Published:Updated:
6G ஆக்டிவா வந்தாச்சு! என்னென்ன புதுசு? Honda Activa 6G
ஆக்டிவா... இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர்... ஏன் டூ-வீலர் என்று கூடச் சொல்லலாம். நம் அனைவரும் நிச்சயம் ஒருமுறையாவது இதில் பயணித்திருப்போம். மிடில் கிளாஸ் குடும்பங்களின் முதல் வாகனமாகவும், கார் அல்லது பெரிய பைக் வைத்திருப்போரின் இரண்டாவது வாகனமாகவும் ஆக்டிவா இருக்கும். நம் நாட்டை கியர்லெஸ் மயமாக்கிய பெருமை கொண்ட இந்த ஸ்கூட்டரின் BS-6 வெர்ஷனைக் களமிறக்கிவிட்டது ஹோண்டா. முன்பைவிட அதிக விலை & வசதிகளுடன் இருக்கும் இதை, நாங்கள் போக்குவரத்து நெரிசல்மிக்க மும்பையில் ஓட்டிப் பார்த்தோம். அதன் டெஸ்ட் ரைட் ரிவ்யூ வீடியோ இதோ... Honda Activa 6G Test Ride Review Video