Published:Updated:

முன்பைவிடக் குறைவான பவர், அதிக எடை.... BS-6 ஹோண்டா டியோ... என்ன ஸ்பெஷல்?

ஹோண்டா டியோ BS-6
ஹோண்டா டியோ BS-6 ( Honda 2 Wheelers )

டியோ ஸ்கூட்டரின் எந்த வேரியன்ட்டிலுமே, அலாய் வீல்கள் - டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகக் கூட வழங்கப்படவில்லையே? தவிர சீட்டுக்கு அடியே, USB சார்ஜர் மற்றும் Boot லைட் இல்லாதது நெருடல்.

சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியான டீசர்களைத் தொடர்ந்து, BS-6 டியோவைக் களமிறக்கிவிட்டது ஹோண்டா. BS-4 மாடல் போலவே இதுவும் ஸ்டாண்டர்டு (65,726 ரூபாய்), டீலக்ஸ் (69,076 ரூபாய்) எனும் 2 வேரியன்ட்கள் - 6 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது (விலைகள் அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம்). முன்பைவிட 8,262 - 9,612 ரூபாய் அதிக விலையில் வந்திருக்கும் டியோ BS-6, புதிய மெக்கானிக்கல் பாகங்களுடன் அதிக வசதிகளையும் தன்வசப்படுத்தியுள்ளது. ஆக்டிவா 6G ஸ்கூட்டரின் யூத்ஃபுல் வெர்ஷனாக அறியப்படும் இந்த ஸ்கூட்டரில் என்னென்ன மாறியிருக்கின்றன?

டிசைன் மற்றும் வசதிகள்

ஹோண்டா டியோ
ஹோண்டா டியோ
Honda 2 Wheelers

டியோ BS-6 தோற்றத்தில் பெரிய மாறுதல்கள் தெரியாவிட்டாலும், சிற்சில முன்னேற்றங்கள் கண்கூடாகத் தெரிகின்றன. முன்பக்கத்தில் உள்ள LED ஹெட்லைட்டின் கீழ்ப்பகுதி, LED ஹெட்லைட்டின் இருபுறமும் உள்ள இண்டிகேட்டர்கள், LED DRL-ன் வடிவமைப்பு, டெலிஸ்கோபிக் ஃபோர்க், 12 இன்ச் வீல், Bar End Weight உடனான ஹேண்டில்பார் ஆகியவை அதற்கான உதாரணம். பக்கவாட்டில் இருந்து பார்த்தால், சோக் லீவர் இருந்த இடத்தில் மொபைல் வைக்க ஸ்டோரேஜ் உள்ளது. இதேபோல சாவி துவாரத்துக்கு அருகேயும் ஸ்டோரேஜ் உண்டு. முன்பக்க ஏப்ரானுக்கு உள்ளேயிருந்து, ஃப்ளோர் போர்டுக்கு அடியே பேட்டரி இடம் மாறிவிட்டது. மேலும், பின்பக்க பயணிக்கு எனத் தனியாக அலாய் ஃபுட் பேக் கொடுக்கப்பட்டிருப்பதும் செம. ஆனால், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச், 2 வேரியன்ட்டிலுமே ஆப்ஷனலாக வழங்கப்படுவது மைனஸ். ஸ்பிளிட் கிராப் ரெயில், பாஸ் லைட் ஸ்விட்ச், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் ஸ்விட்ச் ஆகியவை இது புதிய மாடல் என்பதை உணர்த்துகின்றன.

முன்பைப் போலவே, டீலக்ஸ் மாடலில் எக்கோ - சர்வீஸ் - மைலேஜ் இண்டிகேட்டருடன் கூடிய Full டிஜிட்டல் மீட்டர், LED ஹெட்லைட், தங்க நிற வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவே ஸ்டாண்டர்டு மாடலில் ஹாலோஜன் ஹெட்லைட், அனலாக் மீட்டர், கறுப்பு நிற வீல்கள் உள்ளன. ஆனால், ஸ்போர்ட்டி ஸ்கூட்டராக அறியப்படும் டியோவின் எந்த வேரியன்ட்டிலுமே, அலாய் வீல்கள் - டிஸ்க் பிரேக் ஆப்ஷனலாகக் கூட வழங்கப்படவில்லையே? தவிர சீட்டுக்கு அடியே, USB சார்ஜர் மற்றும் Boot லைட் இல்லாதது நெருடல்.

ஹோண்டா டியோ BS-6
ஹோண்டா டியோ BS-6
Honda 2 Wheelers
BS-6 யமஹா FZ-S V3.0 பைக்கில் என்ன ஸ்பெஷல்?

ஆனால், புதிய டெயில் லைட்டுக்கு மேலே, External Fuel Lid சேர்க்கப்பட்டுள்ளது ஆறுதல். இதையும் சீட்டையும், Multi-Function Key Slot வழியே திறக்க முடியும். எக்ஸாஸ்ட் பைப்பின் தோற்றம் வித்தியாசமாக உள்ளது. டியோ BS-6ன் அளவுகளைப் பொறுத்தவரை, 28மிமீ கூடுதல் நீளம் (1,808மிமீ) - 13மிமீ கூடுதல் அகலம் (723மிமீ) - 17மிமீ கூடுதல் உயரம் (1,150மிமீ) - 22மிமீ கூடுதல் வீல்பேஸ் (1,260மிமீ) - 2மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் (160மிமீ) என வளர்ந்திருக்கிறது. 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்க் மற்றும் பின்பக்க 10 இன்ச் வீல் தொடர்ந்தாலும், ஸ்கூட்டரின் எடை முன்பைவிட 1 கிலோ அதிகரித்துவிட்டது (105 கிலோ).

இன்ஜின் மற்றும் மெக்கானிக்கல் பாகங்கள்

ஹோண்டா டியோ BS-6
ஹோண்டா டியோ BS-6
Honda 2 Wheelers
2020 யமஹா MT-15 மற்றும் FZ-25 
BS-6 பைக்குகளில் என்ன ஸ்பெஷல்?

BS-4 மாடல் போலவே (109.19சிசி), BS-6 வெர்ஷனும் 110சிசி இன்ஜினையே கொண்டிருக்கிறது (109.51சிசி). ஆனால், எதிர்பார்த்தபடியே கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. eSP - ACG சைலன்ட் ஸ்டார்ட் - HET ஆகிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், Long Stroke அமைப்பில் தயாராகியுள்ளது (47மிமீ Bore X 63.1மிமீ Stroke). BS-4 இன்ஜினைவிட (9.5:1), BS-6 இன்ஜினின் கம்ப்ரஷன் ரேஷியோ அதிகமாக இருக்கிறது (10:1).

செல்ஃப் ஸ்டார்ட் உடன், கிக் ஸ்டார்ட் இருப்பதும் நன்மையே. ஆக்டிவா 125-ல் இருக்கும் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், இங்கே சேர்க்கப்படவில்லை. புதிய அண்டர்போன் சேஸியின் முன்பக்கத்தில் 12 இன்ச் வீல் - டெலிஸ்கோபிக் ஃபோர்க் - 130மிமீ டிரம் பிரேக் மற்றும் பின்பக்கத்தில் 10 இன்ச் வீல் - ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் - 130மிமீ டிரம் பிரேக் இருக்கின்றன. டியூப்லெஸ் டயர்கள், 3Ah MF பேட்டரி அப்படியே தொடர்ந்தாலும், பின்பக்க ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பருக்கு 3 Step அட்ஜெஸ்ட் வசதி இருப்பது நைஸ். ஆக்டிவா 6G போலவே, டியோவின் ஓட்டுதல் அனுபவம் மற்றும் மைலேஜில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

முதல் தீர்ப்பு

ஹோண்டா டியோ BS-6
ஹோண்டா டியோ BS-6
Honda 2 Wheelers

யமஹா ரே, டிவிஎஸ் வீகோ, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 ஆகிய ஸ்கூட்டர்களுடன் போட்டிபோட்டது ஹோண்டா டியோ BS-6. ஆனால் BS-6 அவதாரத்தில், ரே 125சிசிக்கு புரமோஷன் பெற்றுச்சென்றுவிட்டது. வீகோவின் உற்பத்தி நிறுத்தப்படலாம் என்ற பேச்சு நிலவுவதுடன், அதன் BS-6 மாடல் இன்னும் வரவில்லை. ப்ளஷர் ப்ளஸ்ஸின் BS-6 மாடல் வந்துவிட்ட சூழலில், மேஸ்ட்ரோ எட்ஜின் BS-6 வெர்ஷனும் விரைவில் வரலாம். டியோ BS-6ன் விலை உயர்வு கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், அதிக வசதிகள் அந்தக் குறைபாட்டைச் சரிசெய்யும் எனலாம். ஆனால், இதன் பொசிஷனிங்கை வைத்துப் பார்த்தால், சில சிறப்பம்சங்களை ஹோண்டா இதில் கொடுத்திருக்கலாம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இளசுகளுக்கு ஏற்ற ஸ்கூட்டராக டியோ தனது மதிப்பைத் தொடர்ந்து பெறும் என்றே தோன்றுகிறது.

அடுத்த கட்டுரைக்கு