Published:Updated:

மானே... தேனே... யாம்ஸ்!

அஜய்
பிரீமியம் ஸ்டோரி
அஜய்

ரீடர்ஸ் ரிவ்யூ: யமஹா FZS 25

மானே... தேனே... யாம்ஸ்!

ரீடர்ஸ் ரிவ்யூ: யமஹா FZS 25

Published:Updated:
அஜய்
பிரீமியம் ஸ்டோரி
அஜய்

பெண்களைப் பார்த்துக் காதல் கவிதை எழுதுவதெல்லாம் 90’ஸ் கிட்ஸ் ஸ்டைல். பைக்குகளை வைத்து லவ் போயம்ஸ் எழுதுவதுதான் 20’ஸ் கிட்ஸ் ஸ்டைல். மேடவாக்கத்தைச் சேர்ந்த ஆன்டனி அஜய், பக்கா மில்லினியல் கிட். அஜய்யின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் முழுக்க அவரின் யமஹா பைக் பற்றியதாகத்தான் இருக்கிறது. ‘மானே தேனே யாம்ஸ் (யமஹாவுக்குச் செல்லப் பெயராம்!)’ என்று அவர் தனது யமஹா FZS 25 பைக்கைப் பற்றித்தான் ‘குணா’ கமல் மாதிரி உருகிக் கொண்டே இருக்கிறார். ‘‘எனக்கும் என் லவ்வருக்கும் இதோட ஒன் இயர் ரிலேஷன்ஷிப். அதைக் கொண்டாடும் விதமா இந்த ரிவ்யூவை உங்களுக்குப் படைக்கிறேன்!!’’ என்று அவர் சொன்னவை!

மானே... தேனே... யாம்ஸ்!

ஏன் யமஹா FZS 25?

‘‘முதலில் குடும்பத்திற்காக ஒரு பைக் வாங்கணும்னு முடிவு பண்ணேன். ராயல் என்ஃபீல்டு புல்லட் மேல்தான் ஒரு கண்ணாவே இருந்துச்சு! இன்டர்செப்டரும், கான்டினென்ட்டல் ஜிடி கூடப் பார்க்கலாமேனு ஃப்ரண்ட்ஸ்லாம் சொன்னானுங்க! இன்டர்செப்டர் டெஸ்ட் டிரைவ் பண்ணப்போ, ரொம்ப வெயிட் ஆக இருந்தது. நான் 63 கிலோதான் இருப்பேன். ஹேண்ட்லிங் கஷ்டமா இருந்துச்சு! கான்டினென்ட்டல் அப்பாவுக்குப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாரு. சுஸூகி ஜிக்ஸர் 250–யும் ஐடியாவில் இருந்துச்சு! ஷோரூம் எக்ஸ்பீரியன்ஸே சரியில்லை. யாராவது வந்து ரிஸீவ் பண்ணுவாங்கனு பார்த்தா ஒருத்தரும் வரலை.

யமஹாவில் R15 மேல்தான் என் ரெண்டு கண்ணும் இருந்துச்சு. சின்ன வயசுலேயே அதுமேல ஒரு கிரேஸ். லுக் ஓகேதான். ஆனா, படுத்துக்கிட்டே ஓட்டுற அதோட ஸ்டைல் எனக்குப் பிடிக்கலை. அப்போதான் என் தேவதையைப் பார்த்தேன். பார்த்தவுடனே காதல் வந்துடுச்சு! ‘என்னடா இது, நம்ப பார்க்காத பைக்கா இருக்கே, MT பார்த்திருக்கோம்; R15 பார்த்திருக்கோம்; நிறைய FZ–லாம் பார்த்திருக்கோம், இது வித்தியாசமாக இருக்கே’னு பார்த்தா அது FZதான்; ஆனா 250சிசினு சொன்னாங்க. இதுவரைக்கும் பார்த்த எந்த ஒரு பைக்லேயும் இந்த ஃபீல் வரவே இல்லை. உடனே புக் பண்ணிட்டேன். ரெண்டு வாரத்துல டெலிவரி எடுத்துட்டேன். என் யாம்ஸை எடுத்துட்டு சர்ச்சுக்குப் போய் ஃபாதர்கிட்ட ப்ளெஸ்ஸிங் வாங்கிட்டு வந்தோம்!

vikatan
vikatan

சர்வீஸ் கொஞ்சம் தலைவலி!

ஃபர்ஸ்ட் சர்வீஸுக்கு எடுத்துட்டுப் போகும்போது, நல்லாதான் ரிஸீவ் பண்ணாங்க. அதுக்கப்புறம் எதிர்பாராதவிதமா ஒரு சின்ன விபத்து. தம்பி காலேஜ் போயிட்டு ரிட்டர்ன் வரும்போது, கீழே போட்டுட்டான். ஒரு பக்கம் ஃபுல்லா ஸ்க்ராட்ச் ஆயிடுச்சு! க்ராஷ் கார்டு உள்ள போயிடுச்சு! Knuckle Guard எல்லாம் நொறுங்கிடுச்சு! கண்டிப்பா மாற்ற வேண்டிய சூழ்நிலை. இந்த நிலைமையிலதான் யமஹா சர்வீஸோட சுயரூபம் தெரிய வந்துச்சு. ‘அன்னைக்குக் காலையில’னு ரோபோ சங்கர் சொல்வாரே… அது மாதிரி பல பேர்கிட்ட என் ஆக்ஸிடென்ட் கதையை ரிப்பீட் மோடுல சொல்லி சலிச்சுட்டேன். அதைவிட ஸ்பேர் கிடைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. யமஹா ஜென்யூன் கடைக்கே கிட்டத்தட்ட மாசக்கணக்கில் அலைஞ்சேன். ஒரு வழியா மூணு மாசம் கழிச்சுத்தான் என் யாம்ஸ் ரெடியாச்சு! யமஹாவில் ஜெனரலா ஆயில் சர்வீஸ்னா தப்பிச்சுக்கலாம். ஆனா, ஸ்பேர் மாத்தணும்னா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்போல!

ஒரு வருஷ அனுபவம்!

சில பேர் பைக்கை புது வொஃய்ப் மாதிரி கொஞ்ச நாள் நல்லா பாத்துப்பாங்க. அதேமாதிரி சில பைக்குகள் நாளாக நாளாக போர் அடிக்கும். ஆனா என் யாம்ஸ் அப்படி இல்லை. இப்போகூட ஃபர்ஸ்ட் ஓட்டின அதே எக்ஸைட்மென்ட் உடனேதான் ரைடு போறேன். ஒரு பேட் மூடுல இருந்தாகூட இதை எடுத்து ஒரு கிமீ ஓட்டினாலே போதும்; என்னோட எல்லா பல்லையும் நீங்க பாப்பீங்க! அந்த அளவுக்கு அஜய் ஹேப்பி அண்ணாச்சி! இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இப்படித்தான் பல்லைக் காட்டுவேன்.

மானே... தேனே... யாம்ஸ்!

ஸ்பேர் மாத்தினதைத் தவிர வேறெந்தப் பிரச்னையும் இப்போது வரை என் யமஹாவில் வரலை. ரொம்பச் செலவும் வைக்கலை. 2,500 கிமீ–ல் ஆயில் சர்வீஸ் நிச்சயம் பண்ணிடுவேன். என் லெஜெண்டரி பிரதர் இதை எடுத்துட்டுப் போனா மட்டும்தான் கொஞ்சம் பயப்படுவேன். மத்தபடி யமஹா FZS 25–ல் பெருசா எந்தப் பிரச்னையும் சந்திக்கலை.

பிடித்தது

பைக்கில் முதலில் நான் மயங்கியதே இதன் லுக்கில்தான். இதன் டிசைன், வேறெந்த பைக்கிலும் நான் பார்க்காததுனே சொல்வேன். கலர் ஸ்கீமும் பக்கா!

டிசைன்தான் பார்த்த உடனே ஈர்க்கிறது.
டிசைன்தான் பார்த்த உடனே ஈர்க்கிறது.

இரண்டாவது – இதோட ரைடிங் பொசிஷன். நான் ஏற்கெனவே சொன்னமாதிரி ஆர்15 மாதிரியான பைக்குகளோட ரைடிங் பொசிஷனை ஒப்பிடும்போது, இதை நேர்கொண்ட பார்வையோட ஓட்ட முடியுது. சீட் உயரம், ஹேண்ட்லிங், கியர் பொசிஷன் எல்லாமே செம! அதாவது, 250 சிசி பைக்கில் கம்யூட்டிங்கும் பண்ண அற்புதமா இருக்கு. இப்போ நீங்க ஆபீஸ் போறவங்களா இருந்தீங்கன்னா இந்த பைக் ரொம்பவே நல்லா இருக்கும். எத்தனை கிமீ–யா இருந்தாலும் சட்டுபுட்டுனு ஆபீஸ் வந்துடும்!

கைகளைப் பாதுகாக்க Knuckle Guard வசதி உண்டு.
கைகளைப் பாதுகாக்க Knuckle Guard வசதி உண்டு.

அப்புறம் – இதோட பிரேக்கிங் ஃபீட்பேக் ரொம்பப் பிடிக்குது. டூயல் டிஸ்க் பிரேக்ஸ் செம ஷார்ப்ங்க! எவ்வளவு ஸ்பீடு போய் பிரேக் அடிச்சாலும் ஸ்கிட் ஆகாம, நச்சுனு நிக்குது. ஏபிஎஸ்ஸும் அருமை! பைக் இதுவரைக்கும் என் கன்ட்ரோல்ல இருந்து மீறினதே இல்லை. ஹேண்ட்கார்டெல்லாம் இருக்கறதால பாதுகாப்பாவும் இருக்கு.

டூயல் டிஸ்க் பிரேக்ஸ் செம ஷார்ப்.
டூயல் டிஸ்க் பிரேக்ஸ் செம ஷார்ப்.

கடைசியா இதோட மைலேஜ். ஒருவேளை நான் இன்டர்செப்டர் வாங்கிருந்தாகூட இவ்வளவு ஹேப்பியா இருந்திருப்பேனானு தெரியலை – இப்போ பெட்ரோல் விக்கிற விலைக்கு! என் யமஹா, சிட்டிக்குள்ள 38 – 45 கிமீ வரை கிடைக்குது. ஒரு 250சிசி பைக்குக்கு இவ்வளவு மைலேஜ் கிடைக்கிறது ஆச்சரியமா இருக்கு. நான் இதை லாங் டிரைவ் எடுத்துட்டுப் போற வாய்ப்பு கிடைக்கலை. அதில் இன்னும் அதிகமா கிடைக்கலாம்னு நினைக்கிறேன்.

பிடிக்காதது:

இப்ப வரைக்கும் நான் இந்த பைக்கை சிட்டிக்குள்ள மட்டும்தான் ஓட்டி இருக்கேன். ஆனா டாப் ஸ்பீடு 120 கிமீ வரை ஓட்ட வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுக்கு மேலயும் போகும்னு என் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. இதோட லாங் ரைடு மேனரில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வேணுமோனு தோணுது! ஒரு 250சிசி பைக்குக்கு இதோட பவரும் ரொம்பக் கம்மிதான். டொமினாரில் 26bhpனு நினைக்கிறேன். ட்ரிப்பிள் டிஜிட்டுக்கு மேலே பவர் டெலிவரியில் இன்னும் இம்ப்ரூவ்மென்ட் வேணும்.

அதே மாதிரி 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான் கொடுத்திருக்காங்க. இப்போ 160சிசியிலேயே 6 கியர் வந்துடுச்சு! ஆனா சிட்டிக்குள்ள ஓட்டுறதுக்கு 5 கியர் போதுமானதா இருக்கு. மத்தபடி வேறெந்தக் குறையும் என் யாம்ஸில் இல்லை!

பவர் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம்
பவர் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம்

FZS 25 ஓகவோ?

FZS 25 பைக்கை ஒரு சிட்டி பைக்னுதான் சொல்லணும். இதோட குறைந்த பவர், லீனியரான பவர் டெலிவரி, ஹேண்ட்லிங் எல்லாமே அப்படித்தான் தோணுது! லாங் டிரைவ்தான் அடிக்கடி போவீங்கன்னா, அதுக்கு யமஹா FZS 25 செட்டாகாது. நல்ல மைலேஜோட, ஒரு அற்புதமான சிட்டி பைக் வேணும்னா இந்த யமஹா FZS 25 பைக்கை டிக் அடிக்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism