Published:Updated:

`ரூ. 15.35 - 16.10 லட்சம்!'- வந்துவிட்டது, ஹோண்டாவின் CRF1100L ஆப்பிரிக்கா ட்வின்

CRF1100L
CRF1100L ( ஹோண்டா இந்தியா )

CRF1100L ஆப்பிரிக்கா ட்வின்னில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய ஃபிரேம், பைக்கின் சிறப்பான கையாளுமைக்குத் துணைநிற்கும் என்கிறது ஹோண்டா. அலுமினிய சப் ஃபிரேம் மற்றும் உறுதியான புதிய ஸ்விங் ஆர்ம் ஆகியவை எடைக்குறைப்புக்கு உதவியுள்ளன.

சர்வதேசச் சந்தைகளில் கடந்தாண்டு செப்டம்பர் மாதத்திலேயே விற்பனைக்கு வந்துவிட்டாலும், தற்போது மூன்றாம் தலைமுறை CRF1100L ஆப்பிரிக்கா ட்வின் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட்டது ஹோண்டா. முந்தைய மாடல் DCT உடன் மட்டுமே நம் நாட்டில் கிடைத்த நிலையில், முற்றிலும் புதிய மாடல் மேனுவல் (15.35 லட்ச ரூபாய்) மற்றும் DCT (16.10 லட்ச ரூபாய்) என இரு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் களமிறங்கியுள்ளது (விலைகள் அனைத்தும் இந்திய எக்ஸ்-ஷோரூம்).

உலகளவில் ஸ்டாண்டர்டு மற்றும் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என இரு வேரியன்ட்களில் CRF1100L ஆப்பிரிக்கா ட்வின் கிடைத்தாலும், இந்தியாவுக்கு வந்திருப்பது விலை அதிகமான அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ்தான்! இதன் புக்கிங் அதிகாரபூர்வமாகத் தொடங்கினாலும், டெலிவரிகள் மே 2020 முதலாகத்தான் எனத் தகவல் வந்துள்ளது.

CRF1100L
CRF1100L
ஹோண்டா இந்தியா

முன்பைப் போலவே இதிலும் பேரலல் ட்வின் இன்ஜினே இருந்தாலும் (2 சிலிண்டர்), அது கூடுதலாக 86 சிசியைப் பெற்றிருக்கிறது (1,084சிசி). இந்திய மாடலின் டெக்னிக்கல் விவரங்களை ஹோண்டா வெளியிடவில்லை. ஓர் உதாரணத்துக்குச் சொல்வதென்றால், பிரிட்டனில் விற்பனை செய்யப்படும் மாடல், 102bhp@7,500rpm பவர் - 10.5kgm@6,250rpm டார்க்கைத் தருகிறது. இது பழைய மாடல் வெளிப்படுத்திய 89bhp@7,500rpm பவர் - 9.31kgm@6,000rpm டார்க்கைவிட 6% அதிகம்தான். CRF1100L ஆப்பிரிக்கா ட்வின்னில் பயன்படுத்தப்பட்டுள்ள புதிய ஃபிரேம், பைக்கின் சிறப்பான கையாளுமைக்குத் துணைநிற்கும் என்கிறது ஹோண்டா.

CRF1100L
CRF1100L
ஹோண்டா இந்தியா

அலுமினிய சப் ஃபிரேம் மற்றும் உறுதியான புதிய ஸ்விங் ஆர்ம் ஆகியவை எடைக்குறைப்புக்கு உதவியுள்ளன. இதனால், புதிய CRF1100L ஆப்பிரிக்கா ட்வின்னின் ஸ்டாண்டர்டு மாடல், 3 கிலோ எடை குறைந்திருக்கிறது (227 கிலோ). அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடலின் எடை 243 கிலோ என்பது போட்டியாளர்களைவிட அதிகமாகத் தெரிந்தாலும், பெரிய 24.8 லிட்டர் பெட்ரோல் டேங்க் - Showa Electronically Equipped Ride Adjustment அதைச் சரிக்கட்டிவிடுகிறது.

CRF1100L
CRF1100L
ஹோண்டா இந்தியா

6 ஆக்ஸிஸ் IMU, Wheelie கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ், ரியர் லிஃப்ட் கன்ட்ரோல், கார்னரிங் லைட்ஸ், DCT கார்னர் Dectection, க்ரூஸ் கன்ட்ரோல் எனப் பல பாதுகாப்பு வசதிகள் இருப்பது செம. பைக்கின் 6.5 இன்ச் TFT டிஸ்பிளேவில், ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டி இருக்கிறது! அட்வென்ச்சர் ஸ்போர்ட் மாடலில் கூடுதலாக டியூப்லெஸ் வீல்கள், சார்ஜிங் பாயின்ட், பெரிய Skid பிளேட், பின்பக்க அலுமினிய Rack, Heated Grips என அம்சங்கள் உள்ளன. ட்ரையம்ப் டைகர் 900, பிஎம்டபிள்யூ F 850 GS ஆகிய ADV பைக்குகளுடன் போட்டியிடும் CRF1100L ஆஃப்ரிக்கா ட்வின், முன்பிருந்த மாடலைவிடச் சுமார் 1.85-2.6 லட்ச ரூபாய் அதிக விலையில் வந்துள்ளது. ஆனால், அதில் இந்தளவுக்கு வசதிகள் மற்றும் பவர் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு