Published:Updated:

35.9 - 45.4 லட்ச ரூபாய்க்கு வந்துவிட்டது பிஎம்டபிள்யூ X1 ஃபேஸ்லிஃப்ட்!

X1 ஃபேஸ்லிஃப்ட்
X1 ஃபேஸ்லிஃப்ட் ( BMW India )

விலை அதிகமான M Sport வேரியன்ட்டில் ஸ்போர்ட்டியான பம்பர்கள், பெரிய டிஸ்க் பிரேக்ஸ், கூடுதல் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. காருக்குள்ளே அப்ஹோல்சரி மற்றும் மெட்டீரியல்களின் தரம் கொஞ்சம் கூடியிருக்கிறது.

ஆடி Q3, மினி கன்ட்ரிமேன், மெர்சிடீஸ் பென்ஸ் GLA, வால்வோ XC40 ஆகிய காம்பேக்ட் லக்ஸூரி எஸ்யூவிகளுடன் போட்டியிடும் தனது X1 எஸ்யூவியின் ஃபேஸ்லிப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது பிஎம்டபிள்யூ. 4 வேரியன்ட்கள், பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் என வெரைட்டியாக வந்திருக்கும் இந்தக் காரின் பெட்ரோல் மாடலுக்கு (20i), SportX எனும் ஆரம்ப வேரியன்ட் வழங்கப்பட்டுள்ளது (35.9 லட்ச ரூபாய்). ஆனால், டாப் வேரியன்ட்டில் பெட்ரோலை வாங்க முடியாது என்பது நெருடல்தான். இதுவே டீசல் மாடலில் (20d) முன்பிருந்த 4 வீல் டிரைவ் சிஸ்டம் இனி கிடைக்காது! எனவே, டீசலுக்கு M Sport தான் டாப் வேரியன்ட் (45.4 லட்ச ரூபாய்). விலைகள் அனைத்துமே இந்திய எக்ஸ்-ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.

X1 ஃபேஸ்லிஃப்ட்
X1 ஃபேஸ்லிஃப்ட்
BMW India

டிசைன் மாற்றங்களைப் பொறுத்தவரை, பெரிய கிட்னி கிரில் - மேம்படுத்தப்பட்ட பம்பர்கள் - புதிய அலாய் வீல்கள் - மாற்றியமைக்கப்பட்ட ஹெட் லைட்ஸ்/டெயில் லைட்ஸ், LED DRL - LED பனி விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுவே, விலை அதிகமான M Sport வேரியன்ட்டில் ஸ்போர்ட்டியான பம்பர்கள், பெரிய டிஸ்க் பிரேக்ஸ், கூடுதல் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

காருக்குள்ளே அப்ஹோல்சரி மற்றும் மெட்டீரியல்களின் தரம் கொஞ்சம் கூடியிருக்கிறது. பனரோமிக் சன்ரூஃப், புதிய i-Drive Interface உடனான 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவை கேபினை அழகாக்கியுள்ளன. இதனாலேயே முன்பைவிட X1-ன் விலை 40,000 முதல் 60,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

X1 ஃபேஸ்லிஃப்ட்
X1 ஃபேஸ்லிஃப்ட்
Autocar India

2.0 லிட்டர் - 4 சிலிண்டர் - டர்போ பெட்ரோல் இன்ஜின், 192bhp பவர் மற்றும் 28kgm டார்க்கைத் தருகிறது. 2.0 லிட்டர் - 4 சிலிண்டர் - டர்போ டீசல் இன்ஜின், 190bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த BS-6 இன்ஜின்கள், 2 வீல் டிரைவ் அமைப்பு - 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. தவிர நம் ஊர் சாலைகளுக்கு ஏற்றபடி சஸ்பென்ஷன் செட்-அப் மாற்றப்பட்டுள்ளது.

X1 ஃபேஸ்லிஃப்ட்
X1 ஃபேஸ்லிஃப்ட்
BMW India

இந்த மார்ச்சிலேயே X1 ஃபேஸ்லிஃப்ட்டை ஒருவர் புக் செய்யும் பட்சத்தில், 5 வருடம்/60,000 கி.மீ வாரன்ட்டி/சர்வீஸ் பேக்கேஜை முறையே 15,000 ரூபாய் (பெட்ரோல்) மற்றும் 20,000 ரூபாய்க்கு (டீசல்) பெற முடியும்!

அடுத்த கட்டுரைக்கு