கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

அவதார் ட்ரக்ஸ் அசோக் லேலாண்டின் புது அவதாரம்!

அசோக் லேலாண்ட் AVTR ட்ரக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அசோக் லேலாண்ட் AVTR ட்ரக்ஸ்

ஃபேக்டரி டிரைவ்: அசோக் லேலாண்ட் AVTR ட்ரக்ஸ்

வேல்ஸ்

ன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி... பெரும்பாலும் அவை தன்னந்தனியாக வருவதில்லை. கொரோனா வருவதற்கு வெகுமுன்னரே கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை சரிந்து கொண்டிருந்தது. காரணம் - கஸ்டமர் சென்டிமென்ட்! அதாவது வாடிக்கையாளர்கள் யாரும் செலவு செய்யும் மனநிலையில் இல்லை என்று அதற்கு பொருளாதார நோக்கர்கள் காரணம் சொன்னார்கள். இரவு என்று வந்தால் பகல் என்று வந்துதானே ஆக வேண்டும். இப்போது இரண்டு மாத காலமாக கமர்ஷியல் வாகனங்களின் விற்பனை உத்வேகம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பேட்டையின் தாதா, நம்மூரில் பன்னெடுங்காலமாகத் தொழிற்சாலை நடத்தி வரும் அசோக் லேலாண்டு - இந்தக் காலகட்டத்தில்தான் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

அவதார் ட்ரக்ஸ் அசோக் லேலாண்டின் புது அவதாரம்!

BS-6 கட்டுப்பாடுகளுக்குத் தகுந்த மாதிரி இனி உற்பத்தி செய்ய வேண்டிய வாகனங்களை உறபத்தி செய்ய வேண்டும் என்பது விதி. இதை விதியே என்று செய்யாமல்... இதை ஓர் அரிய வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, பல சோதனை முயற்சிகளைச் செய்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது அசோக் லேலாண்டு.

அசோக் லேலாண்டு என்ற கம்பெனிக்கே இந்த முயற்சி புதிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது என்று சொன்னால்... `இல்லை... இல்லை. புதிய அவதாரம் எடுத்திருக்கிறது என்று சொல்லுங்கள்’ என்று திருத்துகிறார்கள் அதன் வாடிக்கையாளர்கள். காரணம், அது அறிமுகப்படுத்தியிருக்கும் ‘அவதார்’ ட்ரக்ஸ்.

அவதார் ட்ரக்ஸ் அசோக் லேலாண்டின் புது அவதாரம்!
அவதார் ட்ரக்ஸ் அசோக் லேலாண்டின் புது அவதாரம்!

1.கார் ஓட்டுகிறவருக்கு இருக்கிற அத்தனை வசதியும் இந்த ட்ரக் ஓட்டுகிறவருக்கும் உண்டு. டிரைவர் காலை நீட்டிப் படுக்க இடம், வாக்த்ரூ இன்டீரியர், கேபினுக்கு மட்டும் அலுங்கல் குலுங்கல் இல்லாத சஸ்பென்ஷன் என ஏகப்பட்ட வசதிகள் 2. மாடுலர் ப்ளாட்ஃபார்மில் தயாராகும் ட்ரக்குகள் செம பில்டு. 3. டீசல் டேங்க்கைக்கூட நமக்கு விரும்பியபடி வலது பக்க /இடது பக்கம் என கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். 4. எத்தனை ஆக்ஸில் வேண்டும் என்பதையும் நாமே முடிவு செய்யலாம்.

‘இது என்ன ஓவர் பில்ட்-அப்பாக இருக்கிறதே... கார் என்றால் அதில் தேர்ந்தெடுக்க பல வகையான வேரியன்ட்கள், வண்ணங்கள், பெட்ரோல், டீசல், ஆட்டோமேட்டிக், மேனுவல் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ட்ரக் வாங்குவதில் என்ன சாய்ஸ் இருக்கப் போகிறது’ என்றுதான் நாம்கூட முதலில் நினைத்தோம். ஆனால், அவதார் நம்மை ஆச்சரியப்பட வைத்தது உண்மை.

கடவுள்கூட பத்து அவதாரம்தான் எடுப்பார். ஆனால் இந்த மாடுலர் ட்ரக்ஸ்கள் எடுக்கும் அவதாரங்களுக்கு அளவே இல்லை என்பதால்தான், இதற்கு அவதார் (AVTR) என்று பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். 18.5 டன் துவங்கி 55 டன் வரை கொள்ளளவு கொண்ட எந்தவிதமான ட்ரக்ஸ் வாங்க வேண்டும் என்று ஒருவர் அசோக் லேலாண்டு ஷோரூமுக்குப் போனாலும் சரி... ‘கையில் இருக்கும் ட்ரக்கை அவர் தலையில் கட்டுவோம்’ என்று அவர்கள் செயல்படக் கூடாது என்பதுதான் அசோக் லேலாண்ட் விதித்திருக்கும் கட்டளை.

அவதார் ட்ரக்ஸ் அசோக் லேலாண்டின் புது அவதாரம்!

`என்ன மாதிரியான லோடு ஏத்துவீங்க... என்ன மாதிரியான சாலைகளில் அதிகம் போவீர்கள்’ என்பது துவங்கி, நுட்பமான பல கேள்விகளை வாடிக்கையாளர்களிடம் விற்பனைப் பிரதிநிதிகள் கேட்டு, அதற்கான செயலியில் பதிவிட்டால்... என்ன மாதிரி ட்ரக்ஸ் அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை கணினியின் திரை அவர்களுக்குச் சிபாரிசு செய்யும். அதில் தங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்... அதைத் தன் வசதிக்கு ஏற்ப வடிவமைப்பது என்பது அடுத்த கட்டம். இதுதான் உண்மையில் எல்லோர் புருவங்களையும் உயர வைக்கிறது.

அவதார் ட்ரக்ஸ் அசோக் லேலாண்டின் புது அவதாரம்!

என்ன மாதிரியான டைப், என்ன மாதியான கேபின், இன்ஜின், கியர்பாக்ஸ், லோடிங் ஸ்பேன், எத்தனை ஆக்ஸில், என்ன மாதிரியான சஸ்பென்ஷன் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தனது தேவைக்கு ஏற்ப வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, லாரி புக்கிங் ஆபீஸுக்குப் பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் போட, இடது பக்கம் டீசல் டாங்க் இருந்தால்தான் வசதி என்றால்... `‘என் லாரிக்கு இடது பக்கம் டீசல் டேங்க்கை வைங்க’’ என்றுகூடச் சொல்ல முடியும். இதில் அசோக் லேலாண்டுக்கு, விஞ்ஞானம் `மாடுலர் ப்ளாட்ஃபார்ம்’ என்ற வடிவில் கைகொடுத்திருக்கிறது. இதுதான் இந்த எல்லாவற்றையும் சாத்தியப்படுத்துகிறது.

அடுத்து i-Gen6 தொழில்நுட்பம் பற்றியும் சொல்லியாக வேண்டும். ட்ரக் வாங்கி ஓட்டுகிறவர்கள், பெரும்பாலும் உழைப்பைத்தான் பெரும் மூலதனமாகக் கருதுகிறவர்கள். அவர்களின் உழைப்பு வீண் போகக் கூடாது என்றால்... அவர்கள் வாங்கும் வண்டி அவர்களுக்குக் கூடுதல் மைலேஜ் கொடுப்பதோடு, அதிக செலவு வைக்காமலும் இருக்க வேண்டும். இதை உறுதி செய்வதுதான் இந்த i-Gen6 தொழில்நுட்பம்.

அவதார் ட்ரக்ஸ் அசோக் லேலாண்டின் புது அவதாரம்!

லாரி டிரைவர்தானே... அவருக்கு எதற்கு வசதி என்று கேட்கிற காலம் மலையேறி ரொம்ப நாள் ஆகிவிட்டது. வாகனத்தை நீண்ட நேரம் ஓட்டுகிறவர் களைப்பில்லாமல் இருந்தால்தான், அவர் ஓட்டும் வாகனத்துக்கும் பாதுகாப்பு; சாலையில் ஓடும் மற்ற வாகனங்களுக்கும் பாதுகாப்பு. அதனால் கேபினுக்கு மட்டும் அலுங்கல் குலுங்கல் இல்லாத தனி சஸ்பென்ஷன், ஓய்வு நேரத்தில் காலை நீட்டிப் படுக்கப் போதுமான இடம் என்பது துவங்கி, ஒரு காரை ஓட்டுகிறவருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் ட்ரக் டிரைவர்களுக்கும் கொடுத்திருக்கிறது அசோக் லேலாண்ட்.

ட்ரக்கின் வடிவம், பிசினஸ் என்று அனைத்தையும் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது அவதார்.