Published:Updated:

மும்பை: ஒரு முறை சார்ஜ்; 250 கிலோமீட்டர் பயணம்; அசத்தும் இரண்டடுக்கு எலக்ட்ரிக் பஸ்!

இரண்டடுக்கு எலக்ட்ரிக் பஸ்

மும்பையில் முதல் முறையாக இரண்டடுக்கு எலக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

மும்பை: ஒரு முறை சார்ஜ்; 250 கிலோமீட்டர் பயணம்; அசத்தும் இரண்டடுக்கு எலக்ட்ரிக் பஸ்!

மும்பையில் முதல் முறையாக இரண்டடுக்கு எலக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Published:Updated:
இரண்டடுக்கு எலக்ட்ரிக் பஸ்

மும்பை என்றால் இரண்டடுக்குப் பேருந்துகள்தான் அதன் அடையாளம். ஆனால் சமீப காலமாக இரண்டடுக்குப் பேருந்துகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டுவிட்டன. தற்போது மிகவும் சொற்ப அளவில் இரண்டடுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, சுற்றுச்சூழலைப் பேணுவதற்காக மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் எலக்ட்ரிக் ஏசி பஸ்கள் இயக்கப்பட்டுவருகின்றன. தற்போது முதல் முறையாக இரண்டடுக்கு எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதனை மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மும்பையில் தொடங்கி வைத்தார்.

இரண்டடுக்கு எலக்ட்ரிக் பஸ்
இரண்டடுக்கு எலக்ட்ரிக் பஸ்

இந்த இரண்டடுக்குப் பேருந்துகளை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக பட்சம் 250 கிலோமீட்டர் வரை இயக்க முடியும். இதனை 80 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இவ்விழாவில் பேசிய நிதின் கட்கரி, மும்பையில் இருந்து டெல்லிக்கு எலக்ட்ரிக் ஏசி பஸ்களை இயக்கவேண்டும் என்பதே எனது கனவு. அதுவும் 12 மணி நேரத்தில் மும்பையில் இருந்து டெல்லிக்கு எலக்ட்ரிக் பேருந்துகள் சென்றடைய வேண்டும். அதற்காக மும்பை-டெல்லி நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் 70 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ளன என்று தெரிவித்தார். இவ்விழாவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்நவிசும் கலந்துகொண்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மும்பையில் இயக்குவதற்காக அசோக் லயலேண்ட் நிறுவனத்திடமிருந்து 200 இரண்டடுக்கு எலட்க்ரிக் பேருந்துகள் வாங்கப்பட இருக்கின்றன. இரண்டடுக்குப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதால் சாலைகளில் கார்களின் எண்ணிக்கை குறையும் என்றும், 200 எலக்ட்ரிக் பேருந்துகள் மூலம் ஆண்டுக்கு 85,400 மரங்களைக் காப்பாற்ற முடியும் என்றும் அசோக் லயலேண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் பாபு தெரிவித்துள்ளார். நாட்டில் பெட்ரோல், டீசல் மூலம்தான் 35 சதவிகிதம் காற்று மாசுபடுகிறது.