Published:Updated:

`தொழிற்சாலையை நிறுத்த மாட்டோம்..!' - கொரோனா விஷயத்தில் ஃபெராரியின் பிடிவாதம்

ஃபெராரி
ஃபெராரி

ஃபெராரி நிறுவனத்தின் தொழிற்சாலை இருக்கும் மார்னெலோ, கொரோனா பாதித்த பகுதி என்று அறிவிக்கப்பட்ட பின்னும் 'தொழிற்சாலையை நிறுத்த மாட்டோம்' என்று கூறியுள்ளது, ஃபெராரி.

இத்தாலியின் மிக முக்கியமான சொகுசு கார் நிறுவனமான ஃபெராரி, கொரோனா தொற்றினால் தங்களின் தொழிற்சாலை மூடப்படாது என்று அறிவித்திருக்கிறது. நேற்று, இந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், தங்களுடைய தொழிற்சாலையில் கொரோனா பரவலைத் தடுக்கத் தேவையான முயற்சிகளை எடுத்துள்ளோம். அதனால், தொழிற்சாலை மூடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபெராரி தொழிற்சாலை
ஃபெராரி தொழிற்சாலை
the mirror uk

உலக அளவில் COVID19 எனும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருகிறது. நேற்று, WHO கொரோனாவை 'பேன்டெமிக் நோய்' (பெருந்தொற்றுநோய்) என்ற வரிசையில் சேர்த்துள்ளது. சீனாவில் இதன் தாக்கம் 70 சதவிகிதம் வரை குறைந்துவிட்டது என்றாலும், மற்ற உலக நாடுகளான இத்தாலி, இரான், தென்கொரியா போன்ற நாடுகளில் குறைந்தபாடில்லை.

இத்தாலி அரசு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று சில வட்டாரங்களை அறிவித்திருக்கிறது. அதில், ஃபெராரி தொழிற்சாலை இயங்கும் மார்னெல்லோவும் அடங்கும். இந்த நிலையில் ஃபெராரி தனது தொழிற்சாலையை மூடப்போவதில்லை, நிறுவனத்துடன் இணைந்து வேலைசெய்யும் சப்ளையர்கள், பாகங்கள் தரும்பட்சத்தில் கார் தயாரிப்பு தொடர்ந்து இயங்கும் என்று கூறியுள்ளது. வேலை செய்யும் இடங்களில் வைரஸ் பரவுவதைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்து அலுவலகங்களிலும் இருக்க வேண்டும் என்று சமீபத்தில் ஒரு சட்டம் இயற்றியது இத்தாலி அரசு.  அந்த நடவடிக்கைகளை ஃபெராரி நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், இதனால் தங்களது தொழிற்சாலையில் வேலைசெய்வது பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளார்கள்.

F1
F1

இந்தச் செய்தி ஒரு பக்கம் இருக்க, ஃபெராரியின் ஃபார்முலா-1 அணி தற்போது ஆஸ்திரேலியா GP போட்டிக்குக் கிளம்பிவிட்டது. மக்கள் ஒன்றுகூட வேண்டாம் என்று பல அறிவிப்புகள் வரும் பட்சத்தில் ஆஸ்திரேலியா F1 போட்டி நடைபெறுமா என்று கேள்வி இருந்தது. ஆனால், போட்டிபோடும் நிறுவனங்களும் டிரைவர்களும் ஏற்கெனவே ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால், இந்தப் போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என்று அறிவித்துவிட்டார்கள்.

தற்போது, தமிழ்நாட்டில் கொரோனா பயம் இல்லையென்றாலும், கொரோனா போன்ற நோய்த் தொற்றுகளைத் தடுக்க இங்கிருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார வசதிகள் உள்ளதா?

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு