Published:Updated:

2020 ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்...! இந்தியாவின் டாப் செல்லிங் பைக் தற்போது BS-6 வடிவில்

ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்
ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் ( Hero Motocorp )

பைக்கின் டிசைனில் மாற்றமில்லாவிட்டாலும், புதிய கிராஃபிக்ஸ் மற்றும் எக்ஸாஸ்ட் பைப் இருக்கிறது. வசதிகளில் எந்த மாறுதலும் இல்லையென்றாலும், பைக்கின் அளவுகளில் வித்தியாசம் தெரிகிறது.

ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்.... இந்த பைக்குக்குப் பெரிதாக எந்த அறிமுகமும் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் `இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் பைக்' என்ற பெருமையைப் பல ஆண்டுகளாகத் தன்வசம் வைத்திருக்கும் இந்த கம்யூட்டர் பைக்கை, BS-6 விதிகளுக்கேற்ப மேம்படுத்தியுள்ளது ஹீரோ. முன்பைப் போலவே 3 வேரியன்ட்கள் - சில்வர்/கறுப்பு கலர் காம்போ உடன் கிடைக்கும் BS-6 ஸ்ப்ளெண்டர் ப்ளஸ், BS-4 மாடலைவிட 6,800-7,100 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கிறது.

Splendor Plus
Splendor Plus
Hero Motocorp

பைக்கின் டிசைனில் மாற்றமில்லாவிட்டாலும், புதிய கிராஃபிக்ஸ் மற்றும் எக்ஸாஸ்ட் பைப் இருக்கிறது. ஆனால் வசதிகளில் எந்த மாறுதலும் இல்லை, என்றாலும் பைக்கின் அளவுகளில் வித்தியாசம் தெரிகிறது. 12மிமீ கூடுதல் உயரம் (1,052மிமீ), 6மிமீ அதிக வீல்பேஸ் (1,236மிமீ), 6மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் (165மிமீ) ஆகியவை அதற்கான உதாரணம். மேலும், பெட்ரோல் டேங்க்கின் அளவு 9.8 லிட்டராகச் சுருங்கிவிட்டது (முன்பைவிட 0.7 லிட்டர் குறைவு)! கிக் மாடலின் எடை 1 கிலோ கூடியும் (110 கிலோ), செல்ஃப் மாடலின் எடை 1 கிலோவும் குறைந்துள்ளன (112 கிலோ);

`இந்தியாவின் முதல் BS-6 பைக்' - ஹீரோ ஸ்ப்ளெண்டர் i-Smart-ல் என்ன ஸ்பெஷல்?
ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்
ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்
Hero Motocorp

97.2சிசி ஷார்ட் ஸ்ட்ரோக் இன்ஜினில், எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதிலாக XSens உடனான ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் (PGM-Fi) இடம்பிடித்துள்ளது. 4 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த இன்ஜின், 7.91bhp பவர்@8,000rpm (முன்பைவிட 0.4bhp குறைவு) - 0.8kgm@6,000rpm டார்க்கைத் தருகிறது. BS-4 மாடலைவிட, BS-6 வெர்ஷன் 6% அதிக ஆக்ஸிலரேஷனையும், 9% அதிக மைலேஜையும் தரும் என ஹீரோ தெரிவித்துள்ளது. மற்றபடி டியூப்லெஸ் டயர்கள், MF பேட்டரி, i3S சிஸ்டம், காம்பி பிரேக்ஸ், பின்பக்க 130மிமீ டிரம் பிரேக் மற்றும் 5 Step அட்ஜஸ்டபிள் ஷாக் அப்சார்பர், செல்ஃப் ஸ்டார்ட், அலாய் வீல்கள் என அடிப்படையான சிறப்பம்சங்கள் அப்படியே தொடர்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு