Published:Updated:

அறிமுகம்: புதிய கலரில் ஹீரோவின் BS-6 125சிசி ஸ்கூட்டர்கள்!

BS-6 ஸ்கூட்டர்
BS-6 ஸ்கூட்டர் ( Hero Motocorp )

டெஸ்ட்டினி மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் கார்புரேட்டர் ஆகிய BS-4 125சிசி மாடல்களுடன் ஒப்பிட்டால், இந்த BS-6 வெர்ஷன் 10% அதிக ஆக்ஸிலரேஷனையும் 11% அதிக மைலேஜையும் தரும் என்கிறது ஹீரோ.

ப்ளஷர் ப்ளஸ்ஸைத் தொடர்ந்து, டெஸ்ட்டினி மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் ஆகிய 125சிசி ஸ்கூட்டர்களின் BS-6 வெர்ஷன்களைத் தற்போது களமிறக்கியிருக்கிறது ஹீரோ. இவை இரண்டிலுமே, 9bhp பவர் - 1.04kgm டார்க்கைத் தரும் 125சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது BS-4 மாடலைவிட 0.3bhp அதிக பவர் மற்றும் 0.02kgm அதிக டார்க் தருவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்! எனவே, டெஸ்ட்டினி மற்றும் மேஸ்ட்ரோ எட்ஜ் கார்புரேட்டர் ஆகிய BS-4 125சிசி மாடல்களுடன் ஒப்பிட்டால், இந்த BS-6 வெர்ஷன் 10% அதிக ஆக்ஸிலரேஷனையும் 11% அதிக மைலேஜையும் தரும் என்கிறது ஹீரோ.

BS-6 ஸ்கூட்டர்
BS-6 ஸ்கூட்டர்
Hero Motocorp

PGM-Fi உடன் i3S சிஸ்டம் தொடர்வது செம. இந்த ஸ்கூட்டர்களின் அளவுகள் பற்றிய விவரங்களை இந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. மேலும், டிசைனிலும் எந்த மாறுதல்களும் இல்லை. ஆனால் வித்தியாசங்களைப் பொறுத்தவரை, டெஸ்ட்டினியில் புதிதாக Matt Grey Silver கலர் வழங்கப்படுகிறது. மேலும் 3D க்ரோம் லோகோ, LED பார்க்கிங் லைட் சேர்க்கப்பட்டுள்ளது. LX வேரியன்ட்டின் விலை 7,410 ரூபாயும், VX மாடலின் விலை 7,000 ரூபாயும் அதிகரித்துள்ளன. விலைகுறைவான 125சிசி ஸ்கூட்டர்களில் ஒன்றான BS-6 டெஸ்ட்டினியில், முன்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகக் கூட இல்லாதது நெருடல். ஆனால், பிராக்டிக்கலான அம்சங்கள் தொடர்வது ஆறுதல்.

முன்பைவிடக் குறைவான பவர், அதிக எடை.... BS-6 ஹோண்டா டியோ... என்ன ஸ்பெஷல்?

மேஸ்ட்ரோ எட்ஜ் 125-ல் புதிதாக Iridescent - Prismatic Purple கலர் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது டிஸ்க் பிரேக் மாடலில் மட்டுமே கிடைக்கும் என்பதைச் சொல்லியாக வேண்டும் (500 ரூபாய் அதிகம்). இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பின்பக்கத்தில் 12 இன்ச் வீல் சேர்க்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மேலும் போட்டி 125சிசி ஸ்கூட்டர்களில் இருக்கும் சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச், இன்ஜின் கில் ஸ்விட்ச், LED ஹெட்லைட்ஸ் ஆகியவை இதில் இல்லாதது மைனஸ்.

மேஸ்ட்ரோ எட்ஜ் 125
மேஸ்ட்ரோ எட்ஜ் 125
Hero Motocorp
டெஸ்ட்டினி 125
டெஸ்ட்டினி 125
Hero Motocorp

125சிசி செக்மென்ட்டின் விலை அதிகமான மாடல்களில் ஒன்றான BS-6 மேஸ்ட்ரோ எட்ஜ், BS-4 மாடலைவிட 7,580 - 8,280 ருபாய் அதிக விலையில் வந்துள்ளது. மற்றபடி i3S சிஸ்டம், டெலிஸ்கோபிக் ஃபோர்க், அனலாக் டிஜிட்டல் மீட்டர், External Fuel Lid, பல வசதிகளைக் கொண்ட சாவி துவாரம், அலாய் வீல்கள், டியூப்லெஸ் டயர்கள், MF பேட்டரி, ஹாலோஜன் ஹெட்லைட், சீட்டுக்கு அடியே USB சார்ஜர் மற்றும் Boot Light, சர்வீஸ் & சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர்கள், Textured சீட் கவர், க்ரோம் லோகோ, காம்பி பிரேக்ஸ் ஆகியவை இரு 125சிசி ஸ்கூட்டர்களிலும் உள்ளன.

அடுத்த கட்டுரைக்கு