Published:Updated:

டெஸ்ட்டிங்கில் டட்ஸன் ரெடி-கோ BS-6... என்ன எதிர்பார்க்கலாம்?

ரெடி-கோ BS-6
ரெடி-கோ BS-6 ( Autocar India )

AIS-145 மற்றும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கேற்ப ஏற்கெனவே ரெடி-கோவில் மாற்றங்களை டட்ஸன் செய்துவிட்டது. ஆனாலும் சர்வதேச Global NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 1 ஸ்டார் ரேட்டிங்கையே இந்த கார் பெற்றது!

ஏப்ரல் 1, 2020 முதலாக, நாட்டில் BS-6 மாசு விதிகள் அமலுக்கு வருவது தெரிந்ததே. இதனால் கார்களைப் பொறுத்தவரை, வாகன உற்பத்தியாளர்கள் BS-6 இன்ஜின்கள் - ஃபேஸ்லிஃப்ட் - அதிக வசதிகள் எனத் தமது தயாரிப்புகளை மேம்படுத்தி வருவதைப் பார்க்கமுடிகிறது. ரெனோ க்விட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளிவந்தபோதே, டட்ஸன் ரெடி-கோவின் ஃபேஸ்லிஃப்ட் குறித்த எதிர்பார்ப்பு தொடங்கிவிட்டது. AIS-145 மற்றும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கேற்ப ஏற்கெனவே ரெடி-கோவில் மாற்றங்களை டட்ஸன் செய்துவிட்டது (ஓட்டுநர் காற்றுப்பை, ஏபிஎஸ், EBD, பின்பக்க பார்க்கிங் சென்சார், ஸ்பீடு Alert சிஸ்டம், சீட்பெல்ட் Reminder, 3 பாயின்ட் சீட் பெல்ட், பின்பக்க கதவுக்கான Child Safety Lock, பின்பக்க Stop Lamp). ஆனால், இவை அனைத்தும் இருந்துமே சர்வதேச Global NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில், 1 ஸ்டார் ரேட்டிங்கையே இந்த கார் பெற்றது!

#SaferCarsForIndia
#SaferCarsForIndia
Global Ncap

இந்த நிலையில், ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகையை உறுதிப்படுத்தும் விதமாக, அதன் ஸ்பை படங்கள் தற்போது இணைய உலகில் பரவிவருகின்றன. அதைப் பார்க்கும்போது, காரின் Tall Boy Profile-ல் எந்த மாறுதலும் இல்லை என்றே தோன்றுகிறது. ஆகஸ்ட் 2020 முதலாக Pedestrian Safety விதிகள் அமலுக்கு வருவதால், ரெடி-கோவின் முன்பக்கத்தில் கணிசமான மாற்றங்கள் இருக்கலாம். ரியர் வியூ மிரர்களின் தோற்றத்தில் மாறுதல் தெரிகிறது. பக்கவாட்டில் Door Creases காணவில்லை என்பதுடன், பின்பக்கமும் ஏறக்குறைய அப்படியேதான் காட்சியளிக்கிறது. வீல்கள் முன்பைவிடத் தடிமனாக இருப்பதை வைத்துப் பார்த்தால், அநேகமாக க்விட்டைப் போலவே இவையும் 14 இன்ச்சாக இருக்கலாம்.

ஆட்டோ எக்ஸ்போ கவரேஜ் 360°:     BS-6 இக்னிஸில் என்ன மாறியிருக்கு?

க்விட் தவிர ஆல்ட்டோ சீரிஸ் மற்றும் எஸ்-ப்ரஸ்ஸோ ஆகியவற்றுடன் போட்டிபோடும் விதமாக, ரெடி-கோவின் டாப் வேரியன்ட்களில் அலாய் வீல் - இரட்டை காற்றுப்பைகள் - டச் ஸ்க்ரீன் ஆகியவை இடம்பெறுவதற்கு சாத்தியம் இருக்கிறது. அதற்கேற்ற வகையில் டேஷ்போர்டு மற்றும் கேபின் அப்ஹோல்சரியில் முன்னேற்றங்கள் செய்யப்படலாம். மற்றபடி அதே 0.8/1.0 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களே இங்கும் பயன்படுத்தப்படும்.

Redi-Go Facelift
Redi-Go Facelift
Datsun India
ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட்
ரெடி-கோ ஃபேஸ்லிஃப்ட்
Autocar India

முன்பைப் போலவே 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அதனுடன் இணைக்கப்படும். BS-4 மாடலைவிட BS-6 வெர்ஷனின் அராய் மைலேஜில் வித்தியாசம் இருக்கலாம் (உபயம்: க்விட் ஃபேஸ்லிஃப்ட்). மேலும், காரின் விலையும் குறைந்தது 10,000 ரூபாய் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது.

அடுத்த கட்டுரைக்கு