Published:Updated:

வேகன்-ஆர், கிராண்ட் i10... யூஸ்டு கார் மார்க்கெட்டில் எதற்கு மவுசு?

வேகன்-ஆர்
வேகன்-ஆர் ( மாருதி சுஸூகி )

இந்தப் பிரபலமான ஹேட்ச்பேக்குகளின் அடுத்த தலைமுறை மாடல்கள், தற்போது வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. எனவே, அதன் முந்தைய வெர்ஷன்கள், யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிகளவில் காணக்கிடைப்பது வாடிக்கையான ஒன்றுதான்.

முதன்முறையாக கார் வாங்கப்போகும் நபர்கள் எல்லாரிடமுமே அந்த காரை Full Cash-ல் எடுப்பதற்கான பணம் இருக்காது. பலர் EMI திட்டத்தில் செல்வார்கள் என்றாலும், சிலர் Initial Payment-ஆகக் கொடுக்கவிருக்கும் காசில், அப்படியே யூஸ்டு கார் மார்க்கெட்டில் தனக்கான காரைத் தேடி வாங்கிவிடுவார்கள். இப்படிப்பட்டவர்களை முன்னிறுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கும் பல மாடல்கள், ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் கார்களின் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்துவிடுகின்றன; அதில் மாருதி சுஸூகியின் Tall Boy காரான வேகன்-ஆர் மற்றும் ஹூண்டாயின் கிராண்ட் i10 காரைப் பற்றி இப்போது பார்க்கலாம். இந்தப் பிரபலமான ஹேட்ச்பேக்குகளின் அடுத்த தலைமுறை மாடல்கள், தற்போது வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

கிராண்ட் i10
கிராண்ட் i10
ஹூண்டாய்

எனவே, அதன் முந்தைய வெர்ஷன்கள், யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிகளவில் காணக்கிடைப்பது வாடிக்கையான ஒன்றுதான். எனவே 2.5 - 3.5 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் யூஸ்டு கார் வாங்கும் முடிவில் இருப்பவர்களுக்கு, வேகன்-ஆர் நிச்சயம் நல்ல சாய்ஸ்தான். ஆனால் கூடுதலாக 1 லட்ச ரூபாய் செலவழித்தால், ப்ரீமியம் அனுபவத்தைத் தரக்கூடிய கிராண்ட் i10 காரை வாங்கிவிட முடியும் என்பது ப்ளஸ். இரண்டுமே பராமரிப்புச் செலவுகளில் கார் உரிமையாளரின் கையைக் கடிக்காத தயாரிப்புகள். 2.5 - 4.5 லட்சத்தில் யூஸ்டு கார் மார்க்கெட்டில் வேகன்-ஆர் அல்லது கிராண்ட் i10 கார்களைத் தேடுபவர்களுக்கு, 2014/2015-ம் ஆண்டு மாடல்கள் சரளமாகக் கிடைக்கும்.

மாருதி சுஸூகி வேகன்-ஆர்: முன்கதை

Maruti Suzuki Wagon-R
Maruti Suzuki Wagon-R
Autocar India

2014 மாருதி சுஸூகி வேகன்-ஆர் VXi: 2.6 - 3.3 லட்ச ரூபாய் (உத்தேச சென்னை விலை)

வேகன்-ஆர்... ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப்-10 கார்களில் இடம்பிடிக்கும் கார்! நல்ல இடவசதியுடன்கூடிய பிராக்டிக்கலான ஃபேமிலி கார் எனப் பெயர்பெற்றிருக்கும் இதில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் K10 பெட்ரோல் இன்ஜின், நகரப் பயன்பாட்டுக்கு செமையாக உள்ளது. இதை நம்பி வேகன்-ஆரை நெடுஞ்சாலைக்குக் கொண்டு செல்லும்போது, காரின் பலவீனங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, பவர் குறைபாடு தெரிவதுடன், நிலைத்தன்மையும் சுமார் ரகம்தான். மேலும், காரின் டிசைன் மற்றும் கேபின் வடிவமைப்பும் அனைவருக்கும் பிடிக்குமா என்பது சந்தேகமே. தவிர பிளாஸ்டிக் தரம் மற்றும் கட்டுமானமும் இது பட்ஜெட் கார் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகின்றன! பாதுகாப்பு வசதிகளும் மிஸ்ஸிங் என்பது மைனஸ். இதன் ஃபேன்ஸி வெர்ஷனாகச் சிலகாலம் விற்பனையான ஸ்டிங்ரே, அலாய் வீல்கள் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.

ஹூண்டாய் கிராண்ட் i10: முன்கதை

Grand i10 Asta O
Grand i10 Asta O
Hyundai India

2015 ஹூண்டாய் கிராண்ட் i10 Asta O: 3.6 - 4.5 லட்ச ரூபாய் (உத்தேச சென்னை விலை)

முன்னே சொன்ன காரைப்போலவே, இதுவும் டாப்-10 கார்களில் தவறாமல் இருக்கும் கார்தான்! கொஞ்சம் கொழும் மொழுக் டிசைனில் இருந்தாலும், கார் பார்க்க நன்றாகவே இருக்கிறது. மிட்சைஸ் காம்பேக்ட் ஹேட்ச்பேக் செக்மென்ட்டைச் சேர்ந்தது என்பதால், எதிர்பார்த்தபடியே வசதிகள் (எலெக்ட்ரிக் மிரர்கள், அலாய் வீல்கள், Cooled க்ளோவ்பாக்ஸ், ரியர் ஏசி வென்ட், புஷ் பட்டன் ஸ்டார்ட்) - கேபின் தரம் - ப்ரீமியம் அனுபவம் - பாதுகாப்பு அம்சங்கள் (2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், பார்க்கிங் சென்சார்) ஆகியவற்றில் வேகன்-ஆருக்கு அடுத்த லெவலில் இருக்கிறது கிராண்ட் i10. மேலும் பெரிய 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருப்பதால், பவர்ஃபுல் பர்ஃபாமன்ஸ் கியாரன்ட்டி. தவிர 4 சிலிண்டர் இன்ஜின் என்பதால், இது ஸ்மூத்தாகத் தனது பணியைச் செய்கிறது. ஆனால் வேகன்-ஆரைவிட இது குறைவான மைலேஜைத் தரும் என்பதை நினைவில் கொள்ளவும் (வேகன்-ஆர்: 14.7 கிமீ, கிராண்ட் i10: 14கிமீ). மற்ற ஹூண்டாய் தயாரிப்புகளைப் போலவே, இதுவும் நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் பயன்படுத்துவது நல்ல அனுபவமாக இருக்கிறது.

காரில் என்னென்ன விஷயங்களைப் பார்க்க வேண்டும்?

Grand i10 Asta O
Grand i10 Asta O
Hyundai India

கிராண்ட் i10: இந்த ஹூண்டாய் காரில் மெக்கானிக்கலாக எந்தக் கோளாறும் இல்லை. ஆனால் காரில் எலெக்ட்ரிக்கல் அம்சங்கள் அதிகம் என்பதால், அதில் சில பிரச்னைகள் வரலாம். பவர் விண்டோக்கள் செயலிழந்திருந்தால், அதனைச் சரிசெய்ய 1,800 - 2,500 ரூபாய் வரை செலவாகும். எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர் வியூ மிரரின் மோட்டாரை மாற்றுவதற்கு 5,500 ரூபாய் வரை ஆகலாம். பேட்டரியையும் ஒருமுறை பார்க்கவும். தவிர கார் பயன்படுத்தப்பட்ட விதத்தைப் பொறுத்து, ஸ்டீயரிங் கொஞ்சம் Off-Center ஆக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை கார் ஒருபக்கமாக இழுத்தால், வீல் அலைன்மென்ட் மற்றும் டயர்களைச் செக் செய்யவும். டயர்கள் பழையதாகியிருந்தால், அதை மாற்றுவதற்கு 16,000 ரூபாய் தேவைப்படும். கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது காரின் சஸ்பென்ஷன் கடாமுடா எனச் சத்தம் போட்டால், பர்ஸ்ஸின் கனம் குறைப்போகிறது என அர்த்தம்.

வேகன்-ஆர்: காரின் விலையுடன் ஒப்பிட்டால், ஒட்டுமொத்த தரத்தில் இந்த மாருதி சுஸூகி தயாரிப்பு சிறந்தே விளங்குகிறது. ஆனால் காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது, சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்குகளிலிருந்து ஏதாவது விநோதமான சத்தம் வருகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். ஒருவேளை அதிக சத்தம் வந்தால், அவற்றின் ஆயுள் முடியும் தருவாயில் உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். முன்பக்க சஸ்பென்ஷனின் விலை மட்டும் சுமார் 3,000 ரூபாய் என்பதை நினைவில் கொள்ளவும். அடிக்கடி பயன்படுத்துவதால், கிளட்ச்சிலும் பிரேக் பெடலிலும் பிரச்னை இருக்க வாய்ப்பிருக்கிறது.

Maruti Suzuki Wagon-R
Maruti Suzuki Wagon-R
Autocar India

க்ளட்ச் பிளேட்டின் விலை 1,800 ரூபாய் மற்றும் பிரேக் லீவர் உடனான பிரேக் பேடுகளின் விலை 700 ரூபாய் வரை வரலாம். காரின் டயர்கள் பொதுவாகவே 30,000 - 40,000 கி.மீ வரை தாங்கக்கூடியவை. எனவே, அவை பராமரிக்கப்பட்ட விதத்தைப் பொறுத்து அதன் கண்டிஷன் இருக்கும் (4 புதிய டயர்களின் விலை - 12,000 ரூபாய்). ஏஸி பெல்ட் மற்றும் கூலன்ட் ஹோஸ் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்யவும். டாப் வேரியன்ட்களில் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான ரியர் வியூ மிரர்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை சரிவர இயங்காவிட்டால், அதை மாற்றுவதற்கு சுமார் 5,000 ரூபாய் வரை செலவாகலாம்.

அடுத்த கட்டுரைக்கு