடியே, பைக்கின் இன்ஜின்களிலும் கலர்- கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களிலும் கணிசமான மாற்றம் தெரிகிறது.

Rajiv Bajaj
Rajiv Bajaj
Autocar India

பெரும்பான்மையான மாடல்கள் பவர் மற்றும் டார்க்கில் சரிவைச் சந்தித்திருந்தாலும், பல்ஸர் NS சீரிஸ் பைக்குகள் இரண்டுமே பவர் - டார்க்கில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆச்சர்யப்படும் வகையில், டிஸ்கவர் சீரிஸ், V சீரிஸ், பிளாட்டினா 110 ஸ்டாண்டர்டு ஆகியவற்றின் விலைகள் வரவில்லை (எண்ட் கார்டுக்கு வாய்ப்புள்ளது). விலை உயர்வைப் பொறுத்தவரை, குறைந்தபட்சமாக டொமினார் D400-ன் விலை 2,355 ரூபாயும், அதிகபட்சமாக பல்ஸர் 180 HF Neon பைக்கின் விலை 12,566 ரூபாயும் உயர்ந்திருக்கிறது. 2020 பஜாஜ் BS-6 பைக்குகளின் சென்னை ஆன்-ரோடு விலைகள் பின்வருமாறு,

CT 100 Alloy KS: 53,310 ரூபாய்

CT 100 Alloy ES: 61,436 ரூபாய்

CT 110 KS: 59,447 ரூபாய்

CT 110 ES: 63,940 ரூபாய்

பிளாட்டினா 100 KS: 60,112 ரூபாய்

பிளாட்டினா 100 ES: 68,958 ரூபாய்

பிளாட்டினா 110 H-Gear Disc: 73,297 ரூபாய்

பல்ஸர் 125 Neon Drum: 86,970 ரூபாய்

பல்ஸர் 125 Neon Disc: 91,699 ரூபாய்

பல்ஸர் 150 Neon: 1,03,631 ரூபாய்

பல்ஸர் 150 SD: 1,13,862 ரூபாய்

பல்ஸர் 150 TD: 1,17,292 ரூபாய்

Pulsar 150 Neon
Pulsar 150 Neon
BajajAuto

பல்ஸர் 180 HF Neon: 1,28,816 ரூபாய்

பல்ஸர் 220 F: 1,39,165 ரூபாய்

அவென்ஜர் 160 ஸ்ட்ரீட்: 1,10,134 ரூபாய்

அவென்ஜர் 220 க்ரூஸ்/ஸ்ட்ரீட்: 1,38,493 ரூபாய்

பல்ஸர் NS 160 TD: 1,24,993 ரூபாய்

பல்ஸர் NS 200: 1,47,637 ரூபாய்

பல்ஸர் RS 200 Twin ABS: 1,69,519 ரூபாய்

Pulsar 125 Neon
Pulsar 125 Neon
Bajaj Auto

டொமினார் D400: 2,30,382 ரூபாய்

டொமினார் D250: 1.8 - 1.85 லட்ச ரூபாய் (உத்தேசமாக)

அடுத்த கட்டுரைக்கு