Published:Updated:

ரொம்ப நாள் கழிச்சு கார், பைக்கை எடுக்கப் போறீங்களா? இதிலெல்லாம் கவனம் தேவை பாஸ்!

Car Maintenance
Car Maintenance

கார், பைக் - Lockdown Maintenance Tips

ஊரடங்குக்கு அடங்கிக் கிடந்தவர்கள், இப்போது அலெர்ட்டாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. வாரக்கணக்காக லாக்டெளனில் நிறுத்தி வைத்திருந்த பைக், கார்களைத் தூசு தட்டிக் கிளப்பத் தயாராக இருப்பீர்கள். காய்கறிக் கடைகள், மளிகைப் பொருள்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் மாதிரி, ஒருவழியாக பைக் சர்வீஸுக்கும் அனுமதி கொடுத்துவிட்டது அரசு. ஓகே. ரொம்ப நாள் கழிச்சு வாகனங்களை எடுக்கிறீங்க... என்னென்ன கவனிக்கணும்!?
Over all Service
Over all Service
 • நீண்ட நாள் கழித்து வாகனங்களை எடுக்கும்போது, முதலில் செய்ய வேண்டியது இதுதான். நாளைக்குத்தான் கிளம்பணும் என்றால், ஆபீஸுக்குக் கிளம்பும்போதுதான் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும் என்றில்லை; முந்தின நாளே அதற்கான ஆயத்தங்களைச் செய்து விடுங்கள்.

 • ரொம்ப நாள்களாக நின்றிருந்த பைக்கை, எடுத்தவுடனேயே பட்டன் ஸ்டார்ட் செய்து படுத்தி எடுக்காதீர்கள். கிக் ஸ்டார்ட் செய்து, 5 நிமிடங்கள் வரை ஐடிலிங்கில் விட்டு அப்புறம் கிளம்புங்கள். அதேபோல் கார்கள் என்றால், பேட்டரி எந்த கண்டிஷனில் இருக்கும் என்று தெரியாது. அதனால், கார்களுக்கு 15 - 20 நிமிடங்கள் ஐடிலிங் அவசியம்.

Engine Start
Engine Start
 • கார்களை நீண்ட நாள் கழித்து ஸ்டார்ட் செய்ய இருந்தால்… ஏசி புளோயர், ஹெட்லைட் எல்லாவற்றையும் ஆஃப் செய்துவிட்டு ஸ்டார்ட் செய்யுங்கள். எல்லா ஜன்னல்களையும் இறக்கிவிட்டு, 5 நிமிடம் புளோயரை மட்டும் ஓடவிட்டு, அப்புறம் ஜன்னலை இறக்கிவிட்டு ஏசியை ஆன் செய்யுங்கள். கெட்ட காற்று போயே போச்சு!

AC vents
AC vents
மதுர மக்கள்: "10 கார், 14 டூவீலர்னு ஆரம்பிச்சது, இப்ப இங்க வந்து நிக்குது!"- வின்டேஜ் கலெக்டர் ராஜன்
 • ரொம்ப நாள்கள் நின்றிருந்ததால், கார்களுக்கும் சரி; பைக்குக்கும் சரி - மொத்த வாகனத்தின் எடையையும் டயர்கள் தரையில் தாங்கி அழுத்திப் பிடித்திருப்பதால், காற்று குறைந்து ஃப்ளாட் டயர் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்கும்.எனவே, முதல் வேலையாக பெட்ரோல் பங்க்குக்குச் சென்று முதலில் காற்றை நிரப்புங்கள்.

Air pressure
Air pressure
 • எப்போதுமே பைக்கை சென்டர் ஸ்டாண்ட் போட்டே பழகுங்கள். சைடு ஸ்டாண்ட் போட்டு லாக்டெளனில் பைக்கை நிறுத்தியவர்களுக்கு பேட்டரி டிரெய்ன் ஆகும் வாய்ப்பு அதிகம்.

 • பெட்ரோல் போட்டு ரொம்ப நாட்களாக பைக்கை ஒருதடவைகூட எடுக்காதபட்சத்தில், தயவுதாட்சண்யம் பாராமல் முழுவதுமாக டிரெய்ன் செய்வது நல்லது. காரணம், ரொம்ப நாள்களாக அந்த பெட்ரோல் ஜெல்லி மாதிரி இறுகிப் போயிருக்கும். இதனாலும் ஸ்டார்ட்டிங் ட்ரபுள் ஏற்படும். காராக இருந்தால் இது கஷ்டம். அதனால்தான் தினமும் ஸ்டார்ட் செய்து ஐடிலிங்கிலாவது வைக்க வேண்டும். அதற்குத்தான் டேங்க் ஃபுல்லாக இருந்தால் பிரச்னை இருக்காது.

Bike Centre Stand
Bike Centre Stand
 • நட்பான மெக்கானிக்குகள் இருக்கும் பட்சத்தி்ல், அவர்களை வீட்டுக்கே வரவழைத்து ஒருமுறை செக் செய்துவிட்டு பைக்கை எடுங்கள்.

 • ஃபுட் பெக், சாவி துவாரம், செயின் ஸ்ப்ராக்கெட் எப்படியும் நிச்சயம் தூசு, மண் படிந்து இறுக்கமாகி விட்டிருக்கும். கியர் ஆயில் அல்லது செயின் ஸ்ப்ரே அடித்து லூப்ரிகேட் செய்துவிட்டு பைக்கை எடுங்கள்.

Local mechanic
Local mechanic
Summer Camp: ஜாலியா கார் வரையலாம்; கார் டிசைனர் ஆகலாம்; கார் ஓட்டலாம்!
 • எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொருத்தவரை நீ்ண்ட நாள்களாக பார்க் செய்யப் போகிறீர்கள் என்றால், VE டெர்மினலைக் கழற்றி வைத்துவிடுவது நல்லது. இப்போது மீண்டும் மாட்டி - ஸ்லோ சார்ஜரில் 100% SOC வரும் வரை பொறுமையாக முந்தின நாளே சார்ஜ் ஏற்றுங்கள். எடுத்தவுடனேயே ஃபாஸ்ட் சார்ஜிங் வேண்டாம்.

 • ரொம்ப நாள்களாக நிறுத்தி இருந்ததால், கார்களுக்குள் கிருமிகள் படர வாய்ப்புண்டு. எனவே ஸ்டீயரிங் வீல், கியர்லீவர் மற்றும் இன்டீரியரை ஷாம்பூ மற்றும் சோப் வாட்டர் ஸ்ப்ரே கொண்டு சுத்தப்படுத்துதல் நல்லது. ஏசி கார்களில் சானிட்டைஸர் பயன்படுத்துவது சிலருக்கு மூச்சுப் பிரச்னையை ஏற்படுத்தலாம்.

Clean with soap water
Clean with soap water
 • ரொம்ப நாள்களாக காரை நிறுத்தி வைக்கும்போது ஹேண்ட்பிரேக் பயன்படுத்துவதை கார் நிறுவனங்களே ரெக்கமண்ட் செய்வதில்லை. அதற்குப் பதிலாக கார் நகராமல் இருக்க டயர்களுக்குக் கீழே டயர் ஸ்டாப்பர் வைப்பது நல்லது. காரை எடுக்கும்போது ஹேண்ட் பிரேக், டயர் ஸ்டாப்பர் எடுத்துவிட்டுக் கிளப்ப மறக்காதீர்கள்!

 • ரெண்டு நாள் காரை ஸ்டார்ட் செய்யவில்லை என்றாலே எலிகள் காருக்குள் கும்மியடிக்க ஆரம்பித்து விடும். எனவே, பானெட்டைத் திறந்து ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள். அதேபோல், சென்டர் கன்ஸோலில் எந்த வார்னிங் சிம்பலும் இல்லாத பட்சத்தில் மட்டும்தான் காரைக் கிளப்ப வேண்டும். எலிகள், ஒயர்களைக் கடித்திருந்தால் நிச்சயம் இன்ஜின் டிஸ்ப்ளே வார்னிங் ஒளிரும்.

Avoid car rat issue
Avoid car rat issue
 • முக்கியமாக, சர்வீஸ் சென்டர்கள் நீண்ட நாள்கள் கழித்துத் திறந்திருப்பதால், உங்களைப் போன்று எல்லோரும் வரிசை கட்டிக் கொண்டு நின்றிருப்பார்கள். நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் எல்லாமே வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும். எனவே, தேவையென்றால் கொஞ்ச நாள் கழித்துக்கூட சர்வீஸ் விட்டுக் கொள்ளுங்கேளன்! பைக் என்றால், தற்காலிகமாக ஆயிலை மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள்.

Car Insurance
Car Insurance
 • மிக முக்கியமாக இந்த லாக்டெளன் காலகட்டத்தில் உங்கள் வாகனத்தின் இன்ஷூரன்ஸ் காலாவதி ஆகியிருக்கலாம். கவனம்!

அடுத்த கட்டுரைக்கு