Published:Updated:

வந்தாச்சு ஹூண்டாய் ஆரா... தெரிந்துகொள்ள வேண்டிய 4 விஷயங்கள்!

ஹூண்டாய் ஆரா
ஹூண்டாய் ஆரா

C-பில்லர் கறுப்பு நிறத்தில் இருப்பதால் Floating Roof ஃபீல் கிடைக்கிறது. டெயில்கேட்டிலிருந்து பம்பருக்கு நம்பர் பிளேட் இறங்கி வந்துவிட்டது. பின்பக்க டிசைனிலேயே ஸ்பாய்லர் போன்ற அமைப்பைக் கொண்டுவந்திருப்பது நச் ரகம்!

5.8 - 9.24 டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில், தனது புதிய காம்பேக்ட் செடானான ஆராவை 9 கலர்கள் - 12 வேரியன்ட்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ஹூண்டாய். இந்த நிறுவனத்தின் எக்ஸென்ட் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்றாலும், அது வணிக ரீதியிலான பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைக்கும் (டாக்ஸி). டிசையர், அமேஸ், ஆஸ்பயர், டிகோர், ஏமியோ ஆகிய காம்பேக்ட் செடான்களுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கிறது ஆரா. BS-6 பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள், 5 ஸ்பீடு மேனுவல்/AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள், பலவிதமான வாரன்ட்டி பேக்கேஜ் என அசத்தும் இந்த காரைப் பற்றி இனி பார்க்கலாம்.

டிசைன் மற்றும் கேபின்

Aura Compact Sedan
Aura Compact Sedan
Hyundai India

கிராண்ட் i10 நியோஸ் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் ஆராவும் தயாரிக்கப்படுகிறது. எனவே, நியோஸின் செடான் வெர்ஷன்தான் ஆரா எனச் சொல்லலாம். அகலமான ஏர் டேம், Satin ஃபினிஷ் கொண்ட Cascading கிரில், இரட்டை Boomerang DRL ஆகியவற்றைக் கொண்ட முன்பக்க பம்பர் புதிது. பக்கவாட்டில் 4 ஸ்போக் அலாய் வீல்களின் வடிவமைப்பு வித்தியாசமாக இருக்கிறது. டர்போ பெட்ரோல் மாடலின் கிரில்லில் டர்போ பேட்ஜிங் இருப்பது நைஸ். மற்றபடி B- பில்லர் வரை, நியோஸும் ஆராவும் சமமாகவே இருக்கின்றன. இது காம்பேக்ட் செடான் என்பதால், இங்கே எதிர்பார்த்தபடியே பூட் பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது. LED டெயில் லைட்களை ஒன்றிணைக்கும் க்ரோம் பட்டை, பார்க்க அழகாக உள்ளது.

C-பில்லர் கறுப்பு நிறத்தில் இருப்பதால் Floating Roof ஃபீல் கிடைக்கிறது. டெயில்கேட்டிலிருந்து பம்பருக்கு நம்பர் பிளேட் இறங்கி வந்துவிட்டது. பின்பக்க டிசைனிலேயே ஸ்பாய்லர் போன்ற அமைப்பைக் கொண்டுவந்திருப்பது நச் ரகம்! ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஆராவின் Concept Sketch-ல் இருந்த அதிரடி, Production வெர்ஷனில் இல்லை. டூயல் டோன் கேபினைப் பொறுத்தவரை, அதே டேஷ்போர்டு - ஸ்விட்ச்கள் - சீட்கள்தான் இடம்பெற்றுள்ளன. டர்போ பெட்ரோல் கொண்ட வேரியன்ட்டில், கறுப்பு - பீஜ் கேபினில் ஆங்காங்கே சிவப்பு நிற வேலைப்பாடுகள் எட்டிப்பார்ப்பது செம. சீட் கவர்களும் கறுப்பு நிறத்தில் ஈர்க்கின்றன. இதுவே வழக்கமான வேரியன்ட்களில், பிரவுன் நிற வேலைப்பாடு (டேஷ்போர்டின் மேல்பகுதி மற்றும் கியர் லீவர் அருகே) இருக்கிறது. பின்பக்க சீட்டில் ஆர்ம்ரெஸ்ட் சேர்க்கப்பட்டிருக்கிறது. காருடன் 3 வருட RSA இலவசமாக வழங்கப்படுகிறது.

2. வேரியன்ட்கள் மற்றும் சிறப்பம்சங்கள்

Aura - 3 Million
Aura - 3 Million

E, S, SX, SX+, SX(O) ஆகிய Trim-களில் கிடைக்கும் ஆராவின் அனைத்து வேரியன்ட்களிலும் 2 காற்றுப்பைகள் - ISOFIX - ஏபிஎஸ் - EBD - பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்டு. மற்றபடி பின்பக்க ஏசி வென்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, கூல்டு க்ளோவ் பாக்ஸ், டிரைவர் சீட் Height Adjust, வயர்லெஸ் சார்ஜிங், iBlue மற்றும் ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி கொண்ட 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், Arkamys ஆடியோ சிஸ்டம், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் & பனி விளக்குகள், Shark Fin Antenna, க்ரூஸ் கன்ட்ரோல், MID உடனான 5.3 இன்ச் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், இண்டிகேட்டர்களுடன்கூடிய எலெக்ட்ரிக் மிரர்கள், AUX/USB/12V பாயின்ட்கள், எமர்ஜென்சி Stop Signal, ரிவர்ஸ் கேமரா, லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் நாப், ரியர் வியூ மானிட்டர் என மற்ற ஹூண்டாய் கார்களைப் போலவே ஆராவிலும் அதிக வசதிகள் இருக்கின்றன. இதில் பின்பக்க இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்டை அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்றாலும், முன்பக்க இருக்கைகளில் ஹெட்ரெஸ்ட்கள் Fixed ஆக இருப்பது நெருடல். மேலும் பின் இருக்கையின் நடுவே உட்காருபவருக்கு ஹெட்ரெஸ்ட் கிடையாது! 402 லிட்டர் பூட் ஸ்பேஸ், கொஞ்சம் உயரமாக இருக்கிறது. எக்ஸென்ட்டைவிட 25மிமீ அதிக வீல்பேஸ் (2,450மிமி) மற்றும் 20மிமீ அதிக அகலம் (1,680மிமீ) இருப்பதால், ஆராவின் பின்பக்க இடவசதியில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறது. போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால் இது குறைவுதான்.

3. இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்

1.0 Litre Turbo-GDI
1.0 Litre Turbo-GDI
Autocar India

நியோஸில் இருக்கும் 1.2 லிட்டர் Kappa பெட்ரோல் (83bhp பவர் - 11.6kgm டார்க் - 20.5கிமீ அராய் மைலேஜ்) / U2 டீசல் இன்ஜின் (75bhp பவர் - 19.4kgm டார்க் - 25.4கிமீ அராய் மைலேஜ்) ஆப்ஷன்கள் அப்படியே தொடர்கின்றன. ஆனால் ஆராவிலுள்ள Ecotorq டீசல் இன்ஜின் BS-6 அவதாரத்தில் கிடைக்கிறது (உபயம்: LNT மற்றும் DPF தொழில்நுட்பம்). வழக்கமான 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர AMT ஆப்ஷனும் இருப்பது வரவேற்கத்தக்க அம்சம். கூடுதலாக வென்யூவில் இருக்கும் 1.0 லிட்டர் T-GDi டர்போ பெட்ரோல் இன்ஜினும் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வென்யூவை விட 20bhp குறைவான பவரை இது தருகிறது என்றாலும், டார்க்கில் எந்த மாறுதலும் இல்லை (100bhp பவர் - 17.5kgm டார்க் - 20.5 கிமீ அராய் மைலேஜ்).

1.2 Litre Ecotorq
1.2 Litre Ecotorq
Autocar India

ஆனால், அங்கே கிடைத்த 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் இங்கே மிஸ்ஸிங் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்; டர்போ பெட்ரோல் இன்ஜின் எதிர்பார்த்தபடியே விரட்டி ஓட்டுவதற்கு ஃபன்னாக இருப்பதுடன், டர்போ லேக்கும் குறைவாகவே உள்ளது. இன்ஜின் சத்தம் போட்டாலும், அது ஸ்போர்ட்டியாகவே இருக்கிறது. டீசல் இன்ஜின் ஸ்மூத்தாகத் தனது பணியைச் செய்வதுடன், இங்கேயும் டர்போ லேக் குறைவுதான். அதிக மைலேஜ் வேண்டும் என்பவர்களின் தேர்வு இதுவாகத்தான் இருக்கும்; மேனுவல் மாடல்களில் கிளட்ச் - கியர்பாக்ஸ் பயன்படுத்தச் சுலபமாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. மற்றபடி AMT-ன் செயல்பாடும் ஓகே ரகம்.

4. ஓட்டுதல் தரம் மற்றும் முதல் தீர்ப்பு

Aura Cabin
Aura Cabin
Autocar India

ஹூண்டாய் ஆராவின் ஓட்டுதல் அனுபவம், மனநிறைவைத் தரும்படி அமைந்திருக்கிறது. ஸ்டியரிங் எடை குறைவாக இருந்தாலும், காரின் நிலைத்தன்மை அதை ஈடுகட்டிவிடுகிறது. நம் ஊர்ச் சாலைகளுக்கு ஏற்றபடி சஸ்பென்ஷன் செட் செய்யப்பட்டுள்ளது. பிரேக்ஸின் ஃபீட்பேக் ஷார்ப்பாகவே இருக்கிறது. 0.32Cd கொண்டுள்ள ஆரா, காற்றைக் கிழித்துக் கொண்டு செல்வதில் ஸ்கோர் செய்கிறது. ஆனால், இதன் பின்பக்க டிசைன் அனைவருக்கும் பிடிக்குமா என்பது போகப் போகத் தெரியும். காரின் கட்டுமானத்தில் 65% AHSS ஸ்டீல் என்பதால், பயணிகள் பாதுகாப்பு நன்றாக இருக்கும் என நம்பலாம். போட்டியாளர்களிடத்தில் இடவசதியில் விட்டதை, அதிகப்படியான சிறப்பம்சங்களால் மீட்டுவிடுகிறது ஆரா. கேபின் தரமும் பக்கா. ஒவ்வொருவருக்கும் ஏற்றபடி இன்ஜின் - கியர்பாக்ஸ் மற்றும் வேரியன்ட்கள் அமைந்திருப்பது பெரிய ப்ளஸ்.

ஆரா கேபின்
ஆரா கேபின்
Autocar India

மேலும் BS-6 தயாரிப்பாக இருப்பினும், அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையிலேயே ஆரா வந்திருக்கிறது! இதன் டீசல் மாடல், எக்ஸென்ட்டைவிட 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகம்; என்றாலும், ஒரே டாப் வேரியன்ட்டில் கிடைக்கும் டர்போ பெட்ரோல் மாடலின் விலை கொஞ்சம் அதிகம்தான். மற்றபடி டிகோர் மற்றும் டிசையரில் டீசல் இன்ஜின் கிடையாது என்பது, ஆராவுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு. அமேஸில் BS-6 பெட்ரோல் வந்துவிட்டாலும், டீசல் இன்ஜின் இன்னும் அப்டேட் செய்யப்படவில்லை. ஏமியோ BS-6 விதிகளுக்கு மேம்படுத்தப்படாத அதே நேரத்தில், ஆஸ்யபரின் BS-6 மாடலை இன்னும் ஃபோர்டு விற்பனைக்குக் கொண்டுவரவில்லை. எனவே, டீசல் ஆட்டோமேட்டிக்/டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்ட காம்பேக்ட் செடான் வேண்டும் என்பவர்களுக்கான ஒரே தேர்வாக ஆரா திகழ்கிறது என்பதே நிதர்சனம்.

Aura
Aura
Autocar India
Aura Vs Rivals
Aura Vs Rivals
Autocar India
அடுத்த கட்டுரைக்கு