Published:Updated:

கார் ஸ்டார்ட் ஆகலையா... என்ன காரணம்? - கவனிக்கவேண்டிய விஷயங்கள்

சர்வீஸ் அனுபவம்
சர்வீஸ் அனுபவம்

பொதுவாக, கார் ஸ்டார்ட் ஆகாததற்கு நிறைய காரணங்கள் உண்டு. உதாரணத்துக்கு...

* முதலில் எல்லோரும் செக் செய்வது பேட்டரியைத்தான். பேட்டரி சார்ஜிங்கில் இல்லாமல் இருந்தால், கார் ஸ்டார்ட் ஆகாது. இப்போது ஜம்பர் கேபிள் வைத்தும் ஸ்டார்ட் செய்யலாம். ஆனால், டெர்மினலைத் தவறாக மாற்றிவிட்டால், பேட்டரி வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே, கவனம்.

* பெட்ரோல் கார் என்றால், ஸ்பார்க் ப்ளக்கும் காரணமாக இருக்கலாம். மழை நீர், கார்பன் போன்றவற்றால் இது ஏற்பட்டிருக்கலாம். டீசல் வாகனம் என்றால், ஃப்யூல் பம்ப்பில் பிரச்னையும் இருக்கலாம். ஃப்யூல் இன்ஜெக்ட் ஆகவில்லை என்றால், கார் ஸ்டார்ட் ஆகாது.

கார் ஸ்டார்ட்டிங்
கார் ஸ்டார்ட்டிங்

* நீண்ட நாட்கள் காரை நிறுத்தி வைத்திருக்கும்போது, எரிபொருள் கண்டாமினேட் ஆக வாய்ப்புண்டு. இதனால், எரிபொருளில் பாசி படர்ந்து எரிபொருள் இன்ஜினுக்கு சப்ளை ஆவதில் திணறல் ஏற்படலாம்.

* நீண்ட நாட்கள் நிறுத்தி வைத்திருந்த காரில், எலி கடித்து ஒயரிங் கட் ஆகியிருந்தால் கார் ஸ்டார்ட் ஆவதில் திணறல் இருக்கும். மால்பங்ஷன் வார்னிங் லைட் க்ளஸ்ட்டரில் நிச்சயம் தெரியும். கவனம் தேவை.

* எது எப்படியோ, கார் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்வது கார் ஸ்டார்ட் ஆவது.. அதிர்ஷ்டம்தான். இது ரெக்கமண்டட் இல்லை. சொல்லப்போனால், இது எப்போதுமே ஆபத்துதான். கேம்ஷாஃப்ட் உடைந்து, பர்ஸுக்குத்தான் வெடி வைக்கும்.

- நீண்ட நாட்கள் கழித்து ஒரு பைக்கை எடுக்கிறீர்கள். ஸ்டார்ட் ஆகவில்லை. விஷய ஞானமுள்ளவர்கள் என்றால், ஓரளவு ஸ்பார்க் ப்ளக்கைக் கழற்றிச் சுத்தம் செய்து, பேட்டரியை சார்ஜ் செய்து என்று தெரிந்தவரை முயற்சிப்பார்கள். இதுவே காருக்கு இப்படி ஒரு பிரச்னை வந்தால்?

கார் ஸ்டார்ட்டிங்
கார் ஸ்டார்ட்டிங்

இந்த நேரத்தில் காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாமா? அதாவது, 'புஷ் ஸ்டார்ட்' செய்யலாமா? காரைத் தள்ளிவிடுவதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் தெரியுமா?

- உதாரண சம்பவத்துடன் கூடிய முழுமையான வழிகாட்டுதலை மோட்டார் விகடன் இதழில் வாசிக்க > ஆ... தள்ளு... தள்ளு! - காரைத் தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்யலாமா? - சர்வீஸ் அனுபவம் https://bit.ly/2GZZq4u

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு