Published:Updated:

கொரோனாவுக்காக லோகோவை மாற்றிய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!

லேப்டாப், டி.வி, மொபைல் என மக்கள் ஸ்க்ரீன்களுடனேயே தொடர்பில் இருக்கிறார்கள். இவை அனைத்தையும் இணைக்கும் புள்ளியாக இருக்கும் சமூக வலைதளங்களில், வதந்திகளைத் தாண்டி மக்களுக்குத் தேவையான தகவல்களையும் கொண்டுசேர்ப்பது சுலபம்தான்!

COVID-19 உலகையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. பாதிப்பைத் தடுக்க, உலக நாடுகள் தமது மக்களை வீடுகளிலேயே இருக்குமாறு தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றன. இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் மக்கள் லேப்டாப் (Work From Home), டி.வி (நடுத்தர வயதினர்), மொபைல் (இளைஞர்கள்) என ஸ்க்ரீன்களுடனேயே தொடர்பில் இருக்கிறார்கள்.

Morris Garages Logo
Morris Garages Logo
MG Motors India

இவை அனைத்தையும் இணைக்கும் புள்ளியாக இருக்கும் சமூக வலைதளங்களில், வதந்திகளைத் தாண்டி மக்களுக்குத் தேவையான தகவல்களையும் கொண்டு சேர்ப்பது சுலபம்தான்! எனவே, புதிய வாகன விற்பனையில் பலத்த அடியைப் பெற்றிருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தைத் தமது பாணியில் இணையதளங்களில் பரப்பிவருகின்றன. அவற்றுள், மக்களிடம் பெருவாரியான வரவேற்பைப் பெற்றிருக்கும் சிலவற்றை தற்போது காணலாம்.

வார்த்தைகளைவிட படம் பேசுவது அதிகம்!

கொரோனா
கொரோனா
Autocar India

Social Distancing... கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு முன் இந்த வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போமா... ஆனால், தற்போது அனைவரின் பேச்சிலும் மெசேஜிலும் இது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க தமது லோகோவையே சமூக இடைவெளியை நாசுக்காக உணர்த்தும் விதமாக மாற்றியிருக்கிறார்கள். ஃபோக்ஸ்வாகன், ஆடி, மெர்சிடீஸ் பென்ஸ், MG, சிட்ரன், ஜாகுவார் ஆகியோர் அதற்கான உதாரணம். அதன்படி லோகோக்களில் சேர்ந்திருந்த எழுத்துகள் எல்லாம், இப்போது தனித்தனியாக ஆகிவிட்டன. இதன் வீடியோக்கள் க்யூட் ரகம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹேஷ்டேக்ஸ்?

#FlattenTheCurve
#FlattenTheCurve
BMW

̀Flatten The Curve’ என்பதற்கான அர்த்தம், கொரோனாவின் வீச்சைக் குறைப்பது ஆகும். எனவே, அதற்கேற்ற பாணியிலும் விழிப்புணர்வு செய்து வருகிறார்கள். 'Sheer Driving Pleasure' என்ற தனது கோட்பாட்டை, டைமிங்காக 'Sheer Non-Driving Pleasure' என அப்டேட் செய்திருக்கிறது பிஎம்டபிள்யூ. மேலும், #FlattenTheCurve எனும் ஹேஷ்டேக்கை இதற்காகப் பிரபலப்படுத்திவருகிறது இந்த நிறுவனம். மாருதி சுஸூகி (#GearUpForTomorrow), ஹோண்டா (#UnitedWithDistance), ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் வெளியே செல்வதைத் தவிர்த்துவிட்டு, வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.

படம் வரையலாம் வாங்க!

#ParkedForSafety
#ParkedForSafety
Ford India

வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில், நமக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டுவரலாம் இல்லையா... #ParkedForSafety என்ற ஹேஷ்டேக்குடன், சர்வதேச குழந்தைகள் புத்தக தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடியது ஃபோர்டு. புள்ளிகளை இணைத்தல், கலரிங் பக்கங்கள், Maze விளையாட்டு ஆகியவற்றை உள்ளடக்கிய Activity புத்தகத்தை ட்விட்டரில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது குழந்தைகளுக்கானது என்றாலும், இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் இருப்போரும் அதைப் பயன்படுத்திப்பார்க்கலாம்.

புதிய கண்டுபிடிப்புகள் வேண்டும்!

#VentilatorChallenge
#VentilatorChallenge
Morris Garages India

தங்கள் தொழிற்சாலைகளில் வாகனங்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டு, தற்போதைய சூழலில் அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டன பல நிறுவனங்கள். மஹிந்திரா மற்றும் மாருதி சுஸூகி இதில் ஒரு படி மேலே போய், அதிக அளவில் வென்டிலேட்டர் தயாரிக்கும் பணிகளில் இறங்கிவிட்டன. இதே விஷயத்துக்காக மக்களை அணுகியிருக்கிறது எம்ஜி மோட்டார்ஸ். குறைந்த விலை மற்றும் உடனடியாக உற்பத்தி செய்யக்கூடிய வென்டிலேட்டருக்கான டிசைனை அவர்களிடம் இந்த நிறுவனம் ட்விட்டரில் கேட்டிருக்கிறது. இதில் வெற்றிபெறுபவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வரை பரிசுத்தொகை கிடைக்கும் என்பதுடன், அந்த டிசைனில் வென்டிலேட்டரைத் தனது தொழிற்சாலையில் தயாரிக்கும் என்றும் அறிவித்துள்ளது.

ஃபிட்னஸ் முக்கியம்!

Fitness Challenge
Fitness Challenge
Tata Motors

தொடர்ச்சியாக ஒரே சூழலில் இருப்பது, சேரில் உட்கார்ந்தபடியே லேப்-டாப்பில் வேலைபார்ப்பது, சோஃபாவில் இருந்துகொண்டு டி.வி-யில் நிகழ்ச்சிகளையும் படங்களையும் ரசிப்பது எனப் பல ஆண்களுக்கு உடல் உழைப்புக்கான நேரம் மிகவும் குறைந்துவிட்டது (வீட்டில் பெண்களின் வேலைப்பளு முன்பைவிடக் கூடிவிட்டது). எனவே, பலரின் உடல் எடை இந்த நேரத்தில் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே, ஃபிட்னஸை ஊக்குவிக்கும் விதத்தில், வீட்டுக்குள்ளேயே மாரத்தான் ஓடுமாறு சேலஞ்ச் விடுத்துள்ளது டாடா. அதன்படி உங்கள் இல்லத்தில் 2கி.மீ அளவு ஓடி, அதன் வீடியோவை இந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட வேண்டும். உங்கள் நண்பர்களுக்கும் இந்த சேலஞ்ச்சைக் கொடுக்கலாம்.

வாண்டர்லஸ்ட்டுகள் என்ன செய்கிறார்கள்?

#TripStory
#TripStory
Royal Enfield

அடிக்கடி ரோடு ட்ரிப்பில் இருப்பவர்கள், ஒரே இடத்தில் இருப்பது கடினமாகத்தான் இருக்கும். ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறது. 'நிலைமை சீரான பிறகு, நீங்கள் செல்ல விரும்பும் இடம் எது?' என்பதுடன், கூடுதலாக அதன் படங்களைப் பகிரவும் கூறியிருந்தது. அதில் சிறப்பானவற்றைத் தனது பக்கத்தில் இந்த நிறுவனம் பதிவிட்டுவருவதால், புதிய சுற்றுலாத் தளங்கள் பற்றித் தெரிந்துகொள்வதற்கும், அடுத்த பயணத்துக்கான இடங்களைத் தேர்வுசெய்யவும் அவற்றைப் பார்க்கலாம்.

எல்லாவற்றையும் ரீவைண்ட்!

Let's Rewind
Let's Rewind
Kia Motors

கார்னிவல் விளம்பரம் நினைவிருக்கிறதா? அதை அப்படியே ரிவர்ஸ் மோடில் ஓடவிட்டு, தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, கியா. ``Let’s all just rewind. Stay home” என அது முடிகிறது.

#GearUpForTomorrow
#GearUpForTomorrow
Maruti Suzuki

இப்படி ஒவ்வொரு ஆட்டோமொபைல் நிறுவனமும் தங்களின் ஸ்டைலில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. எத்தனை பேர், எவ்வளவு விதமாகச் சொன்னாலும் அவர்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான்... அது, `Stay home'.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு