Published:Updated:

ட்ரைபர், மேக்னைட் வரிசையில் ரெனோவின் புது வரவு!

ஃபர்ஸ்ட் லுக் ரிப்போர்ட்: ரெனோ கிகர் கான்செப்ட்

பிரீமியம் ஸ்டோரி

ந்தச் செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது, தனது காம்பேக்ட் எஸ்யூவியான மேக்னைட்டின் விலையை நிஸான் அறிவித்திருக்கும். தனது கூட்டாளிக்கு அடுத்தபடியாக, ரெனோ தனது மாடலை அந்தப் பிரிவில் களமிறக்கும் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், கிகர் (Kiger) காரின் கான்செப்ட்டை, ரெனோ கடந்த மாதம் வெளியிட்டு விட்டது. மேலும் க்விட் & ட்ரைபர் வரிசையில், முதலில் கிகர் இந்தியாவில் அறிமுகமாகி (2021 தொடக்கத்தில்), பின்னர் உலகக் கார் சந்தைகளில் அது கிடைக்கும் எனத் தகவல் வந்திருக்கிறது.

ட்ரைபர், மேக்னைட் வரிசையில் ரெனோவின் புது வரவு!

டிசைன்

படங்களைப் பார்க்கும்போது, LED ஹெட்லைட்ஸ் & பெரிய ரெனோ லோகோவைக் கொண்ட கிரில்கள்தான் முதலில் நமது கவனத்தை ஈர்க்கின்றன. காரின் பக்கவாட்டில் உள்ள 19 இன்ச் வீல்களில், MRF Wanderer ஆஃப் ரோடு டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை 210 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸை இன்னும் பெரிதாக்கிக் காட்டுகின்றன. காரின் பின்பக்கத்தில் இரட்டை எக்ஸாஸ்ட் & C வடிவ LED டெயில் லைட் ஆகியவை அழகாகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. மற்றபடி ரூஃபில் இருக்கும் ஸ்ப்ளிட் ஸ்பாய்லர், சரியும் விண்ட்ஷீல்டுடன் பொருந்திப் போகிறது. மேலும் Show Car-ல் இருந்த பெயின்ட், அது நிற்கும் Angle & தன் மீது விழும் வெளிச்சத்தைப் பொறுத்து, வெவ்வேறு நிறங்களைக் காண்பிக்கிறது. `California Dream’ மற்றும் `Aurora Borealis’ என அழைக்கப்படும் இவை, முறையே நீலம் & ஊதா நிறங்கள்தான்! Kiger கான்செப்ட்டில் அதிரடியான டிசைன் அம்சங்கள் இருக்கின்றனவே... இதில் எவையெல்லாம் Production வெர்ஷனில் வரும் என்ற கேள்வி எழாமல் இல்லை. அதற்கேற்ப மேக்னைட்டின் வழியைப் பின்பற்றி... அதாவது கான்செப்ட் காரின் 80% தோற்றம் Production வெர்ஷனில் இருக்கும் என ரெனோ கூறியுள்ளது.

ட்ரைபர், மேக்னைட் வரிசையில் ரெனோவின் புது வரவு!

ஸ்பை படங்கள் நமக்குக் கூறுவது என்ன?

ட்ரைபர் & மேக்னைட்டைத் தொடர்ந்து, ரெனோ - நிஸானின் CMF-A+ ப்ளாட்ஃபார்மில் தயாராகும் மூன்றாவது கார் கிகர். இதன் ஸ்பை படங்கள், ஏற்கெனவே இணைய உலகில் உலவுவது தெரிந்ததே! இதில் கான்செப்ட் காரில் இருக்கும் அம்சங்களைப் பார்க்க முடிவது வரவேற்கத்தக்க விஷயம். இரு Horizontal Slat உடனான V வடிவ கிரில், ஸ்ப்ளிட் ஹெட்லைட்ஸ் & டெயில் லைட்ஸ், பின்பக்கத்தில் சரியும் விண்ட்ஸ்க்ரீன் - ரூஃப் ஸ்பாய்லர் - தடிமனான C-பில்லர், ரூஃப் ரெயில் ஆகியவை அதற்கான உதாரணம். ஆனால் எதிர்பார்த்தபடியே, ஸ்போர்ட்டியான பம்பர்கள் மற்றும் 19 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை, Production வெர்ஷனில் இல்லாமல் போகலாம்.

காரின் டாப் வேரியன்ட்களில் அலாய் வீல்கள் இருந்தால், ஆரம்ப வேரியன்ட்களில் ஸ்டீல் வீல்கள் இருக்கக்கூடும். ட்ரைபர் & மேக்னைட்டில் இல்லாத Shark Fin Antenna, கிகரில் உண்டு என்பது கவனிக்கத்தக்கது.

ட்ரைபர், மேக்னைட் வரிசையில் ரெனோவின் புது வரவு!

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

கிகர் கான்செப்ட்டின் இன்டீரியர் படங்களை, ரெனோ இன்னும் வெளியிடவில்லை. ஆனால் நம் ஊரில் டெஸ்ட் செய்யப்பட்ட காரின் ஸ்பை படங்கள், இதன் கேபின் எப்படி இருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டன. அதன்படி பட்டன்கள் & ஸ்விட்ச்கள், இரட்டை க்ளோவ் பாக்ஸ், டிஜிட்டல் மீட்டர், ஸ்டீயரிங் வீல் ஆகியவை, நாம் ட்ரைபரில் பார்த்ததுதான். என்றாலும் பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், புதிய ஏசி வென்ட்கள், 8 இன்ச் ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி எனச் சில வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன. கூடவே கேபின் நிறத்திலும் மாற்றம் தெரிகிறது. அதாவது ட்ரைபர் டூயல் டோன் கறுப்பு - பீஜ் ஃபினிஷில் இருந்தால், கிகரில் முழுக்க கறுப்பு நிறமே வியாப்பித்திருக்கிறது. ஆனால் மேக்னைட்டில் இருக்கும் First in Class வசதிகள் அனைத்துமே, ரெனோவின் காம்பேக்ட் எஸ்யூவியில் இருக்கும் என்றே தோன்றுகிறது.

இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் விலை

மேக்னைட்டில் இருக்கும் அதே 1.0லிட்டர் NA/டர்போ இன்ஜின்கள் & மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே, கிகரிலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, 72bhp பவரைத் தரும் 1.0 லிட்டர் NA - 3 சிலிண்டர் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் & AMT கியர்பாக்ஸ் உடன் வரும். இதுவே 100bhp பவரைத் தரக்கூடிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 5 ஸ்பீடு மேனுவல் & CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கிறது.

மேக்னைட்டைவிடக் கொஞ்சம் அதிகமான விலையில், கிகர் அடுத்த ஆண்டில் வெளியாவதற்கான சாத்தியம் இருக்கிறது. இவை இரண்டுமே வென்யூ, சோனெட், அர்பன் க்ரூஸர், XUV 3OO, நெக்ஸான், விட்டாரா பிரெஸ்ஸா, எக்கோஸ்போர்ட் ஆகிய காம்பேக்ட் எஸ்யூவிகளுடன் போட்டி போடுகின்றன. கோதாவில் லேட்டாகக் குதித்தாலும், ரெனோ - நிஸானின் அட்டகாசமான விலை, மக்களிடம் அதற்குத் தேவையான வரவேற்பைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு