Published:Updated:

`கோவையில் மின் வாகன தொழிற்சாலை; மாதம் 4,000 வாகனங்கள்!' - சி.கே.மோட்டார்ஸின் புதிய திட்டம்

C.K.Motors E-Vehicles
C.K.Motors E-Vehicles

இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று சக்கர மின்வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர மின் வாகனங்களும் தயாரிக்கவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சி.கே.மோட்டார்ஸ் (C.K.Motors) நிறுவனம் தமிழகத்தில் மின் வாகனங்களின் உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ப்யூர் இவி (Pure EV) நிறுவனத்துடன் இணைந்து மின் வாகனங்களைத் தயாரிக்கவிருப்பதாக அந்நிறுவனத்தின் வியாபாரத் தலைவர் குணசேகரன் தெரிவித்தார். கடந்த புதன்கிழமை சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் புதிய மின் வாகனங்களை அறிமுகப்படுத்தியது சி.கே. மோட்டார்ஸ் நிறுவனம்.

E-Trance (Moped)
E-Trance (Moped)

இ-சைக்கிள், இ-மொபெட் மற்றும் இ-ஸ்கூட்டர் என மூன்று பிரிவுகளில் ஐந்து வாகனங்களை அறிமுகப்படுத்தியது சி.கே.மோட்டார்ஸ் நிறுவனம். இ-ஸ்கூட்டர் அதிகபட்சமாக 60 கி.மீ வேகமும் ஒருமுறை சார்ஜ் செய்தால் எகோ மோஃடில் 120 கி.மீ தூரமும் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் குணசேகரன். இந்த மின் வாகனங்களில் லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அவை போர்டபிள் பேட்டரி என்பது சிறப்பு. சார்ஜிங்கைப் பொறுத்தவரை, முதல் ஒரு மணி நேரத்திலேயே 80 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகிவிடும். 20 சதவிகிதம் அடுத்த 2 மணி நேரத்தில் சார்ஜ் ஆகிவிடும். எனவே, அவசரமான நேரங்களில் மிகவும் சிரமம் இருக்காது எனத் தெரிவித்துள்ளது சி.கே.மோட்டார்ஸ் நிறுவனம். இதுதவிர லித்தியம் அயன் பேட்டரிகளையும் தனிப்பட்ட முறையில் விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது அந்நிறுவனம்.

Vikatan
E-Pluto scooter
E-Pluto scooter

தமிழகத்தில் அடுத்த இரண்டு மாதங்களில் தயாரிப்பு தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், முதற் கட்டமாக தமிழகத்தின் 50 நகரங்களில் டீலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று சக்கர மின்வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர மின் வாகனங்களும் தயாரிக்கவிருக்கிறோம். 10 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையில் தொடங்கப்படவுள்ள புதிய தொழிற்சாலை மூலம் மாதம் 4,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன" என்று அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு