Published:Updated:

500 கோடி முதலீடு, 40 லட்சம் கி.மீ டெஸ்ட்டிங்... இந்தியாவின் முதல் BS6 டீசல் இன்ஜின்!

BharatBenz BS -6
BharatBenz BS -6

பிஎஸ்-4 வாகனங்களைவிட, பிஎஸ்-6 விலை கூடுதலாக இருந்தாலும் சர்வீஸ் இன்டர்வெல் மற்றும் மைலேஜ் இதில் அதிகம்.

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 மாசுக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருவதால் பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பிஎஸ்-6 இன்ஜின்களை காட்சிப்படுத்தவும் வெளியிடவும் தொடங்கிவிட்டன. கமர்ஷியல் வாகனச் சந்தையில் இந்தியாவில் முதல் பிஎஸ்-6 இன்ஜின் சான்றிதழ் பெற்றுள்ள டெய்ம்லர் நிறுவனம், டெஸ்டிங்கில் இருக்கும் தங்களது பிஎஸ்-6 வாகனத்தை நேற்று காட்சிப்படுத்தியது. 

பாரத் பென்ஸ் என்ற பெயரில் டிரக் மற்றும் பஸ்களை விற்பனை செய்யும் இந்நிறுவனம், பிஎஸ்-6 இன்ஜின்களை உருவாக்க இந்தியாவில் இதுவரை 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படும் பிஎஸ்-6 வாகனங்கள் பிரேசில், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharatbenz BS 6 truck
Bharatbenz BS 6 truck

இந்த இன்ஜினில் என்ன ஸ்பெஷல்?

``இந்த இன்ஜினுக்காக அதிகம் மெனக்கெட்டாலும் இது முற்றிலும் புதிய இன்ஜின் இல்லை" என்கிறார் டெய்ம்லர் நிறுவனத்தின் இன்ஜின்யரிங் துறைத்தலைவர் ப்ரதீப். புதிய இன்ஜின் பற்றி நம்மிடம் பேசுகையில், ''பிஎஸ்-6 இன்ஜின் என்பது அடிப்படையில் பிஎஸ்-4 இன்ஜின்தான். ஆனால், வாகன புகையிலிருந்து வரும் மாசை, மேலும் குறைக்க சில ரசாயனங்கள் அடங்கிய ஆஃப்ட்ர் ட்ரீட்மென்ட் சிஸ்டம் (After Treatment System) பொருத்தியிருக்கிறோம். இது ஒரு சின்ன கெமிக்கல் தொழிற்சாலைபோல. இது Selective Catalytic Reduction (SCR) எனும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இன்ஜினை இயக்க டீசல் தேவைப்படுவது போல இதற்கு ஆட்ப்ளூ (AdBlue) என்ற திரவம் தேவை'' என்று விளக்கினார்.

Nox
ஒரு பிஎஸ்-3 வாகனம் வெளியிடும் ஆபத்தான நைட்ரஜன் வாயு, 12 பிஎஸ்-6 வாகனங்களுக்குச் சமமானது.

ஆட்ப்ளூ திரவம் இன்ஜின் ஆயில் போல வெவ்வேறான தன்மையில் கிடைக்காது. நாடு முழுவதும் ஒரே ஸ்டாண்டர்டுதான். இந்தத் திரவம் ஆபத்தானது கிடையாது; தீப்பிடிக்காது. ஆனால், டிரைவர்கள் இதைச் சரியான முறையில் சேமிக்கவில்லை அல்லது மாசுபடுத்திவிட்டால், அதன் தன்மையை இழந்துவிடும். இன்ஜின் உமிழ்வைச் சரியாகச் சுத்திகரிக்காது. இதனால், டேஷ்போர்டில் வார்னிங் தெரியும். அதைக் கண்டுகொள்ளவில்லை என்றால், இன்ஜினில் பிரச்னை ஏற்படும்.

Dr. Robert Wodrich-Kotzick - Global Power Train, Rohit - Marketing Head Daimler India, Satyakam Arya - Managing Director and CEO, Pradeep T - VP, Head of Product Engineering.
Dr. Robert Wodrich-Kotzick - Global Power Train, Rohit - Marketing Head Daimler India, Satyakam Arya - Managing Director and CEO, Pradeep T - VP, Head of Product Engineering.

OM926 எனப்படும் இந்த இன்ஜின் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மட்டுமல்ல, 4 சர்வதேச இடங்களிலும் டெஸ்ட் செய்யப்பட்டவை. 20 லட்சம் கிலோமீட்டர் இந்த இன்ஜினை தொழிற்சாலையிலும், கூடுதலாக 20 லட்சம் கிலோமீட்டர் சாலையிலும் டெஸ்ட் செய்துள்ளனர். கிட்டத்தட்ட 35-க்கும் அதிகமான வாகனங்கள் இந்த டெஸ்ட்டிங்கில் இருந்துள்ளன. 80-க்கும் அதிகமான இன்ஜின்கள் டெஸ்ட் செய்யப்பட்டுள்ளன. தற்போது இருக்கும் பாரத் பென்ஸ் பிஎஸ்-4 வாகனங்களைவிட, பிஎஸ்-6 வாகனங்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் இதன் சர்வீஸ் இன்டர்வெல் அதிகம். மைலேஜும் முன்பைவிட 5 சதவிகிதம் அதிகமாகவே தருவதாக டெய்ம்லர் பொறியாளர்கள் கூறுகின்றனர்.

500 கோடி முதலீடு, 40 லட்சம் கி.மீ டெஸ்ட்டிங்... இந்தியாவின் முதல் BS6 டீசல் இன்ஜின்! முழுமையாக படிக்க:...

Posted by Motor Vikatan on Saturday, September 14, 2019
PM
ஒரு பிஎஸ்-3 வாகனம் வெளியிடும் Particulate Matter எனும் ஆபத்தான நுண்துகளின் அளவு, 10 பிஎஸ்-6 வாகனங்களுக்குச் சமமானது.
Daimler adblue
Daimler adblue
daimler

அரசு என்ன செய்ய வேண்டும்?

பிஎஸ்-6 மாற்றம் பற்றி பேசிய டெய்ம்லர் இந்தியாவின் இயக்குநர் சத்யகம் ஆர்யா, ''பிஎஸ்-4-ல் இருந்து பிஎஸ்-6 க்கு மாறுவதற்கு ஜப்பான் 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது, ஐரோப்பிய நாடுகள் 8 ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. ஆனால், இந்தியாவில் வெறும் 3 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய வேலை இது. கடினமான வேலையாக இருந்தாலும் இது அத்தியாவசியமானது'' என்றார். மேலும், இந்திய அரசு இதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பேசுகையில், 

''கமர்ஷியல் வாகன பயன்பாட்டைப் பொறுத்தவரை, தற்போது இந்தியாவில் பிஎஸ்-3 வாகனங்கள்தான் அதிகம். ஒரு பிஎஸ்-3 வாகனம் வெளியிடும் ஆபத்தான நைட்ரஜன் வாயு, 12 பிஎஸ்-6 வாகனங்களுக்குச் சமமானது. அதே போல ஒரு பிஎஸ்-3 வாகனம் வெளியிடும் PM அளவு, 10 பிஎஸ்-6 வாகனங்களுக்குச் சமமானது. புதிய இன்ஜின்கள் வருவது மட்டுமல்ல, பழைய இன்ஜினின் பயன்பாட்டை நிறுத்துவது மிகவும் முக்கியம். இதற்கு ஸ்கிரேப்பேஜ் பாலிசி பெரிய உதவியாக இருக்கும். தங்களுடைய பழைய வாகனங்களை விட்டுக்கொடுக்க மக்களுக்கு கணிசமாக ஊக்கத்தொகையை அரசு தர வேண்டியது அவசியம். 

BMW Scrappage centre
BMW Scrappage centre
BMW blog

பிஎஸ்-6 வாகனத்துக்கு ஆட்ப்ளூ திரவம் மிகவும் முக்கியம். தற்போது அந்தந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் இந்த ஆட்ப்ளூ திரவத்தைப் பரவலாக்க வேண்டும். இதற்கு ஆயில் நிறுவனங்கள் அல்லது மத்திய அரசு, பெட்ரோல் பங்க் இருப்பதுபோல ஆட்ப்ளூ சென்டர்களை அமைக்க வேண்டும்'' என்றார்.

Vikatan

டெய்ம்லருக்கு பிஎஸ்-6 புதுசா?

டெய்ம்லர் நிறுவனம் உலகளவில், இதுவரை 14 லட்சம் யூரோ-4 (பிஎஸ்-6) டிரக் மற்றும் பஸ்களை விற்பனை செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்தத் தொழில்நுட்பத்தை இந்திய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து OM926 இன்ஜினை வடிவமைத்துள்ளார்கள். மீடியம் டிரக் மற்றும் பஸ்களில் பயன்படுத்தப்போகும் இந்த இன்ஜினுக்கு ARAI சான்றிதழும் கிடைத்துவிட்டது.

Daimler Factory
Daimler Factory

இதன் 80 சதவிகித பாகங்களைச் சென்னையில் இருக்கும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்போகிறார்கள். இதற்கான தயாரிப்பு மற்றும் டெஸ்டிங் வேலைகளுக்காக இதுவரை 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாம். புதிய இன்ஜின் மட்டுமல்ல, 1000-த்துக்கும் அதிகமான பாகங்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவை முக்கியமான ஏற்றுமதி மையமாக மாற்றவுள்ளார்கள். இந்தியாவில் பிஎஸ்-6 எரிபொருள் விற்பனைக்கு வந்தவுடன் இந்த வாகனங்களும் உடனே விற்பனைக்கு வந்துவிடும் என டெய்ம்லர் நிர்வாகிகள் உறுதியளித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு