
பெயருக்கேற்றபடியே, இந்த பைக்கில் கேடிஎம் டியூக் 250 பைக்கில் இருக்கக்கூடிய 248.8 சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்படலாம். இதில் தனக்கே உரித்தான Triple Spark Plug தொழில்நுட்பத்தை பஜாஜ் பயன்படுத்தும் என நம்பலாம்.
ஏப்ரல் 1, 2020 முதலாக, இந்தியா முழுவதும் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. இதனால் பெட்ரோலிய நிறுவனங்கள் மற்றும் வாகன உற்பத்தியாளர்கள், தமது தயாரிப்புகளை அதற்கேற்ப மேம்படுத்தி வருவதைப் பார்க்கமுடிகிறது. டூ-வீலர்களைப் பொறுத்தவரை, பஜாஜ் ஆட்டோ தமது தயாரிப்புகளில் சில பைக்குகளின் BS-6 வெர்ஷன்களை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்திவிட்டது. 125 சிரீஸ் தவிர்த்து, இதர கேடிஎம் பைக்குகள் அனைத்துமே BS-6 வடிவத்துக்கு வந்துவிட்டன; ஆனால், பஜாஜின் விலை அதிகமான பைக்கான டொமினார் D400-ன் BS-6 மாடல் குறித்து மெளனமாகவே இருந்தாலும், BS-6 டொமினார் D400 பஜாஜின் டீலர்களிடம் வந்துவிட்டதாகவே தெரிகிறது. விலை தவிர வேறு என்னென்ன மாற்றங்கள் பைக்கில் இருக்கும் என்ற அறிவிப்பை, இன்னும் சில நாள்களில் எதிர்பார்க்கலாம்.

இந்தச் சூழலில், டெஸ்ட்டிங்கில் டொமினார் D400 இருப்பதுபோன்ற படங்கள், இணைய உலகில் ஆக்ரமித்திருந்தது தெரிந்ததே. முதலில் இவை BS-6 மாடலாக இருக்கக்கூடும் என்ற பேச்சு நிலவினாலும், படங்களை உற்றுநோக்கும்போது கணிசமான மாற்றங்கள் தெரிந்தன. அப்போதே டொமினார் D250 வரப்போகிறது என யூகிக்கப்பட்ட நிலையில், அந்தத் தகவலைத் தற்போது உறுதிபடுத்திவிட்டது பஜாஜ் ஆட்டோ. ஆம், இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில், டொமினார் D250 பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக, மோட்டார் விகடனை இந்த நிறுவனம் அழைத்திருக்கிறது. சுஸூகி ஜிக்ஸர் 250, யமஹா FZ-S 250 ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக வரப்போகும் டொமினார் D250 பைக்கில் என்ன எதிர்பார்க்கலாம்?
பெயருக்கேற்றபடியே, இந்த பைக்கில் கேடிஎம் டியூக் 250 பைக்கில் இருக்கக்கூடிய 248.8சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி பொருத்தப்படலாம். இதில் தனக்கே உரித்தான Triple Spark Plug தொழில்நுட்பத்தை பஜாஜ் பயன்படுத்தும் என நம்பலாம். மற்றபடி ஃப்யூல் இன்ஜெக்ஷன், 4 வால்வ் அமைப்பு, லிக்விட் கூலிங் ஆகிய அம்சங்களும் தொடரலாம். ஆனால், கேடிஎம்மில் இருக்கும் ஸ்லிப்பர் கிளட்ச், DOHC அமைப்பு ஆகியவை டொமினாரில் இடம்பிடிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும். மேலும் டியூக் 250 30bhp பவர் - 2.4kgm டார்க்கைத் தரும் நிலையில், டொமினாரின் ஸ்போர்ஸ் டூரர் பொசிஷனிங்கைக் கருத்தில் கொள்ளும்போது, D250 பைக் இதைவிடக் குறைவான செயல்திறனையே கொடுக்கலாம்.


ஸ்பை படங்களில் இருந்த பைக், ஏறக்குறைய டொமினார் D400 பைக்கை நினைவுபடுத்தும்படியே காட்சியளித்தது. ஆனால் அது திறன் குறைவான பைக் என்பதை, அதிலிருந்த சில அம்சங்கள் சொல்லாமல் சொல்லிவிடுகின்றன. அதாவது 10 ஸ்போக் அலாய் வீல்களின் தோற்றம் வித்தியாசமாக இருந்ததுடன், அதில் Diamond Cut ஃபினிஷிங் இல்லை. முன்பக்க பெட்டல் டிஸ்க் பிரேக், D400 பைக்கில் இருப்பதைவிட அளவில் சிறிதாக இருந்தது (320மிமீ). ஒருவேளை இது NS200 மற்றும் RS200 பைக்கிலிருக்கும் 300மிமீ டிஸ்க் பிரேக்காக இருக்கலாம்!
ஆனால் அவற்றிலிருந்து இதை வேறுபடுத்திக் காட்ட, D250-ல் டூயல் சேனல் எபிஎஸ்ஸை பஜாஜ் வழங்கும் என்றே தோன்றுகிறது. முன்பக்க டயர் மற்றும் USD ஃபோர்க்கில் மாறுதல் இல்லாவிட்டாலும், பின்பக்க டயர் அநேகமாக 140/70-R17 சைஸில் இருக்கலாம். ஏனெனில், டொமினார் D400 பைக்கின் பின்பக்கத்தில் 150/60-R17 டயர் உள்ளது!


இதன் பின்பகுதியில் Cast Swingarm இருந்தாலும், D250 பைக்கில் வழக்கமான Box Section Swingarm இருக்கலாம். வசதிகளைப் பொறுத்தவரை LED லைட்டிங் - இரட்டை டிஜிட்டல் மீட்டர்கள் - Double Barrel எக்ஸாஸ்ட் - மோனோஷாக் - 17 இன்ச் ரேடியல் டியூப்லெஸ் டயர்கள் - பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ் - Perimeter ஃபிரேம் - அலாய் மிரர்கள் மற்றும் Foot Pegs - ஸ்ப்ளிட் சீட்ஸ் - டூயல் சேனல் ஏபிஎஸ் - Backlit ஸ்விட்ச்கள் - 13 லிட்டர் பெட்ரோல் டேங்க் ஆகியவை அப்படியே இடம்பெறலாம். மெக்கானிக்கல் மாற்றங்களை வைத்துப் பார்க்கும்போது, உத்தேசமாக 1.6-1.7 லட்ச ரூபாய்க்குள் டொமினார் D250 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் நிர்ணயிக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே, ஆன்-ரோடு விலையில் டொமினார் D400 விட, 30-60,000 ரூபாய் குறைவாக இந்த பைக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.