Published:Updated:

பஜாஜ் பல்சர் 125 Neon அறிமுகம்... ப்ளஸ், மைனஸ் என்ன?

தற்போதைய சூழலில் இன்னும் புதிய மக்களை பல்ஸர் பிராண்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக, அதில் 125சிசி Neon மாடலை இந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு கோடிக்கும் அதிகமான பல்ஸர் பைக்குகள் ஏற்கெனவே சாலையில் இருப்பதை வைத்துப் பார்த்தாலே, இந்தியாவில் இந்த பிராண்டின் வீச்சைப் புரிந்துகொள்ள முடியும்! ஆம், 2001-ம் ஆண்டில் தொடங்கிய இதன் முதல் அத்தியாயம், 18 ஆண்டுகளைத் தாண்டியும் அசைக்க முடியாத இடத்தில் இருப்பது என்பது பெரிய விஷயம்; அதை 135சிசி முதல் 220சிசி வரையிலான வெவ்வேறு மாடல்களை, காலத்துக்கேற்ற தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் அசத்தலான விலையில் கொடுத்து, பஜாஜ் ஆட்டோ சாத்தியப்படுத்தி இருக்கிறது; தற்போதைய சூழலில் இன்னும் புதிய மக்களை பல்ஸர் பிராண்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக, அதில் 125சிசி Neon மாடலை இந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது.

`மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது' என பஜாஜ் ஆட்டோ கூறும் நிலையில், அந்த பைக்கின் ப்ளஸ் மைனஸ்களைத் பார்க்கலாம்.

Pulsar Neon Logo
Pulsar Neon Logo
J.T. Thulasidharan

ப்ளஸ் பாயின்ட்கள்:

* 2006-ம் ஆண்டு முதலாகப் பயன்பாட்டில் இருக்கும் டிசைனைக் கொண்டிருந்தாலும், ஓரளவுக்கு இன்றுமே பார்ப்பதற்கு ஸ்டைலாகவே காட்சியளிக்கிறது பல்ஸர் 125 Neon. இதற்கு மேட் ஃபினிஷ் மற்றும் Contrast கலர் வேலைப்பாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. பைக்கின் ஃபிட் அண்டு ஃபினிஷும் ஓகேதான். இதனாலேயே ஷைன் மற்றும் கிளாமர் உடன் ஒப்பிடும்போது, பெரிய பைக் போன்ற தோற்றத்தை இது கொண்டிருக்கிறது.

* இன்ஜின் திறனில் சுருங்கியிருந்தாலும், பல்ஸர் 125 Neon பைக்கின் வசதிகளில் எந்த மாற்றத்தையும் செய்துவிடவில்லை பஜாஜ். எனவே அனலாக் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், இரட்டை பைலட் விளக்குகளைக் கொண்ட ஹெட்லைட், 2 பீஸ் ஹெட்லைட், 17 இன்ச் டியூப்லெஸ் டயர்கள், பின்பக்க Nitrox ஷாக் அப்சார்பர், LED டெயில் லைட், பேக்லிட் ஸ்விட்ச்கள், DC எலெக்ட்ரிக்கல்ஸ் ஆகியவை தொடர்வது ப்ளஸ்.

*பல்ஸர் 150 பைக் இன்ஜினின் அதே 56மிமீ Bore வைத்துக்கொண்டு, Stroke மட்டும் குறைத்திருக்கிறது பஜாஜ் (60.7மிமீட்டரில் இருந்து 50.5மிமீ). எனவே எதிர்பார்த்தபடியே 25சிசி குறைந்திருந்தாலும், ஸ்போர்ட்டியான ஷார்ட் ஸ்ட்ரோக் பாணிக்குத் திரும்பியிருக்கிறது பல்ஸர்! மேலும் எந்த கியரிலும் வண்டியை ஸ்டார்ட் செய்யக்கூடிய Primary Kick மற்றும் அதிர்வுகளைக் கட்டுப்படுத்தும் Counter Balancer Shaft இருப்பதால், இன்ஜின் செம ஸ்மூத்.

125cc Engine
125cc Engine
J.T. Thulasidharan

*போட்டியாளர்களைவிட அதிக பவர் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளதால், நகரப் பயன்பாட்டைத் தவிர அவ்வப்போது நெடுஞ்சாலைப் பயணங்களையும் பல்ஸர் 125 Neon பைக்கில் மேற்கொள்ளலாம். 4 கியர் செட்-அப் காரணமாக, 70கிமீ வேகத்தை தாண்டினாலே கிளாமர் மற்றும் ஷைன் ஆகிய பைக்குகளில் கொஞ்சம் உதறல் தெரியும்; இந்த பைக்கில் அது சுத்தமாகத் தெரியவில்லை. பல்ஸர் பைக்குகளுக்கே உரித்தான எக்ஸாஸ்ட் சத்தம், இங்கும் கிடைக்கப்பெறுவது வெரி நைஸ். 105கிமீ வேகம் வரை செல்ல முடிந்தது.

*CBS செயல்பாடு சிறப்பாக இருப்பதுடன், ஓட்டுதல் அனுபவமும் மனநிறைவைத் தரும்படியே அமைந்திருக்கிறது. ஏனெனில் இன்ஜின் தவிர சேஸி, சஸ்பென்ஷன், வீல்கள் போன்ற மெக்கானிக்கல் பாகங்களும் பல்ஸர் 150 Neon பைக்கில் இருப்பவையே; நீளமான சிங்கிள் பீஸ் சீட்டில், உடல் பருமனானவர்கள் இருவர் கூட உட்கார முடிகிறது. பவர் ஒரே சீராக வெளிப்படுவது வரவேற்கத்தக்க அம்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைனஸ் பாயின்ட்கள்:

*முன்னே சொன்ன காரணங்களால், போட்டி பைக்குகளைவிட எடை மற்றும் மைலேஜில் பின்தங்கிவிடுகிறது பல்ஸர் 125 Neon. இந்த 15 கிலோ அதிக எடை பைக்கின் நிலைத்தன்மைக்கு உதவினாலும், குறைவான 57.5கிமீ மைலேஜுக்கும் வழிவகுத்துவிடுகிறது. மேலும் யூ-டர்ன் போடும்போது தெரியாவிட்டாலும், நெரிசலான இடங்களில் பைக்கை பார்க்கிங் செய்ய நேரிடும்போது, அதிக எடையை ரைடரால் உணர முடிகிறது.

Pulsar 125 Neon
Pulsar 125 Neon
J.T.Thulasidharan

*சிங்கிள் பீஸ் சீட்டின் குஷனிங், இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஏனெனில் இது நீண்ட நேரப் பயன்பாட்டுக்கு ஏற்றபடியாக இல்லை. தவிர முன்பக்க டெலிஸ்கோபிக் ஃபோர்க் மென்மையான செட்-அப்பைக் கொண்டிருந்தாலும், பின்பக்க ஷாக் அப்சார்பர் கொஞ்சம் இறுக்கமாகவே உள்ளது. இதனால் கரடுமுரடான சாலைகள் தரும் அதிர்வுகளை ரைடர் உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பல்ஸருக்கு உரித்தான இரட்டை ஹாரன்கள், இங்கே மிஸ்ஸிங் என்பதும் நெருடல்.

*Price to Performance/Value விஷயத்தில் பல்ஸர் பைக்குகள் என்றுமே சோடை போனதில்லை. ஆனால் பல்ஸர் 125 Neon விஷயத்தில் அது கொஞ்சம் பிசகியிருக்கிறதோ எனத் தோன்றுகிறது (83,800 ரூபாய், சென்னை ஆன் ரோடு விலை). ஏன் என்றால், 5,000 ரூபாய் கூடுதலாகக் கொடுத்தால், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் 14bhp பவர் கொண்ட பல்ஸர் 150 Neon பைக்கையே வாங்கிவிட முடியும். மேலும் கலர் ஆப்ஷன்களும் குறைவுதான்.

Bajaj Auto
Bajaj Auto
J.T. Thulasidharan
125 Neon Logo
125 Neon Logo
J.T. Thulasidharan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு