Published:Updated:

டெஸ்ட்டிங்கில் BS-6 ஃபோர்டு எக்கோஸ்போர்ட்... அட எக்கோபூஸ்ட் இருக்கே!

ஒருவேளை இதே செட்டப் இந்தியாவிலும் வரலாம்; காரின் முன்பக்கம் தெரியவில்லை. அது வலதுபுற ஸ்டீயரிங் அமைப்பைக் கொண்டிருந்ததுடன், கேபின் & அலாய் வீலில் எந்த மாறுதலும் இல்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எக்கோஸ்போர்ட்... இந்தியாவில், அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு விற்பனை செய்யும் காம்பேக்ட் எஸ்யூவி. அந்த செக்மென்ட்டின் பழைய மாடலாக இருந்தாலும், அது குறையாகத் தெரியாதபடி காரை அவ்வப்போது அப்டேட் செய்திருப்பதில் அந்த நிறுவனத்தின் திறமை பளிச்சிடுகிறது எனலாம். மற்ற காம்பேக்ட் எஸ்யூவிகளுடன் ஒப்பிட்டால், இதில் இடவசதி குறைவு என்பதுடன் விலையும் கொஞ்சம் அதிகம்தான். என்றாலும் ஸ்போர்ட்டியான கேபின், சிறப்பான கட்டுமானத் தரம், பவர்ஃபுல் இன்ஜின்கள், அதிக வசதிகள், அசத்தலான ஓட்டுதல் அனுபவம், குறைவான பராமரிப்புச் செலவுகள் எனப் பல ப்ளஸ் பாயின்ட்களைக் கொண்டிருக்கிறது.

எக்கோஸ்போர்ட்
எக்கோஸ்போர்ட்
Ford India

இருப்பினும் இந்த ஆண்டிலேயே ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3OO எனப் புதிய போட்டியாளர்கள் வந்துவிட்டதால், மாதாந்தர விற்பனையில் எக்கோஸ்போர்ட் கொஞ்சம் பின்னடைவையே சந்தித்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஃபோர்டு தயாரிப்பாக இது இருப்பதால் (ஏப்ரல் - செப்டம்பர் 2019 காலகட்டத்தில் 38,593 கார்கள் சனந்த் தொழிற்சாலையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன), நிலைமை சீராக இருந்திருக்கிறது. இந்த நிலையில், எக்கோஸ்போர்ட்டின் BS-6 வெர்ஷனைத் தற்போது தீவிரமாக டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது ஃபோர்டு. இது சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், சென்னையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான தமிழ்ச்செல்வன்.

ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, அது ஏற்றுமதி சந்தைகளில் (Europe, Middle-East, Sub-Saharan Africa, Asia, North America, Australia) விற்பனையாகக்கூடிய எக்கோஸ்போர்ட்டாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில், இதன் டெயில்கேட்டில் ஸ்பேர் வீல் இல்லை என்பதுடன், அதற்குப் பதிலாக நம்பர் பிளேட் இடம்பெற்றிருக்கிறது.

ஒருவேளை இதே செட்டப் இந்தியாவிலும் வரலாம்; காரின் முன்பக்கம் தெரியவில்லை. அது வலதுபுற ஸ்டீயரிங் அமைப்பைக் கொண்டிருந்ததுடன், கேபின் & அலாய் வீலில் எந்த மாறுதலும் இல்லை. Petrol Tank Lid-ல் 'Stage 6 Fuel Petrol' என ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததுடன், டெயில்கேட்டில் எக்கோஸ்போர்ட், டைட்டானியம் பேட்ஜ் தவிர எக்கோபூஸ்ட் பேட்ஜ் இருந்ததுதான் பெரிய ட்விஸ்ட்! உலகளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றாலும், இதுவரை இந்தியாவில் விற்பனையான எக்கோஸ்போர்ட்டில் 5% மட்டுமே இந்த பவர்ஃபுல் & ஸ்மூத் இன்ஜின் கொண்ட கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!

Ecosport BS-6 Spy
Ecosport BS-6 Spy
MV Reader

கார் ஆர்வலர்களுக்குப் பிடித்தமான இந்த இன்ஜின், விரைவாக ஓட்டும்போது குறைவான மைலேஜைத் தரும் என்பது கொஞ்சம் நெருடல்தான். இந்த இன்ஜினை BS-6 விதிகளுக்கேற்ப அப்டேட் செய்வதற்கு அதிக தொகை செலவாகும் என்பதால், குறைவான அளவில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எக்கோபூஸ்ட் இன்ஜினுக்கு எண்ட்கார்டு போட ஃபோர்டு முடிவெடுத்திருப்பது தெரிந்ததே. இதற்கான மாற்றாக, தனது இந்தியக் கூட்டாளியான மஹிந்திராவின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்திக்கொள்ள அந்த நிறுவனம் தீர்மானித்திருக்கிறது.

Ecosport Spy BS-6
Ecosport Spy BS-6
MV Reader

இதுவும் எக்கோபூஸ்ட்டைப் போலவே டைரக்ட் இன்ஜெக்‌ஷன் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் என்பதுடன், அதைவிட அதிக பவர் மற்றும் டார்க்கை இது வெளிப்படுத்தும் எனத் தகவல் வந்திருக்கிறது. இது எப்போது அமலுக்கு வரும் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும். ஆனால், 1.5 லிட்டர் டிராகன் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், BS-6க்கு அப்டேட் ஆகும்.

டெஸ்ட்டிங்கில் ராயல் என்ஃபீல்டின் BS-6 இன்டர்செப்டர் 650, கான்டினென்ட்டல் GT!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு