Published:Updated:

கேடிஎம் டியூக் 250-ஐ விட 20,576 ரூபாய் குறைவு... வெல்கம் ஹஸ்க்வர்னா 250சிசி பைக்ஸ்!

Husqvarna Bikes
Husqvarna Bikes

டியூக் 250 BS-6-ஐ விட 20,576 ரூபாய் குறைவு என்பது, இந்த ஹஸ்க்வர்னா 250சிசி பைக்குகளின்மீது ஒட்டுமொத்த கவனமும் திரும்புவதற்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற IBW 2019 நிகழ்ச்சியில், ஸ்வீடனைச் சேர்ந்த ஹஸ்க்வர்னா பிராண்டை இந்தியாவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது பஜாஜ் ஆட்டோ. அப்போது கேடிஎம் விட இது, பிரிமியம் தயாரிப்புகளாக பொசிஷன் செய்யப்படும் எனவும், பிப்ரவரி 2020-ல் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்பட்டது தெரிந்ததே. ஆனால், தற்போது பைக் ஆர்வலர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி அளிக்கும் விதமாக Vitpilen 250 மற்றும் Svartpilen 250 ஆகியவை தடாலடியாக 1.8 லட்ச ரூபாய்க்குக் களமிறங்கிவிட்டன (அறிமுக டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)! கேடிஎம்மின் புகழ்பெற்ற டியூக் 200 BS-6 விட வெறும் 7,251 ரூபாய் மட்டுமே இது அதிகம் என்பதை நினைவில் கொள்ளவும்; தவிர டியூக் 250 BS-6-ஐ விட 20,576 ரூபாய் குறைவு என்பது, இந்த 250சிசி பைக்குகளின்மீது ஒட்டுமொத்த கவனமும் திரும்புவதற்கு வழிவகுக்கும் என்றே தோன்றுகிறது.

Husqvarna
Husqvarna

அதற்கேற்ப இவற்றின் புக்கிங்கும் தொடங்கிவிட்டன. முதற்கட்டமாக 45 நகரங்களில் இருக்கும் 100 கேடிஎம் டீலர்களில் ஹக்ஸ்வர்னாவின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. அடுத்த 5 மாதங்களில், இந்த எண்ணிக்கை 400 ஷோரூம்களாக (275 இடங்கள்) அதிகரிக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது. ஹஸ்க்வர்னா இந்தியாவுக்குப் புதிதாக இருந்தாலும் 1903 முதலாகவே அந்த நிறுவனம் உலகளவில் பைக்குகளைத் தயாரித்து வருகிறது. 2013-ம் ஆண்டின் இறுதியில் ஹஸ்க்வர்னாவை பிஎம்டபிள்யூவிடமிருந்து கேடிஎம் வாங்கிவிட்டது; இந்த இடைப்பட்ட 116 ஆண்டுகளில், மோட்டோ க்ராஸ் ரேஸிங் மற்றும் பர்ஃபாமன்ஸ் பைக்குகளில் தனக்கென ஓர் அடையாளத்தை, இந்த நிறுவனம் தன்வசப்படுத்தியிருக்கிறது.

Vitpilen 250 (ஸ்வீட மொழியில் White Arrow என அர்த்தம்) ஸ்போர்ட்டியான கஃபே ரேஸர் ஆகவும், Svartpilen 250 (ஸ்வீட மொழியில் Black Arrow என அர்த்தம்) ஆஃப் ரோடுக்கான ஸ்க்ராம்ப்ளர் ஆகவும் பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் Scandinavian மினிமலிச கோட்பாடுகளின்படி, காம்பேக்ட்டான பைக்குகளாகவே இவை உள்ளன என்பதால், சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தையும் பர்ஃபாமன்ஸையும் எதிர்பார்க்கலாம். இரண்டுமே அதன் 401 மாடல்களைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருந்தாலும், டியூக் 250-ன் மெக்கானிக்கல் பாகங்களே இதில் இடம்பெற்றுள்ளன.

Husqvarna Svartpilen 250
Husqvarna Svartpilen 250

எனவே, மிக முக்கிய மாற்றமாக, ஸ்போக் வீல்களுக்குப் பதிலாக அலாய் வீல்கள் இருக்கின்றன. Vitpilen 250 கிளிப் ஆன் ஹேண்டில்பாருடன், ரேஸியான சீட்டிங் பொசிஷன் மற்றும் MRF Revz C1 Road டயர்களைக் கொண்டிருக்கிறது (153 கிலோ- Dry Weight). Svartpilen 250 சிங்கிள் பீஸ் ஹேண்டில்பாருடன், சொகுசான சீட்டிங் பொசிஷன் மற்றும் MRF Revz D Dual Purpose டயர்களைக் கொண்டுள்ளது (154kg - Dry Weight).

Husqvarna Vitpilen 250
Husqvarna Vitpilen 250

இப்படி, சிற்சில வித்தியாசங்கள் இருந்தாலும், 248.76சிசி BS-6 இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - 17 இன்ச் Cast அலுமினியம் வீல்கள் - MRF டியூப்லெஸ் ரேடியல் டயர்கள் (முன்: 110/70-R17 54H, பின்: 150/60-R17 66H) - ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃபிரேம் - WP Apex USD ஃபோர்க் & மோனோஷாக் (Adjustable) - LED லைட்டிங் (ஹெட்லைட், டெயில் லைட், இண்டிகேட்டர்கள்) - Bosch நிறுவனத்தின் டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் Fi சிஸ்டம் - 9.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் - 145மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் - வட்டமான டிஜிட்டல் மீட்டர் - டிஸ்க் பிரேக்ஸ் (முன்: 320மிமீ, பின்: 230மிமீ) - 835மிமீ சீட் உயரம் எனப் பல ஒற்றுமைகள் உள்ளன. மற்றபடி 31bhp@9,000rpm பவர் மற்றும் 2.4kgm@7,250rpm டார்க்கைத் தரும் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 4 வால்வ் - DOHC - லிக்விட் கூலிங் - ஸ்லிப்பர் கிளட்ச் - ஷார்ட் ஸ்ட்ரோக் அமைப்பைக் (72மிமீ Bore X 61.1மிமீ Stroke) கொண்டுள்ளது.

IBW 2019
IBW 2019
Bajaj Auto
அடுத்த கட்டுரைக்கு