Published:Updated:

Royal Enfield: `ஏன் இந்தப் பெயர்'? `டுபு டுபு’ சத்தத்துக்குக் காரணம் என்ன?|Video

Royal Enfield வாகனத்தின் பெயர்க் காரணம் என்ன?; எப்போது இந்தியாவிற்கு வந்தது?; அதன் 'டுபு டுபு' சத்தத்துக்குக் காரணம் என்ன?

இன்று மோட்டார் சைக்கிள் தயாரிப்பின் உச்சத்தில் இருக்கும் 'Royal Enfield' நிறுவனம், 150 வருடங்களுக்கு முன் 1891-ல் 'Enfield' என்ற பெயரில் இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட நிறுவனம். இந்நிறுவனம் ஆரம்பத்தில் குண்டூசி தயாரிப்பதற்காகத் தொடங்கப்பட்டது. அதன்பின் காலப்போக்கில் பிரிட்டிஷ் (இங்கிலாந்து) அரசின் சைக்கிள் தயாரிக்கும் கான்ட்ராக்ட்டைப் பெற்றது. பிரிட்டிஷ் அரசு எதை வாங்கினாலும் அதன் பெயருக்கு முன்னால் கெளரவமாக 'ராயல்' என்ற பெயரைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில் 'Enfield' என்ற நிறுவனத்திற்கு 'Royal Enfield' என்று பெயரிடப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism