
ஒருவர் டக்கார் ராலியில் கலந்து கொண்டாலே அவரைப் பெரிய வெற்றி வீரராகக் கொண்டாடுவது வழக்கம். போட்டியை நிறைவு செய்பவர்கள் மாவீரர்கள். 2015–ல் நடந்த டக்கார் ராலியை நிறைவு செய்த ஒரே இந்தியர் சி.எஸ்.சந்தோஷ்.
உலகின் மிக ஆபத்தான ரேஸ், டக்கார் ராலி. காடு, மேடு, பள்ளம், பாலைவனம், அருவிகள், நீர்நிலைகள், சேறு சகதி என்று உலகின் அத்தனை கஷ்டமான டெரெய்ன்களிலும் நடப்பதுதான் இந்த டக்கார் ராலி.
உயிருக்கு ஆபத்து என்பதால், இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் மிகவும் குறைவு. அப்படிப்பட்ட டக்கார் ராலியின் ஹீரோ, இந்தியாவைச் சேர்ந்த சி.எஸ்.சந்தோஷ். கார் ரேஸுக்கு மைக்கேல் ஷூமேக்கர் என்றால், பைக்கில் நடக்கும் டக்கார் ராலிக்கு சி.எஸ்.சந்தோஷ்தான் பட்டென நினைவுக்கு வருவார். சோகம் என்னவென்றால், ஷூமேக்கர் போலவே, கடுமையான விபத்தைச் சந்தித்துள்ளார் சந்தோஷ்.

ஹீரோ மோட்டார் ஸ்போர்ட்ஸ் டீமுக்காக பைக் ஓட்டி வரும் சந்தோஷ், வழக்கம்போல் 2021–க்கான டக்கார் ராலியிலும் கலந்து கொண்டிருக்கிறார். சவுதி அரேபியாவில் உள்ள மோசமான ட்ராக்கில், ஸ்டேஜ் 4–ல் செம ஸ்பீடாக நேற்று பைக் ஓட்டிக் கொண்டிந்தபோது, விபத்தில் சிக்கியிருக்கிறார் சந்தோஷ். இதில் சந்தோஷின் தலையில் பலத்த காயம். உடனே தனி விமானம் மூலம் ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். விபத்து நடந்தவுடன் சந்தோஷின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று சொல்லி வந்த மருத்துவமனை நிர்வாகம், இப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக சந்தோஷை மருத்துவ ரீதியிலான கோமாவுக்கு கொண்டுசென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஒருவர் டக்கார் ராலியில் கலந்து கொண்டாலே அவரைப் பெரிய வெற்றி வீரராகக் கொண்டாடுவது வழக்கம். போட்டியை நிறைவு செய்பவர்கள் மாவீரர்கள். 2015–ல் நடந்த டக்கார் ராலியை நிறைவு செய்த ஒரே இந்தியர் சி.எஸ்.சந்தோஷ். 2013 ராலியில், ஒரு பாலைவனத்தில் சந்தோஷின் சுஸூகி MX450X பைக் தீப்பிடித்து எரிந்ததில், சந்தோஷின் கழுத்துப் பகுதி தீக்காயங்களுக்கு உள்ளானது. தீக்காயம் பட்ட கழுத்தோடுதான் ராலியில் பங்கேற்றுக்கொண்டிருந்தார் சந்தோஷ்.

மொத்தம் 12 ஸ்டேஜ்களாக நடக்கும் இந்த டக்கார் ராலியில், ஒரு வீரர் மொத்தம் 7,646 கிமீ தூரத்தை கவர் செய்ய வேண்டும். சந்தோஷுக்கு விபத்து நடந்தது 813 கிமீ தூரம் கொண்ட ஸ்டேஜ் 4–ல். கொடுமை என்னவென்றால், கடந்த ஆண்டு இதே டக்கார் ராலியில், இதே இடத்தில், இதே Hero Motor Sports டீமைச் சேர்ந்த Paulo Gonçalves எனும் வீரர், இதே போன்றதொரு விபத்தைச் சந்தித்து இறந்து போனார். சி.எஸ்.சந்தோஷ் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரேஸர்கள் அனைவரும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
2014-ம் ஆண்டு சந்தோஷ் விகடனுக்கு அளித்த பேட்டியை இங்கே படிக்கலாம்...