Published:Updated:

அதிரடி பவர், அசத்தல் இன்ஜினீயரிங், ஆல்வீல் டிரைவ்...டெஸ்லாவுக்கு போட்டியாக எலெக்ட்ரிக் மஸ்டாங்!

Ford Mustang Mach-E
Ford Mustang Mach-E ( Ford Motor Company )

டெஸ்லா கார்களுக்கு இணையான தொழில்நுட்பம், போர்ஷ் கார்களுக்கு இணையான டிரைவிங், 483 கி.மீ ரேஞ்ச்... 55 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய மாற்றம் காணும் மஸ்டாங்.

அமெரிக்கர்களுக்குப் பிடித்த கார் என்றால் அதற்கு ஆகச்சிறந்த உதாரணம் ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் மஸ்டாங். அமெரிக்காவில் மட்டுமில்லை, இந்தியா உட்படப் பல நாடுகளில் இந்த காருக்கென தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனாலேயே இந்த காரில் பெரிய மாற்றங்கள் நிகழாமல் இருந்தன.  இப்போது 55 ஆண்டுகள் கழித்து மஸ்டாங்கை மாற்றியமைத்துள்ளது ஃபோர்டு. இம்முறை எலெக்டரிக் அவதாரம் எடுத்துள்ளது இந்த கார்.

மஸ்டாங் Mach-E
மஸ்டாங் Mach-E

ஆடி, மெர்சிடீஸ், ஜாகுவார் போல ஒரே மாடலாக இல்லாமல் ஃபோர்டின் Mach-E, செலக்ட், ப்ரீமியம், ஃபர்ஸ்ட் எடிஷன், கலிஃபோர்னியா ரூட் 1, ஜிடி என 4 மாடல்களில், பல வேரியன்ட்டுகளில் வருகின்றன. முழு பேட்டரியில் 338 கி.மீ வரை செல்லும் 5 சீட்டர் எஸ்யூவி, 483 கி.மி வரை செல்லும் எக்கனாமிக்கல் மாடல், 0-60 கி.மீ வேகத்தை 3 நொடிகளுக்குள் கடக்கும் (போர்ஷ் 911 GTS மாடலுக்கு இணையான வேகம்) ஸ்போர்ட்ஸ் மாடல், தொலைதூர பயணங்களுக்கு ஏற்ப ரேஞ்ச் அதிகம் கொடுக்கும் வேரியன்ட் என நிறைய ஆப்ஷன்களோடு வந்துள்ளது இந்த எலெக்ட்ரிங் மஸ்டாங். 

விலையை பார்த்தால் எதுவுமே அவ்வளவு மலிவானதாக இல்லை. ஆரம்ப வேரியன்ட்டின் விலையே $43,895 (ரூ.31,50,000). இந்த மாடலின் பெயர் செலெக்ட். இதன் விலைக்கு அமெரிக்காவில் ஒரு உயர்ரக பெட்ரோல் கார் மற்றும் 3 ஐபோன் 11 மொபைல் வாங்கிவிடலாம். செலக்ட் எனும் ஆரம்ப மாடலில், ரியர் வீல் டிரைவ், ஆல் வீல் டிரைவ் என இரண்டு வேரியன்ட் வருகிறது. ஆல் வீல் டிரைவ் வேரியன்ட்டில் காரின் இரண்டு ஆக்ஸில்களிலும் வெவ்வேறு பவர் கொண்ட மோட்டார்கள் பொருத்தியுள்ளார்கள். ரியர் ஆக்ஸிலில் அதிக பவர் கொண்ட மோட்டாரும், ஃபிரன்ட் ஆக்ஸிலில் குறைவான பவர் கொண்ட மோட்டாரும் உள்ளன.

Mach-E
Mach-E

விலை உயர்ந்த மாடலான Mach-E GT-யில் மட்டும் இரண்டும் ஒரே பவர் கொண்ட மோட்டார்கள். ஆல்வீல் டிரைவ் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும் இந்த மாடலின் விலை 60,500 டாலர் (ரூ.43,42,000). இது 459bhp பவர் வெளிப்படுத்துகிறது. 0-60 கி.மீ வேகத்தை 4 நொடிகளுக்குள் தொட்டுவிடும். இதே மாடலின் பர்ஃபாமன்ஸ் வேரியன்ட் 60 கி.மீ வேகத்தை 3 நொடிகளில் தொட்டுவிடுகிறது. 

இன்ஜின் இருக்கும் இடத்தில் ஃபிரிட்ஜ். நெடுஞ்சாலைகளில் நாம் ஓட்டாமல் கார் தானாகவே இயங்கும் CoPilot360 தொழில்நுட்பமும், டெஸ்லாவை போலவே காரின் மொத்த தகவல்களையும் காட்டும் 15.5 இன்ச் டிஜிட்டல் ஸ்கிரீன் எனப் பல நவீன வசதிகளை கொடுத்துள்ளார்கள். யூஎஸ்பி A, யூஎஸ்பி C, ஒயர்லெஸ் சார்ஜிங் என அனைத்து விதமான மொபைல் சார்ஜிங் பாயின்ட்டும் இந்த காரில் வருகிறது. 

Door Handle
Door Handle

கதவை திறக்க ஹேண்டில் கிடையாது. B/C பில்லரில் இருக்கும் பட்டனைத் தட்டினால் கார் கதவு திறக்கும். இந்த காரின் இன்னொரு முக்கிய அம்சம் இதற்கு ஃபோர்டு ஒரு தனித்துவமான சவுண்டை கொடுத்துள்ளது. பேட்மேன் படங்களில் வரும் பேட்மொபைல், பிளேட் ரன்னர் படத்தில் வரும் பறக்கும் கார், ஃபார்முலா E  ரேஸ் கார்களின் சத்தம் 30 தனித்துவமான ஓசைகளை எடுத்துக்கொண்டு அதை டியூன் செய்து இந்த காருக்கு ஒரு மிரட்டலான சத்தத்தை கொடுத்துள்ளார்கள். கார் எந்த மோடில் இருக்கிறது, எந்த வேகத்தில் பயணிக்கிறது என்பதைப் பொருத்து இந்த சத்தம் மாறுபடுமாம். தேவையில்லை என்றால் ஆஃப் செய்துகொள்ளலாம் என்கிறது ஃபோர்டு. 

Vikatan

மஸ்டாங் எனும் லெஜண்டரி பிராண்டை தனது எலெக்ட்ரிக் காரின் விற்பனைக்காக அடமானம் வைத்துள்ளது ஃபோர்டு. இந்த கார் எலெக்ட்ரிக் வாகன உலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துமா... பார்க்கலாம். இந்தியாவில் இந்த கார் வருவதற்கு தற்போது எந்த வாய்ப்பும் இல்லை. இந்தியாவில் ஆஸ்பயர் EV மாடலையே தனது முதல் காராக ஃபோர்டு விற்பனைக்குக் கொண்டுவருகிறது. மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து உருவாக்கியிருக்கும் இந்த கார், முதல்முறை கார் வாங்கும் வாடிக்கையாளர்களையே குறிவைத்தே விற்பனைக்கு வரவுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு