Published:Updated:

ரூ.1.4 லட்சம் ப்ளஸ் பட்ஜெட்... 200-220சிசி பிரிவில் எந்த பைக் சரியான சாய்ஸ்?

உங்கள் கேள்விகள், சந்தேகங்களுக்கான தெளிவான யோசனைகள்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நான் கடந்த சில ஆண்டுகளாக, அப்பாச்சி RTR 160 பைக்கைப் பயன்படுத்தி வருகிறேன். தற்போது 200-220சிசி பிரிவில் புதிய பைக் வாங்க ஆசை. எனது பட்ஜெட்டான 1.4 லட்ச ரூபாய்க்கு வரும் பல்ஸர் 220, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது தேர்வு சரியானதா?

- சஞ்சய் குமார். எம், சேலம்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், நம் நாட்டில் கொரோனாவுடன் அமலுக்கு வந்த BS-6 மாசு விதிகள் காரணமாக, இரு சக்கர வாகனங்களின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. எனவே பெரிய பைக் வாங்கும் எண்ணத்தில் இருந்த பலர், அதைவிடத் திறன் குறைவான தயாரிப்புகளை வாங்குவதை ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

இதன் வெளிப்பாடாக, பெரிய பைக் போன்ற தோற்றத்தில், சிறிய இன்ஜின் கொண்ட தயாரிப்புகள் அறிமுகமாகின்றன (உதாரணம்: ஹோண்டா ஹார்னெட் 2.0). நீங்கள் குறிப்பிட்ட பல்ஸர் 220 பைக்கைப் பொறுத்தவரை, அதன் தோற்றத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாதது பெரிய மைனஸ்.

இருப்பினும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், செமி ஃபேரிங், ஆயில் கூலர் கொண்ட இன்ஜின், கேஸ் ஷாக் அப்சார்பர், பேக்லிட் ஸ்விட்ச்கள், டூ-பீஸ் சீட்கள் மற்றும் ஹேண்டில்பார் எனக் குறிப்பிடும்படியான அம்சங்கள் அதில் நிறைந்துள்ளன.

மேலும் பழைய இன்ஜினாக இருப்பினும், இந்த பல்ஸரின் 220சிசி இன்ஜினுக்கு என்றே, இன்றும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கவே செய்கிறது. இதனுடன் போட்டி போடும் எக்ஸ்ட்ரீம் 200R/200S/200T ஆகியவற்றின் BS-6 வெர்ஷன்களை, ஹீரோ நிறுவனம் இன்னும் களமிறக்கவில்லை.

பல்ஸர்
பல்ஸர்

எனவே ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், உங்கள் பட்ஜெட்டைக் கொஞ்சம் அதிகரித்து, பல்ஸர் 200NS அல்லது அப்பாச்சி RTR 200 ஆகிய பைக்குகளை நீங்கள் பரிசீலிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

> நான் பல வருடங்களாக, டொயோட்டா இனோவாவைப் பயன்படுத்தி வருகிறேன். முன்பு அதில் நாங்கள் மொத்தம் 5 நபர்கள் சென்றோம் என்றால், இப்போது வெறும் 2 பேர்தான். எனவே மிட்சைஸ் எஸ்யூவிக்கு மாறலாம் என எண்ணுகிறேன். அதில் அதிக பூட் ஸ்பேஸ் மற்றும் ரோடு கிரிப் இருந்தால் நன்றாக இருக்கும். ஹெக்டர், செல்ட்டோஸ், க்ரெட்டா ஆகியவற்றில் எதை வாங்கலாம்?
> நான் தற்போது வைத்திருக்கும் டிசையர் 1.3 லட்சம் கிமீயைத் தாண்டி விட்டதால், காரை மாற்றும் முடிவுக்கு வந்துவிட்டேன். நான் புதிதாக வாங்கப்போகும் காம்பேக்ட் எஸ்யூவியின் ரீசேல் மதிப்பு, சிறப்பாக இருத்தல் அவசியம். மேலும் எனது மாதாந்திரப் பயன்பாடு 2,000-2,500 கிமீ வரை இருக்கும் என்பதால், குறைவான பராமரிப்பு - அதிக மைலேஜையும் எதிர்பார்க்கிறேன். மாருதி சுஸூகியில் டீசல் ஆப்ஷனே கிடையாது என்பதால், எந்த பிராண்ட் எனக்கு ஏற்புடையதாக இருக்கும்? எனது பட்ஜெட் 10-12 லட்ச ரூபாய்.
மோட்டார் கிளினிக்
மோட்டார் கிளினிக்
> எனது உயரம் 5.1 அடி மற்றும் எடை 60 கிலோ. எனது உருவ அமைப்பிற்கு ஏற்றபடியான புதிய பைக் எது? 150-180 சிசி இன்ஜின் திறனுடன் இருப்பது அவசியம். நான் கடந்த 6 ஆண்டுகளாக, ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் பைக்கை உபயோகப்படுத்தி வருகிறேன். எடை அதிகமான ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் எனக்கு ஆர்வம் இல்லை.
> நான் தற்போது பயன்படுத்தி வரும் ஆல்ட்டோவை எக்ஸ்சேஞ்ச்சில் போட்டுவிட்டு, புதிதாக காம்பேக்ட் செடான் வாங்கத் தீர்மானித்துள்ளேன் (திருமணம் ஆகிவிட்டதால், போதுமான இடவசதி & பூட் ஸ்பேஸுடன் கூடிய கார் தேவை). அதிக அராய் மைலேஜைக் கொண்டிருக்கும் டிசையர் எனக்குப் பிடித்திருக்கிறது. கொரோனா ஊரடங்கில் அறிமுகமான ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனின் ZXi வேரியன்ட், எனது பட்ஜெட்டில் வருகிறது. எனது தேர்வு சரியானதா? இதே விலையில் கிடைக்கும் அமேஸ் எப்படி இருக்கிறது?

- இந்தக் கேள்விகள், சந்தேகங்களுக்கான தெளிவான யோசனைகளை மோட்டார் விகடன் இதழில் பெற்றிட > மோட்டார் கிளினிக்... கேள்வி - பதில் https://bit.ly/2GY68bd

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு