Published:Updated:

lexus: "கார் ஷோருமா! பட்டுப் புடவை ஷோரூமா!" - லெக்ஸஸ் ஷோரூம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!|video

லெக்ஸஸ் ஷோரூம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்து கொண்ட லெக்ஸஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான நவின் சோனி.

ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான சொகுசுக் கார் நிறுவனம் லெக்ஸஸ். இந்த லெக்ஸஸ் நிறுவனத்தின் 6-வது கெஸ்ட் எக்பீரியன்ஸ் சென்டரைத் (ஷோரூம்) திறந்து வைக்க லெக்ஸஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான நவின் சோனி சென்னை வந்திருந்தார். இந்த லெக்ஸஸ் ஷோரூம் வழக்கமான கார் ஷோரூம் போல் இல்லை. `கார் ஷோருமா! பட்டுப் புடவை ஷோரூமா?’ என்று கேட்கும் அளவுக்கு ஷோரூமின் விதானம் தொடங்கி சுவர்கள் வரை காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் மற்றும் ஷோரூம் நெடுகிலும் பட்டுப் புடவை நெய்யப்படும் கைத்தறிகளில் காணப்படும் பட்டு நூல்கள் என வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அதேபோல சுவருக்கோ தரைக்கோ டைல்ஸ் போடாமல், பாரம்பரிய முறைப்படி பூசியும் பூசாமல் இருக்கும் ஃபினிஷோடு விட்டிருந்தார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றி லெக்ஸஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான நவின் சோனியிடம் கேட்டோம். "லெக்ஸஸ் எந்த ஊரில் கெஸ்ட் எக்பீரியன்ஸ் சென்டர் திறந்தாலும், (ஷோரூம் என்று சொல்லக்கூடாதாம்!) அந்த ஊரின் பாரம்பரியப்படித்தான் அதற்கு உள்ளலங்காரம் செய்வோம்! தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காஞ்சிபுரம் பட்டுப் புடவை நெசவாளர்கள். அதேபோல ஜப்பானில் கைவினைக் கலைஞர்கள் நிறைந்த ஒரு பகுதி என்றால், அது அந்நாட்டில் இருக்கும் `கொய்ட்டோ’ என்கிற பகுதி. இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டரில் இந்த இரண்டு கைவினைக் கலைஞர்களின் தாக்கத்தையும் பார்க்க முடியும்!" என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism