Published:Updated:

‘‘இந்த வண்டியை எடுத்துட்டு ரோட்ல போக முடியலைங்க!’’ - டெல்லி பெண்களைப் படுத்தும் SEX நம்பர் ப்ளேட்!

Delhi
News
Delhi

ரோட்டில் போகிறவர்கள் என்றால்கூடப் பரவாயில்லை; ‘SEX நம்பர் ப்ளேட் ஸ்கூட்டர் வெச்சுருக்குமே அந்தப் பொண்ணா’ என்று பக்கத்து வீட்டுக்காரர்களே கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

கடனை உடனை வாங்கி புது வாகனம் வாங்குபவர்கள்… அடுத்துக் காத்திருப்பது வாகனத்தின் நம்பர் பிளேட்டுக்கு. ‘நம்ம வண்டியோட ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்னவா இருக்கும்’ என்கிற ஆவல்... காதலியின் ரிசல்ட்டுக்குக் காத்திருக்கும் காதலர்கள் மாதிரி மனது அலைபாய்ந்து கொண்டிருக்கும். இன்னும் சிலர் வேண்டுமென்றே தங்களது இனிஷியல், பிறந்த தேதியெல்லாம் வருவதுபோல் ஃபேன்ஸி நம்பர்களை எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துக் கேட்டு வாங்குவார்கள். இதற்காகவே காசை வாரி இறைக்கும் தனவான்களும் இருக்கிறார்கள். ஆஷிக் பட்டேல் என்பவர், ஜேம்ஸ்பாண்ட் ரசிகர். 007 நம்பர் பிளேட்டுக்காக தனது ஃபார்ச்சூனர் காரைப்போல எக்ஸ்ட்ரா ஒரு மடங்கு, அதாவது 34 லட்ச ரூபாய் கொடுத்து அந்த ஜேம்ஸ்பாண்ட் நம்பர் பிளேட்டை வாங்கியிருக்கிறார்.

இப்போது ஃபேன்ஸி நம்பர்கள் விஷயமில்லை. டெல்லியைச் சேர்ந்த, ஃபேஷன் டிசைனிங் மாணவி அங்கிதா(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்து பெண். நொய்டாவில் இருந்து ஜனக்புரி வரை மெட்ரோவில் அடிதடிப் பயணம் செய்ய விரும்பில்லை. அப்பாவிடம் அடம்பிடித்து ஒரு ஸ்கூட்டரைப் பரிசாக வாங்கினார். ஸ்கூட்டரின் பதிவு எண்ணைப் பார்த்த அங்கிதாவுக்குப் பேரதிர்ச்சி. காரணம், அந்த வாகனத்தின் நம்பர் இப்படி இருந்தது. `DL3 SEX 0000’.

S EX சீரிஸ் நம்பர் பிளேட்
S EX சீரிஸ் நம்பர் பிளேட்
cartoq.com

`பரிசாகக் கிடைத்த ஸ்கூட்டர் இப்படியாகிடுச்சே’ என்று நொந்து போனவர், தனது அப்பாவோடு போய் ஷோரூமில் சொல்லி நம்பரை மாற்றித் தரச் சொல்லிக் கேட்டதில்... ‘‘யே நம்பர் ப்ளேட் சீரீஸ் லோகோ னே பஹூத் ஸே ப்ராப்த் கியா ஹே… ஆப்கி பேட்டி துனியா கி ராணி நஹி ஹே!’’ (‘‘இது மாதிரி நிறைய பேர் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணியிருக்காங்க. உங்க பொண்ணு ஒண்ணும் இந்த உலகத்தோட ராணி இல்லை!’’) என்று கடுப்போடு பேசி அனுப்பிவிட்டார்கள். இந்த நம்பர் ப்ளேட் ரிஜிஸ்டர் ஆன இடம், Sarai Kale Khan போக்குவரத்து அலுவலகம். அங்கேயும் நடந்து பார்த்தார் அங்கிதா. வேலைக்கு ஆகவில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வேறு வழியில்லாமல் ‘விதியே’ என்று ஸ்கூட்டரில் போனால்… ஏகப்பட்ட கிண்டல்கள்… கேலிகள்! ரோட்டில் போகிறவர்கள் என்றால்கூடப் பரவாயில்லை; ‘SEX நம்பர் ப்ளேட் ஸ்கூட்டர் வெச்சுருக்குமே அந்தப் பொண்ணா’ என்று பக்கத்து வீட்டுக்காரர்களே கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மனம் நொந்துபோன அங்கிதா, வேறு வழியில்லாமல் சோஷியல் மீடியாவில் தன் பிரச்னையைச் சொல்ல, இது DCW (Delhi Commission for Women) அமைப்பின் காதுக்குப் போனது. அவர்கள் உடனே நடவடிக்கையில் இறங்கினர். Sarai Kale Khan ஆர்டிஓ அலுவலகத்துக்கு நோட்டீஸ் பறக்க, இப்போது அந்த சீரிஸில் வரும் அனைத்துப் பதிவு எண்களையும் நிறுத்தி வைக்கச் சொல்லித் தீர்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்த அக்டோபர் 15–ல் இருந்து நவம்பர் 18 வரை மொத்தம் இதுபோல் 4,600 S EX பதிவு எண் கொண்ட வாகனங்கள் பதிவாகியிருக்கின்றன. ‘‘இது ஆட்டோ ஜெனரேடட் சிஸ்டம் கொண்ட பதிவு முறை. அதனால் இதை எங்களால் தடுக்க இயலவில்லை! மேலும், இதுபோன்ற புகார்கள் எங்களுக்கு ஆரம்பத்திலேயே வந்திருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுத்திருப்போம்!’’ என்று சொல்கிறது அந்த ஆர்டிஓ அலுவலகம்.

S EX சீரிஸ் நம்பர் பிளேட்
S EX சீரிஸ் நம்பர் பிளேட்
cartoq.com

இந்தியா முழுக்க வாகனத்தின் பதிவு எண்கள், ஆட்டோ ஜெனரேஷன்படி ரிஜிஸ்ட்ரேஷன் ஆகும். உதாரணத்துக்கு, தலைநகரையே எடுத்துக் கொண்டால் DL என்பது டெல்லியைக் குறிக்கிறது. அடுத்து வரும் எண் 3 என்பது, மாவட்டத்தைக் குறிக்கிறது. அடுத்து வரும் ‘S’ என்பது டூ–வீலர்களைக் குறிக்கும். அடுத்து வரும் `EX’ என்பதுதான் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சீரிஸ்படி ஆட்டோ ஜெனரேட் ஆகும் எழுத்து வரிசை. இதில்தான் பிரச்னையே! இதில் `EX’ சீரிஸ் காலியாகும்வரை இந்த SEX சீரிஸ் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் பிரச்னையே!

`DCW’ அமைப்பின் தலைவர் ஸ்வாதி கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்த SEX சீரிஸ் நம்பர் பிளேட்டுகளின் பதிவு அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அவற்றை SEY என்று மாற்றித் தருவதாக உறுதிமொழி அளித்திருக்கிறது டெல்லி தலைமை ஆர்டிஓ அலுவலகம்.

நம் ஊருக்கு இதுபோன்றதொரு பிரச்னை இன்னும் வரவில்லை என்பது கொஞ்சம் நிம்மதி!