Published:Updated:

உங்களின் கார் நீண்ட நாள்களாக வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கிறதா... இந்த 10 டிப்ஸ் உங்களுக்குத்தான்!

Car
Car ( Autocar India )

நாள் கணக்காக நிற்கும் கார்களை கூலாக வைத்திருப்பது எப்படி என்பதற்கான விடையை இங்கே பார்க்கலாம்...

மிதமான தட்பவெப்பம் அல்லது குளிர் நிறைந்த பகுதிகளில் இருப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் இந்நேரம் அக்னி நட்சத்திரத்தின் இருப்பை உணர்ந்திருப்பீர்கள். மேலும், கொரோனா காரணமாகப் பலரது கார்கள் 40 டிகிரி கத்திரி வெயிலில் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளது. ரோட்டில் அரை மணிநேரம் காரை நிறுத்திவிட்டு, மீண்டும் அதை வந்து எடுக்கும்போதே கேபின் சூடாகி இருக்கும். இந்தச் சூழலில், நாள் கணக்காக நிற்கும் கார்களை கூலாக வைத்திருப்பது எப்படி என்பதற்கான விடையை இனி பார்க்கலாம்.

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், விண்ட் ஷீல்டு மற்றும் கதவுக் கண்ணாடிகளில் எந்த விரிசலும் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில், சில சந்தர்ப்பங்களில் அவை வெயிலினால் உடைந்துவிடக்கூடும். அப்புறம் எல்லாமே பாழாகிவிடும்.

Hot Summer
Hot Summer
Autocar India

1. ரூஃப் அல்லது மேற்கூரை இல்லாத இடங்களில் காரை நிறுத்த நேரிட்டால், கதவுக் கண்ணாடிகளை 1/2 இன்ச் அளவுக்கு இறக்கிவைப்பது நலம். இதனால் கேபினில் இருக்கும் வெப்பம், அங்கேயே தேங்கி நிற்காது. ஆனால், கண்ணாடியை ரொம்பவும் இறக்கிவிட்டால், தூசி/மண் - இலை - பூச்சி ஆகியவை காருக்குள் வந்துவிடும்.

2. சோலார் திறன் அல்லது பேட்டரியில் இயங்கும் சிறிய ஃபேன்கள், இ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கின்றன. இவை, வீட்டில் இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன் மற்றும் கம்யூட்டரின் கூலிங் பேடு செய்யும் வேலையையே செய்கின்றன. அதாவது, வெப்பத்தைத் தன்வசம் ஈர்த்து, திறந்த பகுதி நோக்கி அதைத் தள்ளுவதே இதன் சாராம்சம். 1,000 ரூபாய்கே தரமான ஃபேன்களை வாங்க முடியும்.

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது வாகன உற்பத்தி- ஆன்லைனில் கார் ஆர்டர் செய்யலாம்!

3. காரின் ஏசி அமைப்பு சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்பதை செக் பண்ணவும். ஏர் ஃபில்டர் - ஃப்ளோயர் - கன்டன்ஸர் காயில் ஆகியவை சுத்தமாக இருப்பதுடன், கம்ப்ரஸர் ஆயில் மற்றும் ரெஃப்ரிஜெரன்ட் ஆகியவை கச்சிதமான அளவில் இருக்க வேண்டும். வயரிங் சரியாக இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Lowered Door Glass
Lowered Door Glass
Autocar India

4. 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான கார்களில், சன் ஷேடு ஸ்டாண்டர்டாக இருக்கிறது (பின்பக்கக் கதவுகளுக்கு மட்டும்). எனவே, இதைப் பயன்படுத்தினால் கேபினின் தட்பவெப்பம் கட்டுக்குள் இருக்கும். இதனுடன், தனித்தனியாகக் கிடைக்கும் சன்ஷேடு அல்லது வைஸர்களை விண்ட் ஷீல்டு மற்றும் முன்பக்கக் கதவுகளில் பொருத்தினால், இன்டீரியரின் வெப்பநிலையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

ஸ்டீயரிங்கை கைக்குட்டை அல்லது சிறிய டவல் கொண்டு சுற்றிவிடுவது நல்லது.

5. நிறுத்தப்பட்ட காரில் ஏறிய பிறகு, ஒருவர் காரின் உள்ளே தொடக்கூடிய முதல் விஷயம் ஸ்டீயரிங்தான். வழக்கமான ஸ்டீயரிங்கைவிட, லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் அதிக வெப்பத்தைத் தன்வசம் ஈர்க்கும். எனவே இதைத் தவிர்க்க, ஸ்டீயரிங்கை கைக்குட்டை அல்லது சிறிய டவல் கொண்டு சுற்றிவிடுவது நல்லது. இதே பாணியை, முன்பக்க சீட்டுகளுக்கும் தேவைபட்டால் பின்பற்றலாம்.

Storage Space
Storage Space
Autocar India
திண்பண்டங்களை கேபினில் வைக்கவே கூடாது!

6. சென்டர் கன்சோலுக்கு மேலே இருக்கும் சாமி சிலை/படம் மற்றும் பெர்ஃப்யூம் டின், தொடர்ச்சியாக வெயில் பட்டு அதன் நிறமே மாறியிருக்கும். எனவே, மொபைல் - ரிமோட் - யூஎஸ்பி/ஆக்ஸ் கேபிள் - சார்ஜர் - சன் க்ளாஸ் - சீடி- பர்ஸ் போன்ற சாதனங்களை டேஷ்போர்டின் மேல்பகுதியில் வைக்க வேண்டாம். க்ளோவ் பாக்ஸ்/ ஸ்டோரேஜ் ஸ்பேஸ்களில் இதற்கென இடம் இருக்கிறது. திண்பண்டங்களை கேபினில் வைக்கவே கூடாது!

கார் ஆர்வலரா... நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஆட்டோமொபைல் படங்கள்!

7. கேபினில் லெதர் அப்ஹோல்சரி அல்லது லெதரெட் சீட் கவர்கள் இருந்தால், அவை வெயில் காரணமாகக் கொஞ்சம் வெளுத்துப் போய்விட வாய்ப்பிருக்கிறது. தவிர, இவை ஃபேப்ரிக்கைவிட அதிக வெப்பத்தைத் தாங்கி நிற்கும் திறன் கொண்டவை. எனவே, இதற்கான தீர்வாக காட்டன் பெட்ஷீட் கொண்டு போர்த்திவிடலாம். இது தேவைப்படாதபோது, பூட்டில் மடித்துவைத்துக்கொள்ளவும்.

Car Seat
Car Seat
Autocar India

8. புற ஊதாக் கதிர்களைப் புறந்தள்ளக்கூடிய கவர்கள், ஏறக்குறைய எல்லா கார்களுக்கும் கிடைக்கின்றன. இவற்றின் விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் (1,500-2000 ரூபாய்), அதனால் காருக்குக் கிடைக்கும் பலன்கள் அதிகம்தான். எனவே காரை பர்க் செய்த பிறகு, கவர் கொண்டு மூடிவிடவேண்டும். இல்லையென்றால், மூடப்பட்ட பகுதி அல்லது மரத்துக்குக் கீழே நிழலான இடங்களில் காரை நிறுத்தவும்.

பைக் ஆர்வலர்கள் பார்க்க வேண்டிய ஆட்டோமொபைல் படங்கள்!

9. கேபினில் இருக்கும் ப்ளாஸ்டிக் மற்றும் ரப்பர் பாகங்கள், வெயில் படும்போது தமது ஆயுளை இழக்கின்றன. மேலும், இவை ஏற்படுத்தும் வாடையை நுகர்வதும் நல்லதல்ல! தவிர, பெயின்ட்டும் தனது பளபளப்புத் தன்மையில் சரிவைக் காணும். எனவே, காரை நிறுத்தும்போது ஏசி வென்ட்களை மூடிவிடலாம்.

Car Polishing
Car Polishing
Autocar India

10. வெயிலில் நிற்கும் காருக்குள்ளே நுழைந்தபிறகு, சீட்டைத் தட்டும்போது தூசி பறக்கக்கூடாது. மேலும், டேஷ்போர்டும் அழுக்கு இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். காரிலிருக்கும் திரவங்களின் அளவையும் நிலையையும் அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். இவை பின்பற்றப்பட்டாலே, காரில் பயணிக்கும்போது நுண்ணுயிர்களால் ஏற்படும் அசெளகரியங்களைத் தவிர்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு