Published:Updated:

”ஆக்டிவாவை ஹைபிரிட்டாக மாத்திட்டேன்!”

அன்பரசு
பிரீமியம் ஸ்டோரி
அன்பரசு

கோவை தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பரசு என்கிற இளைஞர், ஹோண்டா ஆக்டிவா பைக்கை ஹைபிரிட்டாக கன்வெர்ஷன் செய்துள்ளார்.

”ஆக்டிவாவை ஹைபிரிட்டாக மாத்திட்டேன்!”

கோவை தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பரசு என்கிற இளைஞர், ஹோண்டா ஆக்டிவா பைக்கை ஹைபிரிட்டாக கன்வெர்ஷன் செய்துள்ளார்.

Published:Updated:
அன்பரசு
பிரீமியம் ஸ்டோரி
அன்பரசு

பெட்ரோல், டீசல் விலை தினசரி ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது. ‘நமக்கு இ-பைக் தான் சரி’ என்று மக்கள் ஒரு மனதாக முடிவு எடுக்கும் நேரத்தில், ஆங்காங்கே பேட்டரி வெடித்து உயிரிழப்புகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இக்கட்டான காலகட்டத்தில், கோவை தொண்டாமுத்தூர் கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அன்பரசு என்கிற இளைஞர், ஹோண்டா ஆக்டிவா பைக்கை ஹைபிரிட்டாக கன்வெர்ஷன் செய்துள்ளார். அதாவது, பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் என்று நாம் தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியைச் செய்துள்ளார்.

அன்பரசுவைச் சந்தித்துப் பேசினன். “அப்பாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். வீட்ல டி.வி, ஃபேன் எல்லாம் அப்பாவே ரிப்பேர் பண்ணுவார். அதனால சின்ன வயசுல இருந்தே எனக்கும் எலெக்ட்ரிக்கல்லதான் ஆர்வம் அதிகம். டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் படிச்சுருக்கேன். எனக்குப் பிடிச்ச மாதிரி எல்லா வசதியும் வெச்சு ஒரு சைக்கிள் வடிவமைச்சேன். சோலார்ல 24 மணி நேரம் எரியுற மாதிரி லைட் கண்டுபிடிச்சேன். பெட்ரோல் விலை உயர்வுக்கப்பறம் நிறைய பேர் அவங்களோட வண்டிய கன்வெர்ஷன் பண்ண விரும்பறாங்க. அதனால பெட்ரோல் இன்ஜின் வண்டிய எலெக்ட்ரிக்கலா கன்வர்ஷன் பண்ணிட்டு இருக்கேன்.

”ஆக்டிவாவை ஹைபிரிட்டாக மாத்திட்டேன்!”

ஒரு வண்டிய முழுமையா எலெக்ட்ரிக்கலாகவும் மாத்த முடியும். பெட்ரோல்/ டீசல் இன்ஜினோட சேர்த்து ஓட்டும் வகையில் ஹைபிரிட் ஆகவும் மாத்த முடியும். என்னோட நண்பன் ஆக்டிவா 5ஜி வாங்கி ஓட்டிட்டு இருந்தான். மைலேஜ் 25-30 தான் கிடைச்சுது. அதனால அவன் வேற வண்டிய மாத்தற ஐடியால இருந்தான். அப்ப நான், ‘பெட்ரோல் விலை ஏறிட்டேதான் இருக்கும். அதுக்கு எலெக்ட்ரிக்கல் வண்டிக்கு மாறிடு’னு சொன்னேன். முதல்ல என் வண்டியதான் கன்வெர்ஷன் பண்ணலாம்னு இருந்தேன். ஆனா, நண்பன் கேட்டதால அவனோட வண்டிய கன்வெர்ஷன் பண்ணேன்.

எல்லா எலெக்ட்ரிக்கல் வண்டிங்கள்ல வர்ற மாதிரி 10 இன்ச் ஹப் மோட்டாரை, பேக் வீல்ல செட் பண்ணிருக்கேன். வழக்கமா பேட்டரியை டிக்கிலதான் வைப்பாங்க. ஆனா, நண்பன் சார்ஜ் போடற வசதிக்காக ஸ்வாப் அப் டைப்ல கேட்டான். அதனால, முன்பக்கத்துலயே பேட்டரி வெச்சுருக்கோம். 2 லாக் இருக்கும். அதை எடுத்துட்டு ஈஸியா சார்ஜ் போட்டுக்கலாம். லித்தியம் ஃபெரோபாஸ்பேட் போட்டிருக்கேன். பொதுவா இப்ப பலரும் லெட் ஆஸிட், லித்தியம் அயன் பேட்டரிகளைத்தான் பயன்படுத்தறாங்க. இந்த வகை பேட்டரி வெடிப்பதற்கு சான்ஸ் ரொம்பக் கம்மி!

லித்தியம் ஃபெரோபாஸ்பேட் காஸ்ட்லிதான். ஆனா, இதுல 99.9 சதவிகிதம் தீப்பிடிக்காது. ரிலே ஆப்ஷன் வெச்சுருக்கோம். நமக்கு எது தேவைப்படுதோ (பெட்ரோல் / எலெக்ட்ரிக்கல்) அதை செட் பண்ணிப் போய்க்கலாம். ரிலேக்கு ஸ்விட்ச் செட் பண்ணிருக்கோம். ஆக்டிவாவ ஹைபிரிட்டா மாத்தி 6 மாசம் ஆச்சு. எந்தப் பிரச்னையும் வரல. நண்பர் 60 கிமீ மைலேஜ் கிடைக்கற மாதிரி வேணும்னு சொன்னார்.

”ஆக்டிவாவை ஹைபிரிட்டாக மாத்திட்டேன்!”

நான் 70 கிமீ மைலேஜ் கிடைக்கற மாதிரி பண்ணிருக்கேன். அதுவே பெட்ரோல் இன்ஜின் இல்லாம, எலெக்ட்ரிக்கல் மட்டும் வெச்சு கன்வெர்ஷன் பண்ணா 150 கிமீ மைலேஜ் கிடைக்கும். அதிகபட்சம் 10 நாள்ல வண்டிய ரெடி பண்ணிடலாம். இதை கன்வெர்ஷன் பண்ண ரூ.65,000 செலவாச்சு!” என்றவரிடம், “அந்தத் தொகைக்குப் புதிய இ-பைக்கே வாங்கிவிடலாமே?” என்று கேட்டோம்.

“இன்னிக்கு புது பைக் ரூ.60 -70 ஆயிரம்க்கு வாங்கலாம்தான். எலெக்ட்ரிக்கல் வண்டி வாங்கறப்ப, ‘சீக்கிரம் சார்ஜ் ஆகணும், ஸ்பீடா போகணும், மைலேஜ் அதிகம் கொடுக்கணும்’னு கேட்டுத்தான் வாங்கறோம். அதுக்காக அவங்க வெயிட் எல்லாம் கம்மி பண்ணித்தான் நமக்குக் கொடுப்பாங்க. ஒரு சின்ன கல் மேல மோதினாக்கூட அந்த வண்டி பாதிக்கும். இதுல அப்படி ஆகாது. சேஸ் எல்லாம் ஹெவியா பண்ணிருப்பாங்க. தவிர, அந்த வண்டில எல்லாம் லெட் ஆஸிட்... லித்தியம் அயன் பேட்டரிதான் பயன்படுத்தறாங்க. அது விலை குறைவு.

”ஆக்டிவாவை ஹைபிரிட்டாக மாத்திட்டேன்!”

லெட் ஆஸிட் பொறுத்தவரை 900 சைக்கிள்; லித்தியம் அயன் 1,200 சைக்கிள்; லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் 2,000 சைக்கிள். அதனால இதுல லைஃப் அதிகம். என்ன சார்ஜிங் நேரம் அதிகம் எடுக்கும். பிக் அப், மைலேஜ் அதைவிடக் குறைவாதான் இருக்கும். ஆனா, 100 சதவிகிதம் பாதுகாப்பு இருக்கும். லித்தியம் அயன்ல சின்ன இடத்துல அதிக எனர்ஜிய ஸ்டோர் பண்றோம். அதுவே லித்தியம் ஃபெரோ பாஸ்பேட் அளவுகள்ல எல்லாமே பெருசு. அதனால அதிகம் சூடாகாது. லித்தியம் அயன்ல அதிகம் சூடுபிடிக்கும். தீப் பிடிக்கக் கூடாதுனு நம்ம பேட்டரிக்கு மேலயே கேஸ் கட் போறோம். ஆனா, லித்தியம் அயன்ல கேஸ் கட் யாரும் போடறது இல்ல.

கேஸ் கட் விலை வெறும் ஒரு ரூபாய்தான். ஆனா, விலை குறைக்கறதுக்காக குவாலிட்டிலதான் கை வைப்பாங்க. செல் டு செல் கேப் வர்றதுக்கு செல் ஹோல்டர் யூஸ் பண்ணறோம். ஒவ்வொரு செல்லுக்கும் நடுவுல கேப் கிடைக்கறப்ப காத்து போகும், சூடு பிடிக்கறதுக்கான வாய்ப்பும் கம்மியாகிடும். இதையும் பல கம்பெனி பண்றது இல்ல. பேட்டரிக்கு வர பி.எம்.எஸ்லயும் நிறைய குவாலிட்டி இருக்கு. அதுலயும் தரம் குறைவான குவாலிட்டியைத்தான் பயன்படுத்தறாங்க. பி.எம்.எஸ் தான் இ-பைக்கோட இதயம். நம்ம பயன்படுத்தற பி.எம்.எஸ் ரூ,9,000. அவ்வளவு தரமா இருக்கும். பேட்டரிக்கு மேல எஃப்.ஆர்.பி (FRP) ஷீட் போடறோம். தீப்பிடிச்சாலும் கூட, இதுக்கு மேல வராது. அதுக்குத்தான் இந்த ஷீட். இதையும் பல கம்பெனி போடறதுல இல்ல. தீப்பிடிக்காம இருக்க, பேட்டரிக்கு மேல கேப்டான் (Kapton) டேப் போடுவோம். இதையும் பலர் பண்றது இல்ல.

ஐஆர் டெஸ்ட்டர் மெஷின் இருக்கு. அதுல போட்டுப் பார்த்தாலே பேட்டரி வொர்த்தா இல்லயானு தெரிஞ்சுடும். அப்புறம், பேட்டரிய முழு பேக்கிங் பண்ணிட்டு சார்ஜிங் முழுசா ஏத்திட்டு, பேட்டரிய டிஸ்சார்ஜ் பண்ணணும். வேலூர்ல எலெக்ட்ரிக்கல் வண்டி ஃபயர் ஆச்சு. அந்த பேட்டரில செல் ஹோல்டர், எஃப்ஆர்பி ஷீட் எதுவும் போடல. அதுதான் தீ விபத்துக்குக் காரணம்னு நான் நினைக்கறேன். கம்பெனி 4 மணி நேரம் சார்ஜ் போட சொல்றாங்கன்னா, மூணு மணி நேரம் சார்ஜ் போடுங்க போதும். நைட் முழுசும் சார்ஜ் போடணும்னு நினைக்காதீங்க. வெளிய போய்ட்டு வந்த உடனேயே சார்ஜ் போட வேணாம். வீட்டுக்கு வந்த ஒரு 10 நிமிஷம் கேப் விடணும். பேட்டரி ஃபுல் டிரை ஆனதுக்கப்பறம் சார்ஜ் போடறது நல்லது. அதே மாதிரி சார்ஜ் ஏறின உடனே வண்டி ஓட்டக் கூடாது. அங்கயும் ஒரு 10 நிமிஷம் கேப் விட்டுத்தான் ஓட்டணும். இ-பைக் வாங்கறவங்க, இதையெல்லாம் கவனிச்சுட்டு வண்டி வாங்குங்க.

”ஆக்டிவாவை ஹைபிரிட்டாக மாத்திட்டேன்!”

எலெக்ட்ரிக் பைக்கைப் பொறுத்தவரை, எடுத்தவுடன் அதிக வேகத்தில் போறதைத் தவிர்க்கணும். இந்த ஆக்டிவாவுக்கு 3 மணி நேரம் சார்ஜ் போட்டால் போதும். 70 கிமீ ஓட்டிக்கலாம். அதுக்கு கரன்ட் பில் ரூ.2-3 தான் ஆகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 - 40 கி.மீ தான் மைலேஜ் கிடைக்குது. வித் அவுட் இன்ஜின், எலெக்ட்ரிக்கல் மட்டும் அப்படினா ரூ30 ஆயிரத்துக்கு கன்வெர்ஷன் பண்ண முடியும். ஆனா, இப்ப காப்பர்ல தொடங்கி எல்லா மூலப்பொருள் விலையும் ஏறிக்கிட்டே இருக்கு. மஹாராஷ்டிரா மாநிலம் தானேல, எலெக்ட்ரிக் பைக் கன்வெர்ஷன் பண்ற ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி இருக்கு. அவங்க கன்வெர்ஷன் பண்ற பைக்குக்கு ஆர்டிஓ அப்ரூவல் கொடுத்துருக்காங்க. அதனால தமிழ்நாடு அரசும், ஆர்டிஓ மூலம் எலெக்ட்ரிக் வாகனத்துக்கு அப்ரூவல் கொடுக்கணும்!” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism