Published:Updated:

உங்கள் கார் ஏ.சி சரிவர இயங்குகிறதா... இந்த 8 விஷயங்களைக் கவனிங்க! #CarMaintenance

கார் ஏசி
கார் ஏசி ( Autocar India )

ஆரஞ்ச் மற்றும் பச்சை பகுதிகளில் இருக்கக்கூடிய நகரங்களில், டாக்ஸி மற்றும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், ஓலா தனது டாக்ஸிகளில் ஏசி பயன்படுத்த வேண்டாம் எனத் தனது ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதோ 2020 தொடங்கி, மே மாதம் வரை வந்துவிட்டோம். இந்தச் சூழலில், கொரோனாவுடன் சேர்ந்து அக்னி நட்சத்திரமும் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் மக்கள் அவரவர் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், கத்தரி வெயில் தன் வெப்பநிலையைக் கணிசமாக அதிகரித்துவிட்டது என்பதே நிதர்சனம்.

லாக்டௌன் 3.0 விதிகள் அமலுக்கு வந்ததால், தனிநபர் போக்குவரத்தில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. ஆரஞ்ச் மற்றும் பச்சை பகுதிகளில் இருக்கக்கூடிய நகரங்களில் டாக்ஸி மற்றும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், ஓலா தனது டாக்ஸிகளில் ஏசி பயன்படுத்த வேண்டாம் எனத் தனது ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Cleaning Car Cabin
Cleaning Car Cabin
Autocar India

மேலும், கார்களில் இருக்கும் ஏசி வெளியிடும் காற்றைத் தூய்மைப்படுத்த, Cabin Sterlisation முறையைப் பின்பற்ற எம்ஜி மற்றும் கீலி ஆகிய நிறுவனங்கள் முடிவுசெய்திருக்கின்றன. மேலும், சமீபத்திய அறிமுகத்தில் பலத்த வரவேற்பைப் பெற்ற க்ரெட்டாவில், Air Purifier இருந்தது தெரிந்ததே. இப்படி, ஏசி-யின் தேவை அதிகரித்திருக்கும் நேரத்தில், அதைப் பயன்படுத்தும்போது கவனமாக இருப்பதன் அவசியத்தை, தொற்றுநோயான COVID-19 ஏற்படுத்தியிருக்கிறது என்பதே நிதர்சனம்.

`இந்தியாவில் 2020 ஏப்ரல் மாத கார் விற்பனை!' - அதிர்ச்சி கொடுத்த கொரோனா

கார் ஏ/சி-யில் அப்படி என்ன இருக்கு?

Blower Speed
Blower Speed
Autocar India

ஏ/சி, பல்வேறு பாகங்கள் ஒன்றிணைந்தால்தான் இந்த அமைப்பு வேலை செய்யும். Evaporator, Blower, Expansion Valve, Compressor, Drier, Condenser என இந்தப் பட்டியல் கொஞ்சம் பெரிதுதான். கார் ஏ/சிக்குள் இத்தனை விஷயங்கள் இருப்பதால், எது சரியாக இயங்கவில்லை அல்லது எது சுத்தமாக இல்லை என்பதைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினம்தான். வெயிலில் நிற்கும் வாகனத்தை எடுக்கும்போது, கேபின் எந்த அளவுக்கு வெப்பமாக இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். சில சந்தர்ப்பங்களில், 60 டிகிரிக்கும் அதிகமாக (உபயம்: காரின் இரும்புப் பாகங்கள் மற்றும் கேபின் ப்ளாஸ்டிக்ஸ்) இது இருப்பதற்கு சாத்தியம் உண்டு. இது சீராக இயங்க, பின்வரும் விஷயங்களைக் கருத்தில்கொள்ளவும்.

`பழைய டயர்கள் மூலம் கொரோனா விழிப்புணர்வு!’ - செங்கல்பட்டு இளைஞரின் முயற்சி

1. எப்போதும் காருக்குள் நுழைந்தவுடனேயே ஏசியை ஆன் செய்யாமல், சில நிமிடங்கள் Blower-யை முழு வேகத்தில் இயங்கவிடவும். இந்தச் சமயத்தில், கதவு கண்ணாடிகளைத் திறந்துவைத்திருக்கவும். வெளியே இருக்கும் தட்பவெப்பநிலையும் காரின் வெப்பநிலையும் ஒத்துப்போகும் நிலை வரும்போது, கண்ணாடிகளை ஏற்றிவிட்ட பிறகு, ஏசியை ஆன் செய்யலாம். பார்க் செய்யப்பட்ட காரின் கேபின் சூடாக இருப்பதைத் தவிர்க்க, கதவுக் கண்ணாடிகளைக் கொஞ்சம் கீழிறக்கி வைத்திருப்பது நல்லது. இல்லையெனில், வெளியே இருக்கும் வெப்பத்தைவிட, காருக்குள்ளே 10-15 டிகிரி அதிக வெப்பம் நீடிக்கும்.

AC Cooling
AC Cooling
Autocar India

2. அழுக்கும் ஈரப்பதமும்தான் ஏசியின் மிகப்பெரிய வில்லன்கள். சுற்றுச்சுழலில் இவை அதிகமாக இருப்பதால், ஏசியின் ஃபில்டர் மற்றும் Condensor ஆகியவற்றில் அடைப்பு ஏற்படுவது வாடிக்கைதான். இதனால் கூலிங் காயில் மேலே செல்ல வேண்டிய காற்றின் அளவு சீராக இருக்காது. அடுத்தபடியாக அழுக்கு ஏற்படக்கூடிய இடம், ஃபேன் யூனிட் எனப்படும் Blower. சிறுசிறு காகிதம் மற்றும் கழிவுகள்கூட இதில் படர்வதைப் பார்க்கலாம்.

3. Refrigerant லீக் ஆவதும், வழக்கமாக நடக்கும் பிரச்னைதான். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் R134A - Grade Refrigerant தான் பயன்படுத்தப்படுகிறது. இது குறைவான கொதிநிலையைக் கொண்டிருப்பதால், ஏசியின் பல்வேறு இடங்களில் (Pipe Joints, Pressure Release Valve, Front Seal of Compressor) இருந்தும் இது லீக் ஆகும். Refrigerant டாப்-அப் செய்வதற்கு என ஒரு மெஷின் இருக்கிறது. இதன் பெயர் Recovery Recycling & Gas Recharging ஆகும். ஓசோன் படலத்துக்கு R134A எந்த விதமான தீங்கும் செய்யாது என்றாலும், ஏ/சி அமைப்பில் இதை மீண்டும் நிரப்பும்போது கவனம் தேவை.

Recovery Recycling & Gas Recharging Machine
Recovery Recycling & Gas Recharging Machine
Autocar India

4. ஏ/சியில் விலை அதிகமான பாகங்களில் பிரதானமானது Compressorதான். ஆயில் Rings-ல் லீக் ஏற்பட்டால் அல்லது Magnetic Ring/Piston ஆகியவற்றின் தேய்மானம் அதிகரித்தாலோ, Compressor செயல் இழந்துவிடும். ஏ/சி சரியாக பராமரிக்கப்படவில்லை அல்லது அதிகப்படியான பயன்பாடு இருந்தாலோ இது நடக்கக்கூடும். பூச்சிகள் Blower அமைப்பில் சென்று சிக்கிக் கொள்ளும்போது, ஏ/சியின் இயக்கம் சரிவர இருக்காது.

5. காரின் முன்பகுதியில் Condensor Coil மற்றும் டேஷ்போர்டின் பின்னால் Blower-ம் இருப்பதால், வெளியே இருக்கும் தூசு மற்றும் துகள்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். கேபினில் இருக்கும் சூட்டை, காருக்கு வெளியே கொண்டு சேர்ப்பதே Condenser-ன் பணி. எனவே, இவை இரண்டுமே சுத்தமாக இருப்பது அவசியம். ரேடியேட்டருக்குக் கீழேதான் Condensor Unit இருக்கும் என்பதால், இதைத் தண்ணீரால் சுத்தப்படுத்த, முன்பக்க பம்பரைக் கழற்ற வேண்டும். இந்த நேரத்தில் ஹாரன் மற்றும் ஹெட்லைட்டின் வயரிங்கை நீக்க வேண்டும். எனவே, இதை சர்வீஸ் சென்டர்களில் செய்வது நலம்.

Door Window Glass
Door Window Glass
Autocar India

6. ஏ/சி அமைப்பில் இருக்கும் அடைப்புகளை நீக்குவதற்கு எனப் பிரத்யேகமான Cleaning Reagents கிடைக்கின்றன. கேபினில் இருக்கும் ஃபில்டர் தூய்மையாக இருப்பதே நல்லது. கார்களைப் பொறுத்து, இது Paper அல்லது Wire Mesh என இரு வகைகளில் இருக்கும். ஹூண்டாய் கார்களில் Eco Coating தொழில்நுட்பம் இருப்பதால், காருக்குள்ளே மாசற்ற காற்று வருவதற்கு வழிவகை செய்யப்படும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஃபில்டர் Blower-க்குள்ளேயே இருக்கும் என்பதால், இதைச் சுத்தப்படுத்தும்போது Blower-யையும் சேர்த்துச் சுத்தமாக்கிவிடலாம். இதனால் ஏ/சி வென்ட்களில் காற்று தடையில்லாமல் வரும். ஆனால், இதையும் சர்வீஸ் சென்டர்களில்தான் செய்ய வேண்டும்.

7. மலைப் பிரதேசங்கள் அல்லது குளுமையான பகுதிகளில்தான் ஏ/சி பயன்பாடு குறைவாக இருக்கும். எனவே, சராசரியாகப் பார்த்தால், வருடத்துக்கு ஒருமுறையாவது ஏ/சியை சர்வீஸ் செய்வது நன்மை தரும். அப்போது மறவாமல் இதன் எலெக்ட்ரிக்கல் வயரிங்கையும் பரிசோதித்துவிட வேண்டும் (எலிகள் கடித்து விளையாடாமல் இருந்தால் சரி). டீலர்/ஸ்பெஷலிஸ்ட் சென்டர் என எங்கு வேண்டுமானாலும் இதை நீங்கள் செய்யலாம். இதற்குச் சுமார் 3,000 ரூபாய் வரை செலவாகும்.

AC Disinfectant Spray
AC Disinfectant Spray
Autocar India
கார் டிசைனர் ஆகவேண்டுமா? - 5 நாள் ஆன்லைன் வொர்க்‌ஷாப்!

8. ஏ/சி சீராக இயங்க, கேபினும் சுத்தமாக இருக்க வேண்டும். அதன்படி Floor Mat, சீட்கள், டேஷ்போர்டு, கதவுகள் தூசு இல்லாமல் இருக்க வேண்டும். கூலன்ட், Compressor ஆயில் ஆகியவை கச்சிதமான அளவுகளில் எப்போதுமே இருக்க வேண்டும். ஏர் வென்ட்களில் இருந்துவரும் காற்று வித்தியாசமான மனமுடன் இருந்தால், Bacteria/Fungus உள்ளே இருக்கின்றன என அர்த்தம். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய, AC Disinfectant பயன்படுத்தலாம். இது, ஸ்ப்ரே பாட்டில் வடிவில் கடைகளில் கிடைக்கும் (உத்தேசமாக 1,000 ரூபாய்). நாம் பைக்கின் செயினுக்கு ஸ்பிரே அடிப்பதுபோல, ஏசி வென்ட்களில் இந்த AC Disinfectant-யை அடித்துவிடலாம்.

அடுத்த கட்டுரைக்கு