Published:Updated:

கூலிங் ஃபேன் கோளாறு!- ரீகால் செய்யப்படும் BS-6 ஆக்டிவா 125

ஹோண்டா ஆக்டிவா 125 BS-6
ஹோண்டா ஆக்டிவா 125 BS-6

ஹோண்டா தனது ஆக்டிவா 125 BS-6 மாடல்களை ரீகால் செய்வதாக அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்டிவா 125 ஸ்கூட்டர்களின் கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் கேஜில் பிரச்னை இருப்பதாகவும் அதை மாற்றித்தருவதாகவும் ஹோண்டா தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ரீகால் அறிவிப்பு
ரீகால் அறிவிப்பு

என்ன பிரச்னை இருக்கிறது என்பதைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பிரச்னைக்கு உட்பட்ட பாகங்களை மாடிஃபை அல்லது சரிசெய்து தருவது வழக்கம். ஆனால், இந்தப் பாகங்களை புதிதாக மாற்றித்தருவதாக ஹோண்டா அறிவித்திருக்கிறது. இதற்கு எந்தக் கட்டணமும் தேவையில்லை. ஹோண்டா ஷோரூம்களுக்குச் சென்றால் 30 நிமிடங்களில் இந்தப் பாகங்கள் மாற்றித்தரப்படும்.

ஆக்டிவா 125
ஆக்டிவா 125

எந்தத் தேதியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஸ்கூட்டர்கள் ரீ கால் செய்யப்படுகின்றன என்பதும் அறிவிக்கப்படவில்லை என்பதால் உங்களுடைய வாகனத்தின் VIN (சேஸி எண்) பதிவிட்டு உங்களுடைய ஸ்கூட்டர் ரீகால் செய்யப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். 

எப்படி இருக்கிறது இந்தியாவின் முதல் BS-6 ஸ்கூட்டர்?

ஏதாவது வாகனத்தில் தொடர்ந்து பிரச்னை வரும் அல்லது தயாரிப்பில் கோளாறு ஏற்படும் சூழலில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வாகனத்தை ரீ கால் செய்வது வழக்கம். ஏற்கெனவே ஹோண்டாவின் பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் பலமுறை ரீ கால் செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா ஆக்டிவா 125 BS-6 மாடல் 83,748 ரூபாய் விலையில் ஆரம்பித்து 91,442 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு