Published:Updated:

கனெக்ட்டிவிட்டி, ஆஃப் ரோடு, மேக் இன் இந்தியா, கொரோனா... டெய்ம்லர் இந்தியா கண்ட சவால்கள்!

ஏற்கெனவே 4/6 சிலிண்டர் இன்ஜின்களைப் பயன்படுத்துவதால், ஆஃப் ரோடு (Off-Highway), Earth Movers, ராணுவ வாகனப் பிரிவில் (4X4) டயர் பதிப்பதைப் பற்றி, இந்த நிறுவனம் பரிசீலித்துவருகிறது.

கடந்த ஆண்டில், இந்தியாவில் டிரக்குகளின் விற்பனை 35% வீழ்ந்தது தெரிந்ததே. அதைப் போலவே, 2019-ம் ஆண்டில் டிரக் விற்பனையில் (14,474 வாகனங்கள்) 36% சரிவைக் கண்டுள்ளது டெய்ம்லர் இந்தியா (2018: 22,532 வாகனங்கள்). ஆனால், குறிப்பிடத்தக்க வகையில், தனது டீலர் நெட்வோர்க்கை இந்த நிறுவனம் 30% அதிகரித்துள்ளது (2018: 182 டீலர்கள், 2019: 236 டீலர்கள்) செம! எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்திய டிரக் செக்மென்ட்டில் முன்பைப் போலவே 5.8% சந்தை மதிப்பை டெய்ம்லர் இந்தியா தக்கவைத்திருப்பதாகவே தெரிகிறது. ஆனால், ஏப்ரல் 1, 2020 முதலாக நாடெங்கும் BS-6 விதிகள் அமலுக்கு வருவதால், ஆங்காங்கே BS-4 டிரக்குகளின் விலையில் தள்ளுபடிகள் வழங்கப்படுவதைப் பார்க்கமுடிகிறது. டெய்ம்லர் இந்தியா, ஏறக்குறைய தன் வசமிருந்த BS-4 டிரக்குகளை விற்பனைசெய்து முடித்துவிட்டது.

டெய்ம்லர் இந்தியா
டெய்ம்லர் இந்தியா
Bharat Benz

2020-ம் ஆண்டை 12 புதிய தயாரிப்புகளினால் (Medium & Heavy Duty Trucks) சிறப்பாகத் தொடங்கிய இந்த நிறுவனம், பஸ் விற்பனையில் கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், உள்நாட்டில் 11% மற்றும் ஏற்றுமதியில் 56% வளர்ச்சியையும் டெய்ம்லர் இந்தியா சாதித்திருக்கிறது. 'போட்டியாளர்களைவிட தொழில்நுட்ப அளவில் சிறந்த தயாரிப்புகளை (பஸ் & டிரக்), இந்தியாவில் முதல் நாளிலிருந்தே வழங்கிவருகிறோம். உற்பத்தியில் சிக்கன நடவடிக்கைகள், அதிகரித்த ஏற்றுமதி என 2019-ம் ஆண்டு, டெய்ம்லர் இந்தியாவுக்கு நன்றாகவே அமைந்திருக்கிறது. உலகஅளவில் ஏற்கெனவே இருக்கும் யூரோ-6 மாசு விதிகளைப் பின்பற்றுவதால், இந்தியாவில் BS-6 விதிகளைக் குறைந்த செலவிலேயே அமல்படுத்த முடிந்திருக்கிறது' என்றார், டெய்ம்லர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சத்யாகம் ஆர்யா.

ஏற்கெனவே, 4/6 சிலிண்டர் இன்ஜின்களைப் பயன்படுத்துவதால், ஆஃப் ரோடு (Off-Highway), Earth Movers, ராணுவ வாகனப் பிரிவில் (4X4) டயர் பதிப்பதைப் பற்றி, இந்த நிறுவனம் பரிசீலித்து வருகிறது. டெய்ம்லர் இந்தியாவின் BS-6 டிரக்குகளில் ஸ்டாண்டர்டாக வழங்கப்படும் Truck Connect வசதியைக் கொண்டு, டிரக் உரிமையாளர்கள் Real Time-ல் வாகனத்தின் இருப்பிடம் - மைலேஜ் - கண்டிஷன் - பர்ஃபாமன்ஸ் ஆகிய விபரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெரிய ப்ளஸ்.

DICV Plant
DICV Plant
Bharat Benz
Vikatan

இதுவரை 25,000-க்கும் அதிகமான கி.மீ தூரம் இவை பயணித்திருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்! 'அதிக வேகத்தில் செல்வது, அதீத பிரேக் பயன்பாடு, எரிபொருள் திருட்டு என முறையற்ற வாகனப் பயன்பாட்டை, Truck Connect வாயிலாக வாகன உரிமையாளர் உடனுக்குடன் கவனிக்க முடியும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், Geo Fencing போன்ற பல பாதுகாப்பு வசதிகளையும் இதில் சேர்க்கும் முடிவில் இருக்கிறோம். BS-6 எரிபொருள் டெல்லி NCR-ல் கிடைப்பதால், அங்கே BS-6 டிரக்குகளின் டெலிவரியைத் தொடங்கிவிட்டோம்' எனக் கூறியுள்ளார் சத்யாகம் ஆர்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

50 உலக நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றுமதிசெய்யும் டெய்ம்லர் இந்தியா (2013-ம் ஆண்டில் Export தொடங்கப்பட்டது), 2019-ல் 8,000 வாகனங்களைச் சென்னையிலிருந்து அனுப்பியிருக்கிறது (ISO 50001, IATF 16949, ISO 14001, ISO 45001 ஆகிய சர்வதேச தரச் சான்றிதழ்களைப் பெற்றுள்ள தொழிற்சாலை); இது 2018-ம் ஆண்டைவிட 14% அதிகம் என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். மேலும், இதுவரை 125 மில்லியன் உதிரிபாகங்கள் மற்றும் 30,000 கமர்ஷியல் வாகனங்கள், வெளிநாடுகளுக்கு இந்த நிறுவனம் அனுப்பியிருக்கிறது.

Satyakam Arya
Satyakam Arya
Bharat Benz

நம் நாட்டில் 1,00,000-க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்திருக்கும் டெய்ம்லர் இந்தியா, கடந்த ஆண்டில் நியூசிலாந்து - மலேசியா - ஈக்குவடார் ஆகிய நாடுகளில் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பு காரணமாக, சீனாவில் இருக்கும் தனது தொழிற்சாலையின் உற்பத்தியைக் குறைத்துள்ளது டெய்ம்லர். சீனாவிலிருந்து உதிரிபாகங்களை இந்த நிறுவனம் இறக்குமதி செய்தாலும், அதனால் எந்த இடர்பாடும் இந்தியாவில் ஏற்படாத வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டுவருவதாகத் தகவல் வந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு