Published:Updated:

டட்ஸன் கோ & கோ ப்ளஸ் BS-6...! -என்ன ஸ்பெஷல்?

கோ & கோ ப்ளஸ்
கோ & கோ ப்ளஸ் ( Autocar India )

கடந்த ஆண்டில்தான் இந்தக் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானதால், கோ சீரிஸின் தோற்றம் மற்றும் வசதிகளில் எந்த மாறுதலும் இருக்காது எனலாம். இந்தியாவில் ESP & CVT கொண்ட விலைகுறைவான கார்கள் என்ற பெருமை, இதன்வசமே இன்றும் உள்ளன.

கொரோனா தனது இருப்பைக் காட்டத் தொடங்கிய நேரத்தில், ஏப்ரல் 1, 2020 முதலாக நாடெங்கும் BS-6 விதிகள் அமலுக்கு வந்தன. பல்வேறு வாகனத் தயாரிப்பாளர்கள் இதற்கேற்ப தமது தயாரிப்புகளை மேம்படுத்திவிட்டனர் என்றாலும் சில நிறுவனங்கள் இதுகுறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாமல் இருந்ததையும் பார்க்க முடிந்தது. தற்போது அந்தச் சூழலில் இருந்து டட்ஸன் முழுவதுமாக வெளிவந்துவிட்டது!

Datsun GO
Datsun GO
Motor Vikatan
`2020 டட்ஸன் ரெடி-கோ BS-6..!' எப்படி இருக்கும் ஃபேஸ்லிஃப்ட்?

ஆம், கடந்த மாதத்தின் இறுதியில் BS-6 ரெடி-கோ குறித்த விபரங்கள் வெளியான நிலையில், தற்போது கோ சீரிஸ் கார்களின் BS-6 வெர்ஷன் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கடந்த ஆண்டில்தான் இந்தக் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானதால், கோ சீரிஸின் தோற்றம் மற்றும் வசதிகளில் எந்த மாறுதலும் இருக்காது எனலாம். அதன்படி இந்தியாவில் ESP & CVT கொண்ட விலைகுறைவான கார்கள் என்ற பெருமை, இதன்வசமே இன்றும் உள்ளன.

இவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், முன்பு போலவே 68bhp பவர் மற்றும் 10.4kgm டார்க்கைத் தருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த 3 சிலிண்டர் இன்ஜின், 19.02 கி.மீ அராய் மைலேஜ் கிடைக்கிறது. BS-4 மாடல்களுடன் ஒப்பிடும்போது இது 0.7 கி.மீ குறைவு ஆகும்.

Datsun GO Plus
Datsun GO Plus
Motor Vikatan
BS-6 நிஸான் கிக்ஸ் எஸ்யூவி-யில், டர்போ பெட்ரோல் இன்ஜின்!

இதுவே CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட வேரியன்ட் என்றால், அதில் இதே இன்ஜின் 77bhp பவரை வெளிப்படுத்துகிறது (மைக்ராவில் இருந்த அதே டியூனிங்). டார்க்கில் மாற்றமில்லாவிட்டாலும் அராய் மைலேஜில் வித்தியாசம் இருக்கிறது (கோ: 19.59கிமீ, கோ ப்ளஸ்: 18.57கிமீ). இவை BS-4 மாடல்களைவிட முறையே 0.48கிமீ மற்றும் 0.84கிமீ குறைவு! இவற்றின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், முன்பு போலவே D, A, A (O), T, T (O) எனும் 5 வேரியன்ட்களில் கோ சீரிஸ் கார்கள் கிடைக்கும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு