Published:Updated:

Citroen C21: சிட்ரனின் `Made In India’ காம்பேக்ட் எஸ்யூவியில் என்ன எதிர்பார்க்கலாம்?

சிட்ரன் காம்பேக்ட் எஸ்யூவி
சிட்ரன் காம்பேக்ட் எஸ்யூவி ( Autocar India )

விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ, நெக்ஸான், எக்கோஸ்போர்ட், XUV3OO ஆகியவற்றுக்குப் போட்டியாக வரப்போகும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி, 90-95% உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டிருக்கும். இதனால், காரின் தொடக்க விலை 7 லட்ச ரூபாய் வாக்கில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது!

ரெனோவைப் போலவே, பிரெஞ்ச் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரப்போகும் அடுத்த கார் தயாரிப்பாளரான சிட்ரனின் முதல் மாடலைப் பற்றிப் பார்த்திருப்போம். CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, C5 ஏர் க்ராஸ் இங்கே அசெம்பிள் செய்யப்படும் என்பதால், அதன் விலை கொஞ்சம் அதிகம்தான். அடுத்தபடியாக ஒரு காம்பேக்ட் எஸ்யூவியை இந்த நிறுவனம் கொண்டு வரவிருக்கிறது.

C3 Hatchback
C3 Hatchback
Citroen

தனது C-Cubed திட்டத்திற்கேற்ப (Cool, Comfort, Clever), Made In India பாணியில் இந்த C21 காரைத் (குறியிட்டுப் பெயர்) தயாரிக்க உள்ளது சிட்ரன். விட்டாரா பிரெஸ்ஸா, வென்யூ, நெக்ஸான், எக்கோஸ்போர்ட், XUV3OO ஆகியவற்றுக்குப் போட்டியாக வரப்போகும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி, 90-95% உள்நாட்டு உதிரிபாகங்களைக் கொண்டிருக்கும் என்பது ப்ளஸ். இதனால் காரின் ஆரம்ப விலை 7 லட்ச ரூபாய் வாக்கில் இருப்பதற்கான சாத்தியம் உள்ளது!

`2019-ல் எங்களின் தலைவராக இருந்த கார்லோஸ் டவாராஸ் கூறியபடி, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு - உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவிருக்கும் காரின் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும்' என PSA குழுமம் தெரிவித்துள்ளது. 2021-ல் வரப்போகும் இதைத் தொடர்ந்து, ஒரு ப்ரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் செடான் ஆகியவற்றை சிட்ரன் வரிசையாகக் களமிறங்கக்கூடும்.

C3 Hatchback
C3 Hatchback
Citroen

PSA குழுமத்தின் விலை உயர்ந்த EMP2 பிளாட்ஃபார்மில், C5 ஏர் க்ராஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், வருடத்துக்கு ஒரு புதிய கார் என்ற ரீதியில் இயங்கப்போகும் இந்த நிறுவனத்தின் Made In India மாடல்கள், Common Modular Platform (CMP)-யில்தான் தயாரிக்கப்பட உள்ளன. ஏனெனில் இந்தியா போன்ற வளர்ந்துவரும் சந்தைகளுக்கு ஏற்ப இந்த ப்ளாட்ஃபார்ம் இருப்பதே இதற்கான காரணம். சிட்ரனின் முந்தைய EMP1தான், CMP ஆக உருமாறியுள்ளது.

தவிர, Peugeot நிறுவனம் லத்தின் அமெரிக்காவில் விற்பனை செய்யும் பட்ஜெட் கார்கள், இந்த ப்ளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படுகின்றன. மற்றபடி, சர்வதேச சந்தைகளில் PSA குழுமம் விற்பனை செய்யும் C3 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டு, இந்த காம்பேக்ட் எஸ்யூவி வடிவமைக்கப்படும். எனவே, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் NA இன்ஜின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் DV5 டர்போ டீசல் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள், சிட்ரனின் முதல் Made In India காரில் இடம்பெறலாம்.

C5 Air Cross SUV
C5 Air Cross SUV
Citroen
Vikatan

வழக்கமான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் தவிர, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைப் பின்னாளில் எதிர்பார்க்கலாம். Peugeot 208 காரின் பாடியில், இந்த காம்பேக்ட் எஸ்யூவி தற்போது டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. தனக்கே உரித்தான பாணியில், வித்தியாசமான டிசைனில் இந்த காம்பேக்ட் எஸ்யூவியை சிட்ரன் தயாரிக்கும் என்று தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு