Published:Updated:

சிட்ரன் C5 ஏர் க்ராஸ் எஸ்யூவி... அடுத்த ஆண்டில்தான் இந்தியா வரும்!

சிட்ரன் C5 ஏர் க்ராஸ்
News
சிட்ரன் C5 ஏர் க்ராஸ் ( Citroen )

டெக்னிக்கல் விவரங்களின் அடிப்படையில், டாடா ஹேரியர் - MG ஹெக்டர் - மஹிந்திரா XUV5OO ஆகியவற்றுக்கு போட்டியாக வரும் C5 ஏர் க்ராஸ், அதைவிட ஏறக்குறைய 50% அதிக விலையில் வரப்போவது முரண்தான்.

கொரோனா வைரஸ், சிட்ரனின் இந்திய அறிமுகத்தைக் கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறது. ஆம், இந்த ஆண்டின் இறுதியில் C5 ஏர் க்ராஸ் களமிறங்கவிருந்த நிலையில், அது தற்போது ஜனவரி - மார்ச் 2021 வாக்கில் களமிறங்கும் எனத் தெரிகிறது. தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் மக்களின் மனநிலையும் இந்த காலதாமதத்துக்கான மற்றுமொரு காரணம். ஏனெனில் CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளது C5 ஏர் க்ராஸ்.

C5 Aircross
C5 Aircross
Citroen

இதனால் இந்த எஸ்யூவி-யின் எக்ஸ்-ஷோரூம் விலையே 30 லட்ச ரூபாயாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது! எனவே, நம் நாட்டில் இது விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என சிட்ரனே எதிர்பார்க்கவில்லை. மாறாகத் தனது பிராண்டை நம் மக்களிடம் கொண்டுசேர்க்கக்கூடிய தயாரிப்பாகவே இது இருக்கும் (கியாவுக்கு செல்ட்டோஸ் போல).

டெக்னிக்கல் விவரங்களின் அடிப்படையில், டாடா ஹேரியர் - MG ஹெக்டர் - மஹிந்திரா XUV5OO ஆகியவற்றுக்குப் போட்டியாக வரும் C5 ஏர் க்ராஸ், அதைவிட ஏறக்குறைய 50% அதிக விலையில் வரப்போவது முரண்தான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனது ‘La Maison’ (ஃப்ரெஞ்ச் மொழியில் வீடு என அர்த்தம்) கான்செப்ட் படி அமைக்கப்பட்ட 15 டீலர்களை, முதற்கட்டமாக நம் நாட்டில் நிறுவ உள்ளது சிட்ரன். அகமதாபாத்தில் இந்த நிறுவனத்தின் முதல் டீலர்ஷிப்பின் கட்டுமானம், பிப்ரவரியின் இறுதியிலேயே முடிந்துவிட்டது. இதில் 5-6 கார்களை நிறுத்துவதற்கான இடமிருப்பதுடன், விர்ச்சுவல் - டிஜிட்டல் அம்சங்களும் உண்டு. ஆனால், COVID-19 இந்தப் பணிகளையும் பாதித்திருப்பதே நிதர்சனம்.

La Maison
La Maison
Citroen

இந்த 4.5 மீட்டர் நீளமுள்ள மிட்சைஸ் எஸ்யூவி, அதன் வித்தியாசமான டிசைன்- சொகுசான கேபின் - பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸ் ஆகியவற்றுக்காக நன்மதிப்பைப் பெறலாம். இதில் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள், இந்தியாவுக்காக பரிசீலனையில் உள்ளன. PSA-CK Birla கூட்டணிக்குச் சொந்தமாக, ஓசூரில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. 131bhp பவரைத் தரும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் இங்கே தயாரிக்கப்படுகிறது. எனவே, நகரப் பயன்பாட்டுக்கு உகந்த இந்த 4 சிலிண்டர் இன்ஜினே, C5 ஏர் க்ராஸில் பொருத்தப்படுவதாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், இந்த எஸ்யூவியின் ப்ரீமியம் பொசிஷனிங்கைக் கருத்தில்கொண்டு, 180bhp பவரைத் தரும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினைப் பயன்படுத்த முடிவுசெய்துள்ளது சிட்ரன். 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதால், அதற்கான சுங்கவரி காரின் விலையில்தான் சேரும். ஃபோக்ஸ்வாகன் டிகுவான், ஸ்கோடா கோடியாக் ஆகியவற்றில் BS-6 மாடல்களில் டீசல் இன்ஜின் இல்லாததால், சிட்ரனுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

C5 Aircross Cabin
C5 Aircross Cabin
Citroen

போட்டியாளர்களைப் போல பல்வேறு வேரியன்ட்களில் வராமல், ஒரே டாப் வேரியன்ட்டில் C5 ஏர் க்ராஸ் இந்தியாவில் கால்பதிக்க உள்ளது. 6 காற்றுப்பைகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், Hands Free டெயில் கேட், LED DRL உடனான ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ், பனரோமிக் சன்ரூஃப், Powered டிரைவர் சீட், 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் மீட்டர், டைமண்ட் கட் அலாய் வீல்கள், இரட்டை எக்ஸாஸ்ட், LED டெயில் லைட்ஸ், புஷ் பட்டன் ஸ்டார்ட், ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங், ரியர் ஏசி வென்ட்கள், ரிவர்ஸ் கேமரா என அதிக வசதிகள் இருப்பது பெரிய ப்ளஸ்.