Published:Updated:

புதிய மஹிந்திரா ஸ்கார்ப்பியோ இன்டீரியர், எப்படி இருக்கிறது? #FirstLook

மஹிந்திரா
News
மஹிந்திரா ( Mahindra )

நாசிக்கில் அமைந்திருக்கும் மஹிந்திராவின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 25 லட்சமாவது கார் ஸ்கார்ப்பியோதான்! கெத்தான டிசைனில் பலரைக் கவர்ந்திழுத்த இந்த கார், தற்போதைய போட்டியாளர்களால் கொஞ்சம் ஓரம்கட்டப்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஸ்கார்ப்பியோ... 2002 ஆண்டில் வெளிவந்த இந்த எஸ்யூவி, மஹிந்திராவுக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்தது என்பதே நிதர்சனம். இது எந்தளவுக்கு இந்த நிறுவனத்துக்கு ஸ்பெஷலான கார் என்பதைத் தெரிந்துகொள்ள, ஒரு தகவலைக் குறிப்பிடலாம். நாசிக்கில் அமைந்திருக்கும் மஹிந்திராவின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட 25 லட்சமாவது கார் ஸ்கார்ப்பியோதான்! கெத்தான டிசைனில் பலரைக் கவர்ந்திழுத்த இந்த கார், ஹெக்டர் - ஹேரியர் - செல்ட்டோஸ் - கிரெட்டா எனும் தற்போதைய போட்டியாளர்களால் கொஞ்சம் ஓரம்கட்டப்பட்டுவிட்டதோ என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. காலப்போக்கில் இதன் விலை அதிகரித்ததும் ஒரு காரணம். எனவே, இதற்கான தீர்வாக, Z101 என்ற குறியிட்டுப் பெயரைக் கொண்ட புதிய மாடலை மஹிந்திரா டெஸ்ட் செய்துவருகிறது. கடந்தாண்டில் சென்னையில் டெஸ்ட்டிங்கில் இருந்தபோது, இதன் பிரத்யேக ஸ்பை படங்களை மோட்டார் விகடன் முதன்முறையாக இணைய உலகில் பகிர்ந்தது.

New Scorpio Cabin
New Scorpio Cabin
MV Reader

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், தற்போது புதிய ஸ்கார்ப்பியோவின் கேபின் படங்கள் மோட்டார் விகடனுக்குக் கிடைத்திருக்கின்றன. பாண்டிச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் இந்த கார் டெஸ்ட் செய்யப்பட்டபோது அதைப் படம்பிடித்திருக்கிறார், பாண்டிச்சேரியைச் சேர்ந்த வாசகர் எம்.அர்ஜூன். அடுத்த ஆண்டில்தான் புதிய ஸ்கார்ப்பியோ இந்தியாவில் கால்பதிக்க உள்ளது. எனவே S5, S7, S9, S11 எனும் 4 வேரியன்ட்களில் தற்போதைய மாடலே BS-6 அவதாரத்தில் வரும். இதில் 2.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்படவில்லை. 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் காம்போவை BS-6 க்கு அப்டேட் செய்வதற்காக, இதில் SCR - DPF - Urea Tank ஆகியவை இடம்பெற்றுள்ளன. முன்பைப் போலவே 7/8/9 சீட் ஆப்ஷன்கள் தொடர்கின்றன. மற்றபடி வசதிகள் மற்றும் டிசைனில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை. ஆனால், கொரோனா காரணமாக இதன் விலையை இன்னும் மஹிந்திரா அறிவிக்கவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஸ்கார்ப்பியோவின் கேபினில் என்ன ஸ்பெஷல்?

புதிய தலைமுறை மாடல் என்பதால், எதிர்பார்த்தபடியே கேபினில் புதிய டேஷ்போர்டு இடம்பிடித்திருக்கிறது. இது முன்பைவிட அகலமாகவும் உயரமாகவும் இருப்பது, ஸ்பை படத்தைப் பார்க்கும்போதே தெரிகிறது. சென்டர் கன்சோலில் டச் ஸ்க்ரீனுக்கான இடத்தைப் பார்க்கும்போது, அதில் அல்ட்டுராஸ் எஸ்யூவியில் உள்ள 9 இன்ச் டச் ஸ்க்ரீன் இடம்பெயர்வதற்கான சாத்தியம் இருப்பதாகவே தோன்றுகிறது. விலை குறைவான வேரியன்ட்களில் மராத்ஸோ மற்றும் XUV3OO-ல் இருக்கக்கூடிய 7 இன்ச் டச் ஸ்க்ரீன் பயன்படுத்தப்படலாம்.

New Scorpio Dashboard
New Scorpio Dashboard
MV Reader

Vertical ஏசி வென்ட்கள் புதிது. மேலும் காரின் விலையைக் கட்டுக்குள் வைக்க, பட்டன்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் - 6 ஸ்பீடு கியர் லீவர் - கன்ட்ரோல் Stalks - ஸ்விட்ச்கள் - ஏசி கன்ட்ரோல் Knobs - MID உடனான அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவையும் மராத்ஸோவிலிருந்து பெறப்படும். ஆனால் மராத்ஸோ போல வித்தியாசமான வடிவத்தில் இல்லாமல், வழக்கமான பார்க்கிங் பிரேக் லீவர் இருப்பது ஆறுதல். சமீபத்திய பாதுகாப்பு விதிகள் காரணமாக, ஸ்கார்ப்பியோவின் மூன்று வரிசை இருக்கைகளும் Forward Facing பாணியில்தான் இருக்கும். காரின் வடிவமைப்பில், மஹிந்திராவுக்குச் சொந்தமான Pininfarina-வின் தாக்கம் இருக்குமா என்பதில் தெளிவில்லை. ஆனால், டெட்ராய்ட்டில் இருக்கும் இந்த நிறுவனத்தின் வட அமெரிக்க தொழில்நுட்ப மையம் மற்றும் சென்னையில் உள்ள MRV ஆகியோர் இணைந்தே இதில் பணிபுரிகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளிப்புற வடிவமைப்பு எப்படி இருக்கும்?

இந்த எஸ்யூவியின் வரலாற்றில் முதன்முறையாக, புதிய லேடர் சேஸி - முற்றிலும் புதிய பாடி பேனல்கள் - மாடர்ன் டிசைன் எனப் புதிய அவதாரத்தில் இது களமிறங்க உள்ளது. க்ராஷ் டெஸ்ட் மற்றும் Pedestrian Protection விதிகளுக்கு ஏற்ப காரின் கட்டுமானம் அமைந்திருக்கும். பானெட், கிரில், பம்பர், விண்ட்ஷீல்டு ஆகியவை அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. XUV3OO-ன் தோற்றத்தில் காணப்பட்ட சில டிசைன் அம்சங்கள், புதிய ஸ்கார்ப்பியோவில் பார்க்கமுடியும். முந்தைய மாடலைவிடப் பெரிய வீல்பேஸ் இருப்பதால், கேபின் இடவசதியில் கணிசமான முன்னேற்றம் இருக்கும் என நம்பலாம். முன்பைவிடப் பெரிய கதவுகள் அதை உறுதிபடுத்துகின்றன. பின்பக்கத்தில் இருக்கும் Side Hinged கதவைச் சுற்றியே டெயில் லைட் இருக்கின்றன.

New Scorpio Rear
New Scorpio Rear
MV Reader
Scorpio Facelift
Scorpio Facelift
Autocar India

இதற்கான கைப்பிடி இடப்புறத்தில் இருக்கிறது. தற்போதைய மாடலில் இருக்கும் அதே 2.2 லிட்டர் mHawk டர்போ டீசல் இன்ஜின்தான், புதிய ஸ்கார்ப்பியோவிலும் பொருத்தப்படும். 140bhp பவர் - 32kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த 4 சிலிண்டர் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. தவிர வரலாறு திரும்பும் வகையில், ஸ்கார்ப்பியோவில் பெட்ரோல் இன்ஜின் மறுஅறிமுகம் ஆகவிருக்கிறது. 1,997சிசி திறன் கொண்ட இந்த டர்போ பெட்ரோல் இன்ஜின், அதிரடியான 190bhp பவர் - 38kgm டார்க்கைத் தருகிறது. இரண்டாம் தலைமுறை XUV5OO மற்றும் தார் ஆகியவற்றில் இடம்பெறப்போகும் இந்த 2 லிட்டர் T-GDi இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே G20 இன்ஜினில், Aisin நிறுவனத்தின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பின்னாளில் வரலாம். முன்பு போலவே 17 இன்ச் வீல்களே வழங்கப்படலாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் வாக்கில், புதிய ஸ்கார்ப்பியோவை மஹிந்திரா களமிறக்க உள்ளது.