Published:Updated:

கார் ஓட்டுநர்கள் கவனத்துக்கு... ஃப்ரீ ஃபாஸ்டேக் பெறுவதற்கான கடைசி தேதி..?!

Fastag

உங்கள் வாகன விண்ட் ஸ்கிரீனில் ஃபாஸ்டேக்கை ஒட்டிக்கொண்டால், நீங்கள் தொந்தரவில்லாமல் பயணிக்கலாம். இந்த ஃபாஸ்ட் டேக்குகளை 100 ரூபாய் கட்டணம் செலுத்தி வாகன உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சகம் அறிவித்திருந்தது.

கார் ஓட்டுநர்கள் கவனத்துக்கு... ஃப்ரீ ஃபாஸ்டேக் பெறுவதற்கான கடைசி தேதி..?!

உங்கள் வாகன விண்ட் ஸ்கிரீனில் ஃபாஸ்டேக்கை ஒட்டிக்கொண்டால், நீங்கள் தொந்தரவில்லாமல் பயணிக்கலாம். இந்த ஃபாஸ்ட் டேக்குகளை 100 ரூபாய் கட்டணம் செலுத்தி வாகன உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சகம் அறிவித்திருந்தது.

Published:Updated:
Fastag

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள Radio Frequency Identification (RFID) சார்ந்த `ஃபாஸ்டேக்' ஒரு மின்னணு கட்டண வசூல்முறை. நாடுமுழுவதும் செயல்படுத்தப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் இது தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களின் பயணத்தை எளிதாக்கும் ஒரு கருவியாக மாறியுள்ளது. இது கட்டணங்களைச் செலுத்த நீண்ட வரிசைகளைத் தவிர்க்க உதவுகிறது. உங்கள் வாகன விண்ட் ஸ்கிரீனில் ஃபாஸ்டேக்கை ஒட்டிக்கொண்டால், நீங்கள் தொந்தரவில்லாமல் பயணிக்கலாம். இந்த ஃபாஸ்ட் டேக்குகளை 100 ரூபாய் கட்டணம் செலுத்தி வாகன உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சகம் அறிவித்திருந்தது. வாகன ஓட்டிகள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

fastag | ஃபாஸ்டேக்
fastag | ஃபாஸ்டேக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இருப்பினும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், வாகன உரிமையாளர்கள் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பம்புகள், ஆர்.டி.ஓ-க்கள், தேசிய நெடுஞ்சாலை கட்டண பிளாசாக்கள், சேவை மையங்கள் மற்றும் போக்குவரத்து மையங்களில் இந்த ஃபாஸ்டேக்குகளை இலவசமாகப் பெறலாம் என்றும் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஃபாஸ்டேக் வாங்கும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சிறப்பு ஆஃபர் பிப்ரவரி 29 வரை மட்டுமே என்பதையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

NHAI
NHAI

இந்தியா முழுவதும் உள்ள பல பாயின்ட் ஆஃப் சேல் (Point of Sale) இடங்கள் மூலம் 1.55 கோடி பாஸ்டேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஃபாஸ்டேக் பரிவர்த்தனை ஒரு நாளைக்கு 4 மில்லியனுக்கும் அதிகம் என்ற அளவிலான மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலை அமைச்சகம், ``ஃபாஸ்ட் டேக் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாகத் தேசிய நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்ட் டேக் பயனாளர்கள் சுமுகமாக எந்தவித இடைஞ்சல்களும் இல்லாமல் பயணிக்க முடிகிறது. பயணிகளால் ஃபாஸ்ட் டேக் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது அனைத்து சுங்க சாவடிகளிலும் சுங்க கட்டண வசூலிப்பதில் ஒரு வெளிப்படைத்தன்மை வந்துள்ளது என்பதைக் காட்டுகிறது" எனத் தெரிவிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism