Published:Updated:

தலை முக்கியம் பாஸ்!

ஹெல்மெட்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்மெட்

தரமான இந்த ஹெல்மெட்டுகள் ISI முத்திரையுடன் ரூ.2,000க்குக் கிடைக்கும்.

தலை முக்கியம் பாஸ்!

தரமான இந்த ஹெல்மெட்டுகள் ISI முத்திரையுடன் ரூ.2,000க்குக் கிடைக்கும்.

Published:Updated:
ஹெல்மெட்
பிரீமியம் ஸ்டோரி
ஹெல்மெட்

கனவு பைக்கை வாங்கும் போதே நல்ல ஹெல்மெட்டையும் வாங்கி விட வேண்டும். `அதைத்தான் ஷோரூமிலேயே குடுத்து விடுவார்களே' எனச் சொல்லக்கூடாது. அந்த ஹெல்மெட் எல்லாம் தரமானதாக இருப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. `நேசமணி'யின் சுத்தியல் தலையில் விழுந்தாலே சிதறி விடும் தரத்தில்தான் பெரும்பாலும் அந்த ஹெல்மெட் இருக்கும். இந்த வகை ஹெல்மெட்டை அணிவதும் ஒன்றுதான்; அணியாமல் இருப்பதும் ஒன்று தான்.

ஹெல்மெட்
ஹெல்மெட்

ஹெல்மெட்டில் நிறைய வகைகள் இருப்பதைப்போலவே அதற்கு ஒரு சரித்திரமும் உண்டு. அதைத் தெரிந்து கொண்டால், ஹெல்மெட்டின் அவசியத்தை மேலும் நன்கு புரிந்து கொள்ளலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1935-ம் ஆண்டு லாரன்ஸ் என்னும் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர், சாலை விபத்தில் சிக்கி கோமாவுக்குச் சென்று, 6 நாட்களுக்குப் பிறகு உயிரிழக்கிறார். அவருக்குச் சிகிச்சைஅளித்த நரம்பியல் நிபுணர் சர். ஹக் காய்ர்ன்ஸ்-ஐ இச்சம்பவம் மிகவும் பாதிக்கிறது. இதனால் அவர் ஓர் ஆய்வை மேற்கொண்டு, ரப்பர் மற்றும் கார்க்கினால் ஆன தலையில் அணியும் கவசம் ஒன்றை, பிரிட்டிஷ் ராணுவத்துக்குத் தயார் செய்கிறார். இப்படித்தான் ஹெல்மெட் உருவானது.

1953-ம் ஆண்டு அமெரிக்காவில் லோம்பார்ட் என்பவர், ஃபைபர் மற்றும் பேடிங் கொண்ட முதல் ஷாக் அப்ஸார்பிங் ஹெல்மெட்டை உருவாக்குகிறார். பெல் நிறுவனம் இந்த ஹெல்மெட்டைத் தயாரிப்பதற்கான உரிமத்தை வாங்குகிறது. அதேசமயம், இத்தாலியின் AGV நிறுவனமும் இதே பாணி ஹெல்மெட் ஒன்றை உருவாக்குகிறது.

ஹெல்மெட்
ஹெல்மெட்

1957-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் ரேஸில் நடந்த விபத்தில், வில்லியம் ஸ்னெல் என்கிற ரேஸர் உயிரிழக்கிறார். அப்போதிருந்த ஹெல்மெட்டுகளை ஆய்வு செய்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ஜார்ஜ், அவை ரேஸிங்குக்குத் தகுதியானவை இல்லை எனக் கண்டறிகிறார். அதே ஆண்டு, ஸ்னெல் நினைவு அமைப்பைத் தொடங்கி கார்களுக்கு குளோபல் - NCAP டெஸ்ட்போல, இன்று வரை ஹெல்மெட்டு களைப் பலகட்டப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, ரேட்டிங் செய்கின்றனர்.

1963-ம் ஆண்டு பெல் நிறுவனம், விண்வெளி ஹெல்மெட்டை அடிப்படையாகக் கொண்டு, உலகின் முதல் முழுக் கவச ஹெல்மெட்டைத் தயாரித்தது. 1964-ல் அமெரிக்காவின் போக்குவரத்துத் துறை (Department Of Transportation) ஹெல்மெட்டுக்கான வரைமுறைகளைக் கொண்டு வந்தது. உங்கள் ஹெல்மெட்டுக்குப் பின்புறம் கவனியுங்கள், DOT என்று இருந்தால், அது அந்த வரைமுறைகளின்படி தயாரான ஹெல்மெட் என்று அர்த்தம்.

1970-களில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஜப்பானின் Arai நிறுவனம் எடை மற்றும் விலை குறைவான Expanded Polysterene (EPS) கொண்டு தயாரித்த ஹெல்மெட்டுகளை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி வெற்றியும் பெறுகிறது. ஒரு கட்டத்தில், அனைத்துத் தயாரிப்பாளர்களும் EPS - ஐப் பயன்படுத்தி, ஹெல்மெட் தயாரிக்கத் தொடங்கிய பின்தான் , வடிவமைப்பின் மீது ஹெல்மெட் நிறுவனங்களின் கவனம் திரும்பியது.

தலை முக்கியம் பாஸ்!

பின் 1996-ம் ஆண்டில், ஐரோப்பில் வெளியான ஓர் ஆய்வின் பலனாக, ECE தரச் சான்றிதழ் என்று ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ECE - யின் விதிமுறைகளைப் பின்பற்றியே இந்தியாவில் ஹெல்மெட்டுக்கான ISI விதிகள் வகுக்கப்பட்டன.

இப்போது ஸ்மார்ட் ஹெல்மெட்ஸ்கூட வந்துவிட்டன. கார்பன் ஃபைபரைக் கொண்டு தயாரிக்கப்படும் இவற்றில் மேப்ஸ், கூகுள் அசிஸ்டன்ட் என்று சில வசதிகள் உண்டு.

ஹெல்மெட்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ஹெல்மெட்டுகளை open face, modular மற்றும் full face என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

open face Helmets: பெண்களின் சாய்ஸ், ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்டுகள்தான். அவர்களின் கூந்தலுக்கு ஏற்றதாக இருக்கும் இது. ராயல் என்ஃபீல்டு ஷோரூமிலும் open face ஹெல்மெட்டுகளே விற்கப்படுவதால், நெடுந்தூரம் ரைடிங் செல்லும் RE ரைடர்ஸ்கூட இதையே அணிகிறார்கள்.

தலை முக்கியம் பாஸ்!

இது சிட்டிக்கு மட்டும் ஓகே. நெடுஞ்சாலையில் பயணிக்க கண்டிப்பாக ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட்டுகள் அவசியம். வேகா, ஸ்டட்ஸ் போன்ற பிராண்டுகளில் ரூ.800 முதல் கிடைக்கும் ஹெல்ட்மெட்டுகளில் ISI முத்திரை மட்டுமே இருக்கும்.

Modular Helmets: Modular ஹெல்மெட்டுகளைப் பொறுத்தவரை, ப்ளஸ் பாய்ன்ட்டுகளைவிட மைனஸ்தான் அதிகம். விபத்து ஏற்படும்பொழுது, முன் பக்கம் தானாகத் தூக்கி கொள்ளும் அபாயம் இதில் உண்டு. Tinted visor கொண்ட ஹெல்மெட் இரவு நேரச் சவாரிக்குச் சரிவராது. தொப்பி போல் நீண்டு இருக்கும் off-road ஹெல்மெட்டைப் பின் சீட்டில் அமரும் பில்லியன் அணிந்தால், பிரேக் அடிக்கும்போது, அது ரைடரை முட்டும். ஆகவே, மாடுலர் ஹெல்மெட்டுகளைத் தவிர்ப்பது நல்லது.

Full Face Helmets: முகத்தைச் சுற்றி முற்றிலும் கவசம்போல் இருக்கும் ஃபுல்ஃபேஸ் ஹெல்மெட்டுகள்தான் இருப்பதிலேயே பாதுகாப்பானவை. நடுத்தர வயதினர் அலுவலகம் சென்று வர ஏற்றது இது. தரமான இந்த ஹெல்மெட்டுகள் ISI முத்திரையுடன் ரூ.2,000க்குக் கிடைக்கும்.

தலை முக்கியம் பாஸ்!

4,000 ரூபாய்க்கு மேல் என்றால் AXXIS, SOL போன்ற பிராண்டுகளில் ஏகப்பட்ட கிராஃபிக்ஸ் உடன் கல்லூரி மாணவர்கள் விரும்பும் டிசைன்களில் ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. இந்த ஹெல்மெட்டுகள், அமெரிக்காவின் DOT விதிமுறைக்கு உட்பட்டுத் தயாரிக்கப்பட்டிருக்கும்.

அதுவே 8,000 ரூபாய்க்கு மேல் என்றால், MT, HJC போன்ற பிராண்டுகளில் ஐரோப்பாவின் ECE தரச்சான்றிதழ்கள் பெற்ற ஹெல்மெட்டுகள் கிடைக்கும். D - ரிங் லாக்கிங் அமைப்புதான் இதன் ஸ்பெஷல். விபத்து ஏற்படும்போது, ECE ஹெல்மெட்டுகள் தனியாக அவிழ்ந்து விழாது. எனவே, வேகப் பார்ட்டிகளுக்கு ECE ஹெல்மெட்டுகள் செம சாய்ஸ்.

Arai, agv போன்ற உயர் ரக ஹெல்மெட்டுகள், ஸ்னெல் அமைப்பால் டெஸ்ட் செய்யப்பட்டு பார்முலா-ஒன், மோட்டோ ஜிபி போன்று சர்வதேச ரேஸிங்கில் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை ஹெல்மெட்டுகளின் விலை 16,000 ருபாயில் ஆரம்பித்து லட்சங்களில் நீளும்.

தலை முக்கியம் பாஸ்!

ஹெல்மெட்டுக்கான பட்ஜெட்டைத் தேர்வு செய்வது எளிதுதான். உங்கள் பைக்கின் விலையில் 5 - 10 % ஹெல்மெட்டின் விலை இருக்க வேண்டும். பைக் 1.5 லட்சம் என்றால், குறைந்தது 7,500 ரூபாய்க்காவது ஹெல்மெட் வாங்கினால்தான், பைக்கின் டாப் ஸ்பீடுக்கு ஈடு கொடுக்கும் பாதுகாப்பு அம்சங்கள் அதில் இருக்கும். ஹெல்மெட்டுக்குப் போய் இவ்வளவு பணம் ஒதுக்கணுமா என்று மலைக்காதீர்கள். நம் உடம்பில் தலை ரொம்ப முக்கியம் பாஸ்!