Published:Updated:

`இது கம்பசூத்திரமல்ல... காதல் சூத்திரம்!'- ஆட்டோமோட்டிவ் R&D பயிலரங்கம்! #OnlineWorkshop

FREE online workshop on Automotive R&D Design Workshop

விமானம், யானை, ரயில்... இதையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது! இந்தப் பட்டியலில் காரும் பலருக்கு அடக்கம். அதுவும் கார் எப்படி டிசைன் செய்யப்படுகிறது... அது டிசைன் செய்யப்படும் ஆராய்ச்சிக்கூடத்தில் ஒவ்வொரு படிநிலைகளையும் அது எப்படி தாண்டி வருகிறது என்பதையெல்லாம் அருகில் இருந்து பார்ப்பது பரவசமான ஒர் அனுபவம்.

New Thar 2020
New Thar 2020

வேகம் - மைலேஜ்; உயரம் - நிலைத்தன்மை; உறுதி - எடை... என எதிரும் புதிருமாக இருக்கும் விஷயங்களை சமன் செய்து ஒரு காரின் செயல்திறன், பாதுகாப்பு, விலை ஆகியவற்றை சமாளிப்பது என்பது உண்மையிலேயே கம்ப சூத்திரம். ஆனால் உண்மையில் இது கம்ப சூத்திரமல்ல. காதல் சூத்திரம் என்பதை மஹிந்திராவின் வாகனங்கள் டிசைன் செய்யப்படும் மஹிந்திரா ரிசர்ச் வேளிக்கு சென்றால் புரியும்.

Mahindra Research Valley
Mahindra Research Valley
ஆப்பிளின் எலக்ட்ரிக் கார் கனவு... கைகோக்கிறதா ஹூண்டாய்?!

அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு அத்தனை பேருக்கும் எளிதில் கிடைத்துவிடாது என்பதால்... மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தையே இதயமாக இருந்து இயக்கிவரும் வேலுசாமி, மைகேல் ஸ்மித், நவீன் சோப்ரா, அக்கிலா ஷர்மா, சங்கர் வேணுகோபால், சமீர் ராத்தே ஆகிய ஜாம்பவான்களை கொண்டு Automotive R&D Design என்ற தலைப்பில், தன் வாசகர்களுக்கு குறிப்பாக ஆட்டோமொபைலில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு மோட்டார் விகடன் ஒரு பயிலரங்கத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.

Online Workshop Details
Online Workshop Details

ஐந்து நாட்கள் நடக்கயிருக்கும் இந்தப் பயிலரங்கம்... ஆட்டோமொபைல் உலகின் பல கதவுகளைத் திறந்துவிடும் வல்லமை கொண்டது மாத்திரமல்ல, இதில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு அது e-certificate வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது.

Motor Vikatan & Mahindra presents, FREE online workshop on 'Automotive R & D Design' workshop for Students

5 Saturdays - 5 Speakers

Date: Jan 16, 23, 30 & Feb 6, 13

Time: 10.30 am to 12.30 Noon

To Register - Click here https://bit.ly/2KZwb3D

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு