Published:Updated:

`2 வேரியண்டுகள்; 3 நிறங்கள்!’-ஹீரோவின் புதிய அறிமுகம்; எக்ஸ்ட்ரீம் 160R

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R

`பிஎஸ் 6 அப்கிரேடுடன் ஃபியூல் இஞ்ஜெக்‌ஷன், ஏர் கூல்டு வசதியுள்ள 160 சிசி எஞ்சின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது’.

இருசக்கர வாகன தயாரிப்பில் உலகின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் இன்று இந்தியாவில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R, முதன்முதலாகக் கடந்த பிப்ரவரி மாதம் ஹீரோ வேர்ல்ட் 2020 என்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 1R கான்செப்ட் அடிப்படையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஎஸ் 6 அப்கிரேடுடன் ஃபியூல் இஞ்ஜெக்‌ஷன், ஏர் கூல்டு வசதியுள்ள 160 சிசி எஞ்சின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 15bhp பவர் மற்றும் 14 Nm டார்க்கைத் தருகிறது. புதிய எக்ஸ்ட்ரீம் 160R பைக், 0 முதல் 60 கி.மீ வேகத்தை வெறும் 4.7 விநாடிகளில் அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R
ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R

முன் சக்கரத்தில் 276 மி.மீ பெடல் டிஸ்க் பிரேக்கும் பின் சக்கரத்தில் 220 மிமீ பெடல் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், முன்பகுதியில் 13 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஸ்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோனோஷாக், டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூப்லஸ் டயர்கள், சைட் ஸ்டாண்ட் எஞ்சின் கட் ஆஃப் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இந்த புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R-ல் உள்ளன. இரண்டு வேரியண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப விலையையும் நிர்ணயித்துள்ளது ஹீரோ. ஃப்ரண்ட் டிஸ்க் வசதி மட்டும் கொண்ட வேரியண்ட் 99,950 ரூபாய் என்ற விலையிலும் டபுள் டிஸ்க் வசதியுடன் கூடிய டாப் வேரியண்ட் 1,03,500 ரூபாய் (எக்ஸ் ஷோரூம் டெல்லி) என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

விரைவில் விற்பனைக்கு வர உள்ள இந்த புதிய மாடல் சில்வர் ஒயிட், வைப்ரண்ட் புளூ மற்றும் ஸ்போர்ட்ஸ் ரெட் ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது. சந்தையில், அப்பாச்சி 160, ஜிக்ஸர் போன்ற பைக்குகளுக்கு கடுமையான போட்டியை ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு