Published:Updated:

வேண்டாம் க்ரேஷ் கார்டு!

கார்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்

தேவையே இல்லாமல், `க்ரேஷ் கார்டு’ பொருத்தப்பட்டால் இந்த வடிவமைப்பின் அர்த்தம் சிதைந்து ஓட்டுனர் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும்.

அரசின் உத்தரவை மீறி கார்களில் க்ரேஷ் கார்டுகளைப் பொருத்துகிறவர்களுக்கு இப்போது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. ஒன்றுக்கு இரண்டாக கார் வைத்திருக்கிறவர்கள்கூட, ‘கார்களுக்கு க்ரேஷ் கார்டு அவசியம்தானே... அதை ஏன் அரசு அகற்றச் சொல்கிறது?’ என்று கேட்கின்றனர்.

மோட்டார் வாகனச் சட்டப்படி கார்களுக்கு `க்ரேஷ் கார்டு’ பொருத்துவது தண்டனைக்குரிய குற்றம். `க்ரேஷ் கார்டு’ பொருத்தினால் ஏர்பேக் வேலை செய்யாது. காரணம், `க்ரேஷ் கார்டு’ பொருத்திவிட்டால்... விபத்தின் போது ஏற்படக்கூடிய தாக்கத்தை சென்ஸார்களால் துல்லியமாக உணர முடியாது. காற்றுப் பைகள் விரிவடைவதில் ஒரு சில வினாடிகள் தாமதமானால்கூட ஆபத்தாகிவிடும்.

விபத்தின் தாக்கத்தை காரின் முன்பகுதி (Crumple Zone) எப்படி உள்வாங்கிகொண்டு பயணிகளையும் ஓட்டுனர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்துத்தான் கார்களை வடிவமைப்பார்கள். ஆகவே தேவையே இல்லாமல், `க்ரேஷ் கார்டு’ பொருத்தப்பட்டால் இந்த வடிவமைப்பின் அர்த்தம் சிதைந்து ஓட்டுனர் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும்.

வேண்டாம் க்ரேஷ் கார்டு!

ஒரு சில `க்ரேஷ் கார்டு’ நாற்பது நாற்பத்தி ஐந்து கிலோகூட இருக்கின்றன. இவை காரின் எடையை சீரற்ற முறையில் கூட்டுவதால், வளைவுகளிலும் திருப்பங்களிலும் கார் வேகமாகச் செலுத்தப்படும்போது கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருக்காது.

அனைத்துக்கும் மேலாக `க்ரேஷ் கார்டு’ என்பது பாதசாரிகளுக்கும் ஆபத்தானது. விபத்து ஏற்பட்டால், பாதசாரிகளுக்கு விபத்தின் தாக்கத்தை மட்டுப்படுத்தவே பம்பர்கள் தக்கையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன பம்பர்களை பாதுகாக்கிறேன் பேர்வழி என்று இரும்பால் ஆன க்ரேஷ் கார்டு பொருத்தினால்... பாதசாரிகளுக்கும் அது அச்சுறுத்தலாக அமையும்.

அப்படியென்றால் க்ரேஷ் கார்டுகளால் நன்மைகளே இல்லையா என்றால், நிச்சயம் உண்டு. கார்களில் சிறு சிறு கீரல்களோ, ஒடுக்குகளோ வராமல் அது காரைப் பாதுகாக்கும். ஆனால் பயணிக்கிறவர்களையும் சரி, பாதசாரிகளையும் சரி... அது பாதுகாக்காது. அனைத்துக்கும் மேலாக `க்ரேஷ் கார்டு’ பொருத்துவது என்பது சட்டத்துக்குப் புறம்பானது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz